என் மலர்
நீங்கள் தேடியது "The foundation stone for the new building was laid"
- 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள்
- முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ரூ.10 லட்சம் செலவில் அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சோளிங்கர் சித்தூர் சாலையில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்களும், உறுப்பினர் ஏ எம் முன்னிரத்தினம் எம்.எல்.ஏ ஆகியோர் பள்ளியில் படித்ததின் நினைவாக இப்பள்ளியை தரம் உயர்த்தும் முயற்சியில் சுமார் பத்து லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டம் பணி நடைபெற்றது இதில் முன்னாள் மாணவர்கள் குழு சேர்ந்த செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணா லேப் திருமூர்த்தி மற்றும் டி.கோபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.






