என் மலர்
ராணிப்பேட்டை
- கதவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த புது ஒச்சலம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியவதி (வயது 56). சத்துணவு ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கி விட்டு, நேற்று காலை வீட் டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட் டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.5000 திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து பாக் கியவதி அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணத்தை திருடிச்சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- பங்குனி கிருத்திகையை முன்னிட்டு நடந்தது
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாலை சுப்ரமணிய சுவாமி, வள்ளி தேவசேனா சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
மங்கள வாத்தியங்களுடன் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் பாணாவரம், மகேந்திரவாடி, சாலை, காவேரிப்பாக்கம், நெமிலி சோளிங்கர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் சப் கலெக் டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அரக்கோ ணம், நெமிலி தாலுகாவை சேர்ந்த விஏஓகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
நெமிலி வட்ட தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். அரக் கோணம் வட்ட தலைவர் ராஜேஷ் பழைய திட்டத்தை வரவேற்றார். பென்ஷன் மீண்டும் கொண்டு வரவேண்டும்.
ஈட்டிய விடுப்புக்கான சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும். மேலும் பட்டம் முடித்த விஏஓ க்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் விஏஓகள் கொய்யாமணி, லட்சுமணன், டோமேசன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட விஏஓ க்கள் கலந்து கொண்டனர்.
- ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்தது
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
அரக்கோணம்:
அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண் டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை தொகுப்பு ஊதி யம், மதிப்பு ஊதியம் ஆகிய வற்றை மாற்றி அனைவருக் கும் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கவேண்டும், மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்,
- வளர்ச்சி பணிகள் குறித்து சோதனை
- பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதற்கான சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள் வதற்காக சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளை அகலப்படுத்தி, வடக்கு பகுதி நிலையம் வரை நீட்டிப்பு செய் வது, நடைமேடை மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் தலைவர் நைனா மாசிலாமணி மற்றும் பொது செயலாளர் குணசீலன் ஆகியோர் கோட்ட மேலாளர் கணேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் வடக்கு பகுதியில் உள்ள முகப்பு பகுதியின் நடைமேடைக்கு லிப்ட், அனைத்து நடைமேடைகளிலும் நகரும் படிகட்டுகள், நவீன கழிப்பறைகள் மற்றும் வடக்கு பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள இடத்தில் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.
- பைக்கை கார் சிறிது தூரம் இழுத்துச் சென்றது
- 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதி
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த திமிரியில் மெக்கானிக்காக வேலை செய்து வருபவர் பாஸ்கர் (வயது 30). இவர் நேற்று காலை ஆற்காடு பைபாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் ஒரமாக மோட் டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு கார் அவர் மீது மோதியது. இதில் பாஸ்கர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார், பாஸ்கரின் மோட்டார்சைக்கிளை சிறிது தூரம் இழுத்துச் சென்று நின்றது.
படுகாயமடைந்த பாஸ்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கரில் முடித்திருத்தும் தொழிலாளர் நல சங்கம் மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில துணைத்தலைவர் குமார், முடித்திருத்தும் தொழிலாளர் நல சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் ராஜா, பொருளாளர் பெருமாள் ஆகியோர் முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சித்த மருத்துவம் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள், மற்றும் முடித்திருத்தும் செய்வது எங்கள் சமூகத்தில் தொழிலானது.
இதில் நலிவுற்ற குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
எங்கள் சமூகத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தொழில் செய்ய கடனுதவி வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் தற்காலிகமாக நாதஸ்வரம், தவில் மற்றும் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு நிரந்தர பணி வழங்க வேண்டும். மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட முனிரத்தினம் எம்.எல்.ஏ. அரசுக்கு தெரியப்படுத்தி அதற்கு உண்டான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு முடிந்திருக்கும் தொழிலாளர் நலச் சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
- கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூர் அருந்ததி பாளை யம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது50). கூலித்தொ ழிலாளி. இவரது மனைவி ராதா (42). கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜா சம்பவத்தன்று அங்குள்ள ஏரி பகுதியில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக் கோணம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடன் தொல்லையால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாஷா (வயது 29) மெக்கானிக்கான இவர் தனது மனைவி பாத்திமா சோனாஸ் மற்றும் 2 மகள்க ளுடன் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தென்நந்தியாலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இவருக்கு போதுமான வருமானம் இல்லாததாலும், கடன் தொல்லை காரணத்தினாலும் நேற்று முன்தினம் இரவு வீட் டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்த தீர்மானம்
- கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாதாரன கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை கழிவுநீர் கால்வாய் சிறு கல்வெட்டு குடிநீர் பைப் லைன் விரிவாக்க பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும், கால்வாய் களை தூர்வார வேண்டும், ஊராட்சிகள் தோறும் கொசு மருந்து தெளிக்க வேண்டும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலர் அன்பரசி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் கட்ட கோரிக்கை வைத்தனர்.
இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், செங்கல்நத்தம் பிச்சாண்டி தலங்கை மாரிமுத்து மாரிமுத்து கொடைக்கல் கார்த்திக் வேங்கப்பட்டு ராமன்பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 5 நிலைகள் கொண்டதாக அமைக்கப்படுகிறது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 89 பரிவார மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆரோக்லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி உயரத்தில் 5நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை மிக பிரம்மாண்டமான முறையில் நேற்று முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இதற்கான பூர்வாங்க பூஜையாக சப்தகன்னிகள், நவகன்னிகைகள் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு பொங்கலிடுதல் வைபவம், சுமங்கலி பூஜை தன்வந்திரி மூலவருக்கு 108 கலச திருமஞ்சனம் நடைபெற்று பலவகையான வண்ண மலர்கள் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
முன்னதாக கணபதி பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டதிக் பாலகர் பூஜை, கூஷ்மாண்ட பூஜை, கோபூஜையுடன் தொடங்கி அகில இந்திய விஷ்ணு சகஸ்ர நாம பாராயண கலாசார கூட்டமைப்பைச் சேர்ந்த ஆண், பெண் உறுப்பினர்கள் சுற்று வட்ட நகர கிராம மக்கள், தன்வந்திரி குடும்பத்தி னர்கள், மற்றும் முக்கி யஸ்தர்கள் பங்கேற்று 1008 செங்கல் பூஜையுடன் பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி, ரத்தினகிரி பாலமுருகன டிமை ஸ்வாமிகள், சித்தஞ்சி மோகனானந்த ஸ்வாமிகள், 108 சக்தி பீடம் காமாட்சி ஸ்வாமிகள், லலிதாம்பிகை பீடம் பாலானந்த ஸ்வாமிகள், நெமிலி பாலாபீடம் கவிஞர் எழில்மணி ஸ்வாமிகள், வனதுர்கா பீடம் பிரசாத் ஸ்வாமிகள், பூமாத்தம்மன் பீடம் வடபாதி சித்தர் ஸ்வாமிகள், சரபேஸ்வரர் பீடம் ஞானபிரகாச ஸ்வாமிகள், திருத்தணி பாலாபீடம் யோகானந்த ஸ்வாமிகள், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி மற்றும் தொழிலதிபர்கள் ஜெ.லட்சுமணன், சரவணன், மகேந்திர வர்மன், திருப்பாற்கடல் சுந்தரம், டாக்டர். ரங்கராஜன் சென்னை, முன்னாள் காவல்துறை ஆணையர் அறிவுச்செல்வம் ஐ.பி.எஸ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். ஸ்ரீதரன் மற்றும் அனந்தலை ஊராட்சிமன்ற தலைவர் தேவகி மகா தேவன், துணைத்தலைவர் மீனா பெருமாள், அரசியல் பிரமுகர்கள் முரளி, சுரேஷ், வாலாஜாபேட்டை நகர கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு மாநில மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலச திருமஞ்சன வைபவத்துடன் மாபெரும் புஷ்பயாகம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் நேற்று மாலை வரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் விஷேச அருட் பிரசாதமும் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் வழங்கினார்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- சென்னையை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
நெமிலி:
சென்னை தண்டையார் பேட்டை பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்கிற மணிகண்டன் (வயது 24). எலக்ட் ீசியன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது சம்பத்ராயன் பேட்டையில் உள்ள தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத அஜித் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை.
உடனடியாக இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் அஜித்தை பிணமாக மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்கள் வீட்டிற்கு வந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






