search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை
    X

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 5நிலைக்கொண்ட ராஜகோபுரம் அமைக்க நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் முரளிதர ஸ்வாமிகள் பேசிய போது எடுத்த படம்.

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை

    • 5 நிலைகள் கொண்டதாக அமைக்கப்படுகிறது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 89 பரிவார மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆரோக்லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி உயரத்தில் 5நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை மிக பிரம்மாண்டமான முறையில் நேற்று முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.

    இதற்கான பூர்வாங்க பூஜையாக சப்தகன்னிகள், நவகன்னிகைகள் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு பொங்கலிடுதல் வைபவம், சுமங்கலி பூஜை தன்வந்திரி மூலவருக்கு 108 கலச திருமஞ்சனம் நடைபெற்று பலவகையான வண்ண மலர்கள் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

    முன்னதாக கணபதி பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டதிக் பாலகர் பூஜை, கூஷ்மாண்ட பூஜை, கோபூஜையுடன் தொடங்கி அகில இந்திய விஷ்ணு சகஸ்ர நாம பாராயண கலாசார கூட்டமைப்பைச் சேர்ந்த ஆண், பெண் உறுப்பினர்கள் சுற்று வட்ட நகர கிராம மக்கள், தன்வந்திரி குடும்பத்தி னர்கள், மற்றும் முக்கி யஸ்தர்கள் பங்கேற்று 1008 செங்கல் பூஜையுடன் பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வேலூர் நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி, ரத்தினகிரி பாலமுருகன டிமை ஸ்வாமிகள், சித்தஞ்சி மோகனானந்த ஸ்வாமிகள், 108 சக்தி பீடம் காமாட்சி ஸ்வாமிகள், லலிதாம்பிகை பீடம் பாலானந்த ஸ்வாமிகள், நெமிலி பாலாபீடம் கவிஞர் எழில்மணி ஸ்வாமிகள், வனதுர்கா பீடம் பிரசாத் ஸ்வாமிகள், பூமாத்தம்மன் பீடம் வடபாதி சித்தர் ஸ்வாமிகள், சரபேஸ்வரர் பீடம் ஞானபிரகாச ஸ்வாமிகள், திருத்தணி பாலாபீடம் யோகானந்த ஸ்வாமிகள், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி மற்றும் தொழிலதிபர்கள் ஜெ.லட்சுமணன், சரவணன், மகேந்திர வர்மன், திருப்பாற்கடல் சுந்தரம், டாக்டர். ரங்கராஜன் சென்னை, முன்னாள் காவல்துறை ஆணையர் அறிவுச்செல்வம் ஐ.பி.எஸ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். ஸ்ரீதரன் மற்றும் அனந்தலை ஊராட்சிமன்ற தலைவர் தேவகி மகா தேவன், துணைத்தலைவர் மீனா பெருமாள், அரசியல் பிரமுகர்கள் முரளி, சுரேஷ், வாலாஜாபேட்டை நகர கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு மாநில மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    அதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலச திருமஞ்சன வைபவத்துடன் மாபெரும் புஷ்பயாகம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் நேற்று மாலை வரை நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் விஷேச அருட் பிரசாதமும் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் வழங்கினார்.

    இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×