சோளிங்கர் வேடந்தாங்கல் சுப்பிரமணிய சாமி கோவிலில் சாமி ஊர்வலம்

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு நடந்தது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
சோளிங்கர் வேடந்தாங்கல் சுப்பிரமணிய சாமி கோவிலில் சாமி ஊர்வலம்
Published on

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மாலை சுப்ரமணிய சுவாமி, வள்ளி தேவசேனா சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

மங்கள வாத்தியங்களுடன் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் பாணாவரம், மகேந்திரவாடி, சாலை, காவேரிப்பாக்கம், நெமிலி சோளிங்கர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com