என் மலர்
உள்ளூர் செய்திகள்

முடி திருத்தும் தொழிலாளர்கள் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் மனு
- இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கரில் முடித்திருத்தும் தொழிலாளர் நல சங்கம் மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில துணைத்தலைவர் குமார், முடித்திருத்தும் தொழிலாளர் நல சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் ராஜா, பொருளாளர் பெருமாள் ஆகியோர் முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சித்த மருத்துவம் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள், மற்றும் முடித்திருத்தும் செய்வது எங்கள் சமூகத்தில் தொழிலானது.
இதில் நலிவுற்ற குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
எங்கள் சமூகத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தொழில் செய்ய கடனுதவி வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் தற்காலிகமாக நாதஸ்வரம், தவில் மற்றும் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு நிரந்தர பணி வழங்க வேண்டும். மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட முனிரத்தினம் எம்.எல்.ஏ. அரசுக்கு தெரியப்படுத்தி அதற்கு உண்டான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு முடிந்திருக்கும் தொழிலாளர் நலச் சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.