என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு வந்த அக்கட்சியின் தேசியச் செயலாளர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளார். அவர் கூறிய படி இந்த 50 நாட்களில் பணத்தட்டுப்பாடு நீங்காவிட்டாலும் அடுத்து வரும் 40 நாட்களில் கண்டிப்பாக பணத்தட்டுப்பாடு நீங்கி விடும்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெரிய அளவில் ஊழல் செய்து பணத்தை சேர்த்துள்ளனர். அந்த பணம் பறிபோய் விடுமோ என்ற எண்ணத்திலும் அவர்கள் செய்துள்ள தவறை மறைப்பதற்காகவே தற்போது மத்திய அரசு எடுத்துள்ள கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை விமர்சித்து வருகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தான் அ.தி.மு.க.வில் இருந்திருந்தால், தமிழக முதல்-அமைச்சராவேன் எனக் கூறிவருகிறார். மேலும் அவர் அ.தி.மு.க.விற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார். இதிலிருந்து கூடிய விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க.வில் இணைந்தார் என்ற செய்தி வரும்.
ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். பா.ஜ.க. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கடுமையாக போராடி வருகி றது. பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் பெறுவது வரை அனைத்திலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. அதை ஒழிப்பதற்காகவே பிரதமர் மோடி அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். டிஜிட்டல் மயமாகி விட்டால் நாட்டில் லஞ்சம் முற்றிலும் ஒழிந்து விடும்.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசியுள்ளார். அவர் செய்த தவறை மறைக்கவே நாடகமாடியுள்ளார். அவர்மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வரும் இங்கு அன்னதானத்திற்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த உண்டியல், இந்து சமய அறநிலையத்துறை வீர மாகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் கண்ணன் தலைமையில், ஆய்வாளர் பாரதி முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
அப்போது உண்டியலில் கடந்த மாதம் மத்திய அரசு செல்லாது என அறிவித்த 95 ஆயிரம் ரூபாய் நோட்டு உள்பட ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 761 இருந்தது. செல்லாத பணத்தாள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிக அளவில் ரூ.1,000 பணத்தாள் வைத்திருந்த யாரோ ஒரு பக்தர் 95 பணத்தாள்களை உண்டியலில் போட்டிருக்கலாம் என தெரிகிறது. கடந்த ஆண்டு இந்த அன்னதான உண்டியலில் ரூ.23 ஆயிரத்து 655 மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
அறந்தாங்கியை அடுத்த அரசர்குளத்தைச் சேர்ந்தவர் ஜபருல்லா. இவருக்கு சொந்தமான தரிசு நிலம் விஜயபுரம் பகுதியில் உள்ளது. இந்நிலையில் மாலை ஜபருல்லாவின் இடத்தில் கிடந்த மர்ம பொருள் ஒன்று திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது.
அந்த பொருள் வெடித்ததால், அந்த இடத்தின் அருகே உள்ள கருப்பையா என்பவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி சிதறியது. ஜன்னல் கண்ணாடி சிதறியதால், வீட்டின் உள்ளே இருந்த கருப்பையாவின் மனைவி காந்தி மற்றும் உறவினர்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.
இந்த விபத்தில் ஜன்னல் கண்ணாடி உடைந்தபோதிலும், வீட்டில் இருந்த யாருக்கும் அதிர்ஸ்டவசமாக காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன், அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அறந்தாங்கி அருகே மர்ம பொருள் வெடித்ததால் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலில் பால் ஊற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பேரணியும் நடைபெற்றது. இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி இன்று ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை. இதனால் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ரெயில் நிலையத்தில் ரெயில்வேபொது மேலாளர் வஹிஸ்டர ஜோகரிஆய்வு செய்தார். அப்போது திருமயம் ரெயில் நிலையத்தில் ராமேஸ்வரம் சென்னை எக்ஸ் பிரஸ்ரெயில் நின்று செல்லவேண்டும் என 108 பட்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் திருமயம் பைரவர் கோவில்அருகில் பிரிவு சாலை அமைக்கப்பட்டு தாமரைவயல், வேங்கைவயல், கணக்கன்வயல் வழியில் மணவாளன்கரை இளஞ்சாவூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் உட்பட20 கிராமங்களுக்கு செல்லும் சாலையின் இடையில் ஆளில்லா ரெயில்வே கிராசிங் உள்ளது. இதை கடந்துதான் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும். இதன் குறுக்கே தற்சமயம் ரெயில்வே துறையினரால் கம்பிவேலி அமைத்து போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர்வகை செய்தல், பின்பு கண்மாயிலிருந்து தண்ணீர் பாய்ச்சுதல் விளைச்சலுக்கு பின் அறுவடை செய்து வண்டி வாகனங்களில் எடுத்து செல்வதற்கு இந்த சாலை இருந்து வந்தது. இந்த சாலை தடுக்கப்பட்டதால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலைஉள்ளது. இதனால் விவசாயம் செய்ய இயலாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
என்வே இந்த சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவர நிரந்தர தீர்வு எற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் தங்கம் பதுக்கியதாக தமிழகத்தை சேர்ந்த காண்டிராக்டரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, கூட்டாளி பிரேம் ஆகியோரது வீடுகளில் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி 131 கோடி ரூபாய், 171 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவரது ஆதரவாளர்களான தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், அவரது சகோதரர் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோரும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள், அவருக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்கள் , தொழிலதிபர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வருமான வரித்துறையினரின் ரெய்டு பீதிக்கும் உள்ளாகினர்.
இந்நிலையில் இன்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ. அதிகாரிகள் 10 பேர் அடங்கிய குழுவினர் புதுக்கோட்டை வந்தனர். அவர்கள் நிஜாம் காலனி, கே.எல்.கே.எஸ். நகர் உள்ளிட்ட 4 இடங்களில் செயல்பட்டு வரும் ராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரி அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகளின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
கைதான ராமச்சந்திரன் முத்துப்பட்டினம் பகுதியில் தற்போது புதிதாக வேளாண்மை கல்லூரி ஒன்றை கட்டி வருகிறார். பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். அது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதி மானாவாரி பகுதியாகும். இப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக விவசாயம் பொய்த்து போனதால் விளை நிலங்கள் எல்லாம் கருவேல் மரங்கள் மண்டியும், மனையிடங்களாக மாறிவிட்டது.
ஆங்காங்கே கிணற்று பாசனம் மூலம் சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வறண்டு புல் பூண்டுகள் எல்லாம் காய்ந்து, ஆடு மாடுகள், விலங்குகள், பறவைகள், எல்லாம் தண்ணீரின்றி வாடிய நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் பொதுமக்களுக்கு ஆறுதல் அடைந்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் செந்தில்வேலன். இவர் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் செல்போன் விற்பனை மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி இரவு அவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையின் உள்ளே இருந்த ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 33 செல்போன்கள், ரீசார்ஜ் கார்டுகள், பென் டிரைவ்கள், செல்போன் உதிரி பாகங்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்து செந்தில்வேலன் கொடுத்த புகாரின்பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை கைது செய்யுமாறு நாகுடி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன் மேற்பார்வையில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நாகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று காலை நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் மனோக ரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி, தனிப் பிரிவு காவலர் அண்ணாத்துரை ஆகியோர் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் ஆவுடையார் கோவில் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகுடி பகுதியில் இருந்து இரண்டு வாலிபர்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த மோட்டார் சைக்கிளில் கம்பியை அறுக்கப்பயன்படும் கட்டர் இருந்தது. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விசாரித்தபோது அவர்கள் இருவரும் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள மஞ்சக்குடி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் நாகுடி நடந்த செல்போன் கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
உடனே அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களில் ஒருவர் ரமேஸ் என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் எனவும், மற்றொருவர் செல்வசரவணன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் எனவும் தெரிய வந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் செல்போன் கடையில் கொள்ளை அடித்துச் சென்ற ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
நாகுடி செல்போன் கடையில் கொள்ளை நடந்த 4 நாட்களுக்குள் துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்து, கொள்ளை போன பொருள்களை மீட்ட நாகுடி போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோக நாதன், அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தங்கம் பதுக்கியதாக தமிழகத்தை சேர்ந்த காண்டிராக்டரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, கூட்டாளி பிரேம் ஆகியோரது வீடுகளில் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி 131 கோடி ரூபாய், 171 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சேகர்ரெட்டி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவரது ஆதரவாளர்களான தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், அவரது சகோதரர் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதனால் முத்துப்பட்டினம் ராமச்சந்திரனின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டைக்கு நேற்று 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்து வந்தன. சிறிது நேரத்தில் கார்கள் அனைத்தும் அறந்தாங்கி நோக்கி சென்றன. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் தான் வந்துள்ளதாகவும், முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் வீட் டில் சோதனை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் பரவியது.
ஆனால் மாவட்டத்தில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை. பின்னர்தான் காரில் வந்தவர்கள் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோரி, மதுரை கோட்ட மேலாளர் சுனில் கார்க் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் என்பது தெரிய வந்தது.
ரெய்டு பீதி தற்காலிகமாக ஓய்ந்தாலும் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள், அவருக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ரெய்டு பீதியில் உள்ளனர். ராமச்சந்திரன் மணல் குவாரி மட்டுமின்றி பல நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
அதுமட்டுமின்றி சேகர் ரெட்டியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த ராமச்சந்திரன் முறைகேடாக பல கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.
மேலும் சேகர் ரெட்டி இல்ல சுப நிகழ்ச்சிக்காக புதுக்கோட்டையில் இருந்து சமையல் உள்ளிட்ட பணிகளுக்காக 200 பேர் அ.தி.மு. க. பிரமுகரால் அழைத்து செல்லப்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது 2 மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்பு உள்ளிட்ட பல பணிகளுக்காக 400 இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களும் ரெய்டு பீதியில் உள்ளனர்.
மேலும் புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் ராஜகோபாலபுரத்தில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டை முக்கிய புள்ளி ஒருவர் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு எதுவும் வீடுகள், மனைகள் உள்ளதா? என்றும் ரகசிய விசாரணை நடந்து வருகிறது.
கைதான ராமச்சந்திரன் முத்துப்பட்டினம் பகுதியில் தற்போது புதிதாக வேளாண் கல்லூரி ஒன்றை கட்டி வருகிறார். பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். அது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் மற்றும் பினாமிகள் திருச்சி-கரூர் மாவட்டங்களில் மணல் குவாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய தகவலை அறிந்ததும், கூட்டாளிகள், பினாமிகள் அனைவரும் தங்களது மணல் குவாரிகள் மற்றும் அலுவலகங்களை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் உள்ள இந்திரா நகரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை சிட்டி லயன்ஸ் சங்கத்தலைவர் டாக்டர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
துர்க்கா அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் செல்வக் குமார், கருப்பசாமி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
இதில் சிட்டி லயன்ஸ் சங்க செயலர் செல்வம், நிர்வாகிகள் பாலமுரளி, பாலசுப்பிரமணியன், சிவக் குமார், ரவிச்சந்திரன், முன்னாள் வார்டு கவுன்சிலர் தியாகு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் துர்க்கா அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தினர் செய்திருந்தனர்.
திருவரங்குளத்தில் உள்ள ஒரு வங்கியின் வெளியே பணம் எடுக்க நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். அப்போது வங்கி அதிகாரிகள் பணம் குறைவாக உள்ளது. மேலும் வங்கியின் சர்வரின் இணைப்பும் கிடைக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்க முடியாது என கூறினார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியின் முன்பு உள்ள புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கத்தலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60), விவசாயி. இவர்களுக்கு நாகம்மாள்(55), தெய்வானை என்ற 2 மனைவிகள். இருவரும் சகோதரிகள். இதில் நாகம்மாளுக்கு 3 மகன்கள், 2 மகள்களும், தெய்வானைக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நாகம்மாளின் மகன் அய்யருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்துஅவர் தனது மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பதற்காக கருப்பையாவிடம் ரேஷன் கார்டை கேட்டுள்ளார். மேலும் நாகம்மாளும் தனது மகனுக்கு ஆதரவாக பேசி, ரேஷன் கார்டை வழங்குமாறு கூறியுள்ளார். ஆனால் கருப்பையா ரேஷன் கார்டை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கும், அவரது மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவியுடனும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்றிரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நாகம்மாள் மீது கருப்பையாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இன்று காலை நாகம்மாள் 100 நாள் திட்ட வேலைக்காக வீரம்பட்டி பகுதியில் உள்ள தோட்டம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருப்பையா, தான் வைத்திருந்த மண்வெட்டியால் நாகம்மாளின் தலையை வெட்டினார். இதில் நாகம்மாளின் தலை துண்டானதோடு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸ் டி.எஸ்.பி. தமிழ்செல்வன் மற்றும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவனே வெட்டிக்கொன்ற சம்பவம் விராலிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






