என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் வேளாண்மைத்துறையின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

    தமிழக அரசு வேளாண் மைத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.  இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் வட்டாரத்தில் ஆயிங்குடியில் வேளாண்மை துறையின் மாவட்ட நீர்வடிப்பகுதி முகமை சார்பில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் 8- வது தொகுதியின் கீழ் ரூ.20000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கிணறு புனரமைத்தல் பணியையும், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட குளத்தின் பணியையும், மதியநல்லூரில் ரூ.60000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் செறிவூட்டும் அமைப்பு பணியையும், ரூ.20000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கிணறு புனரமைத்தல் பணியையும் என மொத்தம் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

    இந்த ஆய்வின் போது குளங்களில் மழைநீர் சரியாக வரும் வகையில் வரத்து வாரிகளை தொடர்ந்து சீரமைத்து பராமரிக்கவும், கிணறுகளை உரிய முறையில் பயன்படுத்தவும், மேலும் நடைபெறும் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.
    அரசு வாரிய தேர்வில் மூன்று துறைகளில் மாவட் டத்தில் முதலிடம் பெற்ற செந்தூரான் பல் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களை மாவட்ட கலெக்டர் கணேஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு வாரிய தேர்வில் மூன்று துறைகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற செந்தூரான் பல் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்களை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், லேணாவிலக்கில் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இக்கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் பயிலும் மாணவன் சிவசுப்பிரமணியன் அக்டோபர் 2016ல் நடந்த அரசு வாரியத் தேர்வில் 700-க்கு 678 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். 

    இதேபோல் இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை மாணவன் ஆ.சீனிவாசன் 700-க்கு 677 மதிப்பெண்களும்,  இரண்டாமாண்டு துறை மாணவன் சிவகுமார் 700-க்கு 677 மதிப்பெண்களும் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.   
    மேலும் முதலாமாண்டு பயிலும் மாணவன்சூர்யா 800க்கு 780 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.  இதே போன்று மூன்றாமாண்டு அமைப்பியல் துறை மாணவன் அழகேசன் 700-க்கு 675 மதிப்பெண்கள் பெற்று கல்லூரிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 62 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100மதிப்பெண் பெற்றுள்ளனர். 

    இவ்வாறு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன் தொடர்ந்து சிறப்பாக கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

    நிகழ்ச்சியில் செந்தூரான் கல்விக்குழும தலைவர் வயிரவன், துணைத்தலைவர்  நடராஐன், முதன்மை செயல் அலுவலர்கார்த்திக், கல்லூரி முதல்வர் செல்வராஜ், ஆட்டோமொபைல் துறைத் தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    திருமயம் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    கீரனூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் காரில் திருமயம் அருகே உள்ள அழகாபுரியில் பயிற்சிக்காகசென்று விட்டு கீரனூர் திரும்பி கொண்டிருந்தனர். கப்பத்தான்பட்டி அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் வேன் காரில் பின்னால் மோதி  சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த திருமயம காவல்துறையினர் சம்பவ இட்த்திற்க்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் புதுக்கோட்டை மதுரை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைப்பிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை மீன்வளத்துறை அலுவலக அனுமதியுடன் 180 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    இதில் முத்துக்குமரன் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மணிகண்டன் (வயது 37), ராஜேந்திரன் (21), மணி (50), கலியமூர்த்தி (20), பிரபு (15), விஜயேந்திரன் என்பருக்கு சொந்தமான படகில் கோவிந்தன் (50), குணா (40), கார்த்திக் (20), சுதன் (21), அழகேசன் (19) ஆகிய 10 பேரும் வலைகளை விரித்து மீன்களுக்காக காத்திருந்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது. அதிலிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் புதுக் கோட்டை மீனவர்களிடம் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க உங்களுக்கு என்ன தைரியம் என்று கூறி மிரட்டினர்.

    பின்னர் அவர்கள் 10 பேரையும் இரண்டு விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர். இன்று பிற்பகல் அவர்கள் 10 பேரும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    அதன்பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரியவரும்.

    ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 51 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். நட்புறவு கருதி மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்தது. மீனவர்களை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசு தரப்பிலிருந்து பரிந்துரை கடிதமும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.

    கொழும்புவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த இருநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் 51 மீனவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். மேலும் 122 விசைப் படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

    எனவே இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் உள்ள மீனவர்கள் 51 பேரும் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கணேஷ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது:-

    பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல் கோரி 9 மனுக்களும், விலையில்லா வீட்டு மனை பட்டா வேண்டி 17 மனுக்களும், புதிய குடும்ப அட்டை கோரி 12 மனுக்களும், காவல்துறை நடவடிக்கைக்காக 9 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 12 மனுக்களும், பசுமை வீடு, சாலை வசதி, குடிநீர்வசதி கோரி 46 மனுக்களும், கல்வி உதவித்தொகை கோரி 1 மனுவும், முதியோர் உதவித்தொகை கோரி 11 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக 11 மனுக்களும், இதர கோரிக்கைக்காக 106 மனுக்களும் என மொத்தம் 234 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், குளத்தூர் வட்டத்தை சேர்ந்த 44 பயனாளிகளுக்கு தலா ரூ.90347 என மொத்தம் ரூ.3975268 மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களுக்கான ஆணைகளும் என பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .

    இவ்வாறு கலெக்டர கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்அ.ராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    அரிமளம் அருகே மின் மோட்டாரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து நீர் மூழ்கி மோட்டாரை பறிதல் செய்தனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை அருகேயுள்ள சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்(வயது29). இவர் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பைப்லயன்(குழாய்) பதிக்கும் ஒப்பந்தகாரராக பணியாற்றி வருகிறார். அரிமளம் அருகேயுள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர் தேக்க தொட்டியில் நீர் முழ்கி மோட்டாரை பொறுத்தி உள்ளார்.

    இந்நிலையில் நீர் தேக்க தொட்டியில் அமைக்கப்பட்டிருந்த நீர் முழ்கி மோட்டாரை காணவில்லை. இது குறித்து அரிமளம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அரிமளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில் அகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் பழனிச்சாமி(வயது 29) பெருங்குடி அருகேயுள்ள பாப்பான்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் சரவணன்(வயது 24) ஆகியோர் நீர் முழ்கி மோட்டாரை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த நீர் முழ்கி மோட்டாரை பறிமுதல் செய்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
    அறந்தாங்கி அருகே சிறையில் இருந்து கைதி தப்பி யோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பகாடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 49). இவர் மீது அறந்தாங்கி, நாகுடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக குமாரை போலீசார் கைது செய்து, அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர். நேற்று காலை சாப்பிடுவதற்காக லாக்கப்பில் இருந்து வெளியே வந்த குமார், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு திடீரென அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரை போலீசார் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து அவரது சொந்த ஊர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து நேற்றிரவு அறந்தாங்கி கிளை சிறை சார்பில் அறந்தாங்கி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் எங்கு தப்பி சென்றார் என்று விசாரணை நடத்தி, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிறையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைதி தப்பி சென்றதால் சிறை காவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
    புதுக்கோட்டை அருகே தடையை மீறி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் காளைகளை அடக்கினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ளது மலம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப்புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

    அதேபோல இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்டமானது நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தொடங்கியது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது

    இதில் மலம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சவேரியார் ஆலயத்தில் நேற்று காலை ஊர்மக்கள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    இதேபோல் புத்தாண்டையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஐகோர்ட்டு தடை உத்தரவால் கடந்த ஆண்டு இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஆனால் நேற்று ஐகோர்ட்டு தடையையும் மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக்காளைகள் கொண்டு வரப்பட்டன. அந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்து சென்ற போது இளைஞர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.

    திடீரென்று நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரிமளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கீழாநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படும் மருந்து பொருட்களையும், மற்றொரு அறையை தயாரிக்கப்பட்ட வெடிகளை சேமித்து வைக்கும் கிடங்காகவும் பயன்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று கீழாநிலைக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45), வெள்ளையம்மாள் (32) ஆகிய தொழிலாளிகள் வெடிமருந்து கிடங்கில் இருந்து வெடிமருந்து நிரப்பிய பெட்டியை தூக்கிக்கொண்டு வெடி தயாரிக்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது பெட்டி கை தவறி கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதனால் வெடி வைத்திருக்கும் கிடங்கில் தீப்பிடித்து, அதில் இருந்த வெடிகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இச்சம்பவத்தில் ஆறுமுகம், வெள்ளையம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். மேலும் அங்கு இருந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் குணசேகரனின் மனைவி மல்லிகா (45), இவர்களது மகள் விஜயலட்சுமி (30), அவருடைய மகன் கிஷோர் (3), மற்றும் செல்வி (43), ஜெயலட்சுமி (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    விராலிமலை அருகே உள்ள அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 55) கூலித் தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் அவர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே நெற்பயிர்கள் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏகனிவயல் பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 64). இவரது மனைவி ரோஜாமாணிக்கம். இவர்களுக்கு பிலோமின் ராஜ், சேவியர் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    ஞானசுந்தரத்திற்கு சொந்தமாக அப்பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் குத்தகைக்கு 3 ஏக்கர் நிலம் எடுத்திருந்தார். அதில் அவர் நெல் பயிரிட்டு வந்தார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து நேரடி நெல் விதைப்பு முறையில் பயிர் செய்தார். ஆனால் போதிய மழை இல்லாததாலும், காவிரி தண்ணீர் கிடைக்காததாலும் அவர் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் கருகின. இதனால் அவர் மிகவும் மனமுடைந்தார். மேலும் இது பற்றி தனது மனைவி, மகன்களிடமும், உறவினர்களிடமும் கூறி வந்தார்.

    இந்நிலையில் ஞான சுந்தரம் தனது வயலில் மாடுகள் மேயாமல் இருப்பதற்காக நேற்று மாலை வயலுக்கு சென்று பார்த்தார். அப்போது திடீரென அங்கு சுருண்டு விழுந்தார். உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசுந்தரம் இறந்தார். நெற்பயிர்கள் கருகியதால் மனமுடைந்து இருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெற்பயிர்கள் கருகியதன் காரணமாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகும் சம்பவங்களும், தற்கொலை செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கியில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரு.10 லட்சம் வழங்க வேண்டும். வறட்சியால் கருகிப்போன நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு ரூ.15 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

    பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை 200 நாட்களாக விரிவுபடுத்தி ரூ.300 கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.லாசர் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ராஜசேகரன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சங்கத்தலைவர்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துப் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்திய சங்கத் தலைவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை முறைப்படி அரசுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். அதற்கு நன்றி தெரிவித்த சங்க நிர்வாகிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை காத்திருக்கும் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துவிட்டு வந்தனர்.

    ×