என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னவாசல் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
    X

    அன்னவாசல் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் வேளாண்மைத்துறையின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

    தமிழக அரசு வேளாண் மைத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.  இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் வட்டாரத்தில் ஆயிங்குடியில் வேளாண்மை துறையின் மாவட்ட நீர்வடிப்பகுதி முகமை சார்பில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் 8- வது தொகுதியின் கீழ் ரூ.20000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கிணறு புனரமைத்தல் பணியையும், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட குளத்தின் பணியையும், மதியநல்லூரில் ரூ.60000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் செறிவூட்டும் அமைப்பு பணியையும், ரூ.20000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கிணறு புனரமைத்தல் பணியையும் என மொத்தம் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

    இந்த ஆய்வின் போது குளங்களில் மழைநீர் சரியாக வரும் வகையில் வரத்து வாரிகளை தொடர்ந்து சீரமைத்து பராமரிக்கவும், கிணறுகளை உரிய முறையில் பயன்படுத்தவும், மேலும் நடைபெறும் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.
    Next Story
    ×