என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவரங்குளத்தில் வங்கியில் பணம் குறைவாக வழங்குவதை கண்டித்து வாடிக்கையாளர்கள் சாலை மறியல்
    X

    திருவரங்குளத்தில் வங்கியில் பணம் குறைவாக வழங்குவதை கண்டித்து வாடிக்கையாளர்கள் சாலை மறியல்

    பணம் குறைவாக வழங்குவதை கண்டித்து வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1/2 மனி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    திருவரங்குளம்:

    திருவரங்குளத்தில் உள்ள ஒரு வங்கியின் வெளியே பணம் எடுக்க நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். அப்போது வங்கி அதிகாரிகள் பணம் குறைவாக உள்ளது. மேலும் வங்கியின் சர்வரின் இணைப்பும் கிடைக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்க முடியாது என கூறினார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியின் முன்பு உள்ள புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×