என் மலர்

  செய்திகள்

  அறந்தாங்கி அருகே மர்மபொருள் வெடித்து வீட்டின் கண்ணாடி சிதறியது: போலீசார் விசாரணை
  X

  அறந்தாங்கி அருகே மர்மபொருள் வெடித்து வீட்டின் கண்ணாடி சிதறியது: போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அறந்தாங்கி அருகே மர்மபொருள் வெடித்தது, அருகே உள்ள வீட்டின் ஜன்னல் கண்ணாடி சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  அறந்தாங்கி:

  அறந்தாங்கியை அடுத்த அரசர்குளத்தைச் சேர்ந்தவர் ஜபருல்லா. இவருக்கு சொந்தமான தரிசு நிலம் விஜயபுரம் பகுதியில் உள்ளது. இந்நிலையில் மாலை ஜபருல்லாவின் இடத்தில் கிடந்த மர்ம பொருள் ஒன்று திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது.

  அந்த பொருள் வெடித்ததால், அந்த இடத்தின் அருகே உள்ள கருப்பையா என்பவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி சிதறியது. ஜன்னல் கண்ணாடி சிதறியதால், வீட்டின் உள்ளே இருந்த கருப்பையாவின் மனைவி காந்தி மற்றும் உறவினர்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.

  இந்த விபத்தில் ஜன்னல் கண்ணாடி உடைந்தபோதிலும், வீட்டில் இருந்த யாருக்கும் அதிர்ஸ்டவசமாக காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன், அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

  அறந்தாங்கி அருகே மர்ம பொருள் வெடித்ததால் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×