என் மலர்
செய்திகள்

திருமயம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ரெயில் நிலையத்தில் ரெயில்வேபொது மேலாளர் வஹிஸ்டர ஜோகரிஆய்வு செய்தார்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ரெயில் நிலையத்தில் ரெயில்வேபொது மேலாளர் வஹிஸ்டர ஜோகரிஆய்வு செய்தார். அப்போது திருமயம் ரெயில் நிலையத்தில் ராமேஸ்வரம் சென்னை எக்ஸ் பிரஸ்ரெயில் நின்று செல்லவேண்டும் என 108 பட்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் திருமயம் பைரவர் கோவில்அருகில் பிரிவு சாலை அமைக்கப்பட்டு தாமரைவயல், வேங்கைவயல், கணக்கன்வயல் வழியில் மணவாளன்கரை இளஞ்சாவூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் உட்பட20 கிராமங்களுக்கு செல்லும் சாலையின் இடையில் ஆளில்லா ரெயில்வே கிராசிங் உள்ளது. இதை கடந்துதான் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும். இதன் குறுக்கே தற்சமயம் ரெயில்வே துறையினரால் கம்பிவேலி அமைத்து போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர்வகை செய்தல், பின்பு கண்மாயிலிருந்து தண்ணீர் பாய்ச்சுதல் விளைச்சலுக்கு பின் அறுவடை செய்து வண்டி வாகனங்களில் எடுத்து செல்வதற்கு இந்த சாலை இருந்து வந்தது. இந்த சாலை தடுக்கப்பட்டதால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலைஉள்ளது. இதனால் விவசாயம் செய்ய இயலாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
என்வே இந்த சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவர நிரந்தர தீர்வு எற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story