என் மலர்
செய்திகள்

உண்டியல் எண்ணும் பணி நடைபெற்ற காட்சி
அறந்தாங்கி கோவில் உண்டியலில் பக்தர் செலுத்திய 95 பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
அறந்தாங்கி கோவில் உண்டியலில் செல்லாத ஆயிரம் ரூபாய் பணத் தாள்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வரும் இங்கு அன்னதானத்திற்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த உண்டியல், இந்து சமய அறநிலையத்துறை வீர மாகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் கண்ணன் தலைமையில், ஆய்வாளர் பாரதி முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
அப்போது உண்டியலில் கடந்த மாதம் மத்திய அரசு செல்லாது என அறிவித்த 95 ஆயிரம் ரூபாய் நோட்டு உள்பட ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 761 இருந்தது. செல்லாத பணத்தாள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிக அளவில் ரூ.1,000 பணத்தாள் வைத்திருந்த யாரோ ஒரு பக்தர் 95 பணத்தாள்களை உண்டியலில் போட்டிருக்கலாம் என தெரிகிறது. கடந்த ஆண்டு இந்த அன்னதான உண்டியலில் ரூ.23 ஆயிரத்து 655 மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story