என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவரங்குளம் பகுதியில் திடீர் மழை
    X

    திருவரங்குளம் பகுதியில் திடீர் மழை

    திருவரங்குளம் பகுதியில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதி மானாவாரி பகுதியாகும். இப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக விவசாயம் பொய்த்து போனதால் விளை நிலங்கள் எல்லாம் கருவேல் மரங்கள் மண்டியும், மனையிடங்களாக மாறிவிட்டது.

    ஆங்காங்கே கிணற்று பாசனம் மூலம் சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வறண்டு புல் பூண்டுகள் எல்லாம் காய்ந்து, ஆடு மாடுகள், விலங்குகள், பறவைகள், எல்லாம் தண்ணீரின்றி வாடிய நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் பொதுமக்களுக்கு ஆறுதல் அடைந்தனர்.
    Next Story
    ×