என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் மணி என்ற இடிமணி(வயது 31). இவரை கடந்த 16-ந் தேதி 4 பேர் வெட்டிக்கொலை செய்தனர். இது தொடர்பாக அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அறந்தாங்கியை சேர்ந்த குலாம்மைதீன்(24) திருமயம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சேக் அப்துல்லா உள்பட 3 பேரை அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குலாம்மைதீனின் அண்ணன் சேக்அப்துல்லா(40), சர்புதீன்(26), விஜய்(22) ஆகிய 3 பேரையும் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கைது செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, வயல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுக்கோட்டை:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்து வைத்தார்.
இதையடுத்து 16-ந் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தடைந்தது.
மேற்பனைக்காடு கிராமத்தில் விவசாயிகள் மலர், விதைகள் தூவி கற்பூரம் ஏற்றி வணங்கி தண்ணீரை வரவேற்றனர். நேற்று காலை நாகுடிக்கு தண்ணீர் குறைந்த அளவு சென்றுள்ளது. அங்கும் விவசாயிகள் தண்ணீரை வரவேற்றனர். தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து சுமார் 300 கன அடி வரை புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை - தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வேம்பங்குடி கிழக்கு கிராமத்தில் உள்ள கல்லணை கால்வாய் கரையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற கிராம மக்கள், விவசாயிகள் உடைப்பை சரி செய்யும்விதமாக தடுப்பு கட்டைகள் அமைத்து மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளும் ஒப்பந்த ஊழியர்களுடன் வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தண்ணீர் வேகமாக வந்ததால் மேலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதியில் தண்ணீரின் வரத்து அளவை குறைத்தனர். இருப்பினும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் சென்றது. சுமார் 50 பேருக்கு மேல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டநிலையில், மதியத்திற்கு பிறகு தடுப்புக்கட்டைகள் அமைத்து மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தொடங்கியபோது தடுப்புக்கட்டைகள் உடைந்து, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் மீண்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மண், மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணும் கொண்டு வந்து கொட்டப்பட்டது. சீரமைப்பு பணிகளை பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காலை 6 மணி முதல் சீரமைப்பு பணி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டு, கிராவல் மண் கொட்டப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வயல் அருகே ஏற்பட்ட உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் ஆண்டாகோட்டை ஏரி, பின்னவாசல் ஏரிகளில் நிரம்பியுள்ளது. ஆனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்த குட்டைக்கு தண்ணீர் செல்லவில்லை.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்து வைத்தார்.
இதையடுத்து 16-ந் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தடைந்தது.
மேற்பனைக்காடு கிராமத்தில் விவசாயிகள் மலர், விதைகள் தூவி கற்பூரம் ஏற்றி வணங்கி தண்ணீரை வரவேற்றனர். நேற்று காலை நாகுடிக்கு தண்ணீர் குறைந்த அளவு சென்றுள்ளது. அங்கும் விவசாயிகள் தண்ணீரை வரவேற்றனர். தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து சுமார் 300 கன அடி வரை புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் சென்று கொண்டிருந்தது.

ஆனால் தண்ணீர் வேகமாக வந்ததால் மேலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதியில் தண்ணீரின் வரத்து அளவை குறைத்தனர். இருப்பினும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் சென்றது. சுமார் 50 பேருக்கு மேல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டநிலையில், மதியத்திற்கு பிறகு தடுப்புக்கட்டைகள் அமைத்து மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தொடங்கியபோது தடுப்புக்கட்டைகள் உடைந்து, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் மீண்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மண், மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணும் கொண்டு வந்து கொட்டப்பட்டது. சீரமைப்பு பணிகளை பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காலை 6 மணி முதல் சீரமைப்பு பணி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டு, கிராவல் மண் கொட்டப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வயல் அருகே ஏற்பட்ட உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் ஆண்டாகோட்டை ஏரி, பின்னவாசல் ஏரிகளில் நிரம்பியுள்ளது. ஆனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்த குட்டைக்கு தண்ணீர் செல்லவில்லை.
கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
கோட்டைப்பட்டினம்:
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவார்கள். தற்போது பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளி மாவட்டங்களில் இருந்து கோட்டைப்பட்டினத்தில் தங்கி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்காக மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் வாங்க வரும் மீனவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடலின் வெப்பநிலையை பரிசோதனை செய்து ரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது. இதில் ஒரே நாளில் 320 மீனவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதே போன்று வரும் நாட்களிலும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்களுக்கும் இதேபோன்று பரிசோதனை செய்து கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்ராம், மீன்வள ஆய்வாளர் பாஸ்கர், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலெட்சுமி, கடலோர பாதுகாப்பு குழும சார் ஆய்வாளர் ராஜ்குமார், மீன்வள சார் ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 8 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு புதுக்கோட்டையில் அதிகரித்து வருகிற நிலையில் கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் நேற்று வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் முருகப்பன், டவுன் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மோட்டார் பம்புகள் விற்பனை செய்யும் கடை, செல்போன் கடை, இனிப்பக கடை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாதது, பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் கடையின் உள்ளே இருந்ததை கண்டனர்.
இதையடுத்து அரசின் விதிமுறைகளை பின்பற்றாத அந்த கடைகளின் ஷட்டர்களை இழுத்து மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். நேற்று நடந்த ஆய்வில் மொத்தம் 8 கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என்றனர்.
கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்து வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. கடைகளில் வாடிக்கையாளர்கள், உரிமையாளர்கள், பணியாளர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. ஆனால் புதுக்கோட்டையில் கடை வீதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலானோர் அரசின் விதிமுறைகளை பின்பற்றிய நிலையில் சிலர் இதனை பொருட்படுத்தாமலே உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றினால் தான் அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில் அதிகாரிகளும் அவ்வப்போது கடைவீதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு புதுக்கோட்டையில் அதிகரித்து வருகிற நிலையில் கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் நேற்று வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் முருகப்பன், டவுன் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மோட்டார் பம்புகள் விற்பனை செய்யும் கடை, செல்போன் கடை, இனிப்பக கடை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாதது, பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் கடையின் உள்ளே இருந்ததை கண்டனர்.
இதையடுத்து அரசின் விதிமுறைகளை பின்பற்றாத அந்த கடைகளின் ஷட்டர்களை இழுத்து மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். நேற்று நடந்த ஆய்வில் மொத்தம் 8 கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என்றனர்.
விராலிமலை மற்றும் கீரனூர் பகுதிகளில் நாளை மின்சார வினியோகம் இருக்காது.
விராலிமலை:
விராலிமலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விராலிமலை மற்றும் வடுகபட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப் பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர், விராலிமலை, ராஜாளிப்பட்டி, கொடும்பாளுர்,கோமங்களம், தேன்கனியூர், சீத்தப்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, செவனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கீரனூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குளத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர், குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், பிரகதம்பாள்புரம், சத்தியமங்களம், முத்துகாடு, காவேரிநகர், திருமலைராயபுரம், உப்பிலியக்குடி, தாயினிப்பட்டி, விளத்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் கறம்பக்குடிக்கு வந்தடைந்தது. விவசாயிகள் மலர் தூவி வரவேற்று வணங்கினார்கள்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகளாகும். கல்லணை கால்வாயிலிருந்து தண்ணீர் உழவயல் வாய்க்கால் மூலம் கறம்பக்குடி ஒன்றிய பகுதியை வந்தடையும். இதன் மூலம் கலியரான்விடுதி, காட்டாத்தி, முதலிப்பட்டி, குளத்திரான்பட்டு, கிளாங்காடு, ராங்கியன்விடுதி உள்ளிட்ட 10 ஊராட்சி பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இதன் மூலம் டெல்டா பகுதி விவசாயிகள் 2 போகம் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக அரசு தண்ணீர் திறக்காதது, பருவ மழை தவறியது போன்ற காரணங்களால் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட வில்லை. இதனால் டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்தது. அங்கிருந்து கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் கறம்பக்குடி ஒன்றியம் கலியரான்விடுதி பகுதிக்கு நேற்று வந்தடைந்தது. முன்னதாக ஆற்றில் தேங்காய் உடைத்து தீபம் காட்டி வழிபட்டனர்.
தொடர்ந்து நுரை தள்ளியபடி உருண்டோடி வந்த காவிரி தண்ணீரை மலர் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- “நடந்தாய் வாழி காவிரி” என புலவர்களால் போற்றி புகழப்படும் காவிரி தண்ணீர் உரிய நேரத்தில் திறந்து விடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. உழவியர் கிளை வாய்க்கால் மூலமே கறம்பக்குடி பகுதி விவசாயிகள் பாசன வசதி பெற முடியும். எனவே கடைமடை பகுதி விவசாயிகளும் பயன் பெறும் வகையில், அனைத்து கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்க வேண்டும். கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள டெல்டா பாசன ஊராட்சிகளில் பாசன குளங்கள் அனைத்தையும் சீரமைத்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளோம். எனவே அனைத்து குளங்களும் நிரம்பும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வந்தடைந்தது. மேற்பனைக்காடு கிராமத்தில் கால்வாயில் வந்த தண்ணீருக்கு மலர்கள், நவதானிய விதைகள், பழங்களுடன் வரவேற்பு கொடுத்த விவசாயிகள், இளைஞர்கள் கற்பூரம் ஏற்றி வணங்கி வரவேற்றனர். அதே போல பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மலர் தூவி வரவேற்றனர்.

முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சீனிக்கடை முக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டு, அறிவுரை கூறப்பட்டது.
புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு 107 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் கொரோனா பாதித்தவர்களின் பட்டியலில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் 3-ம் வீதியில் 30 வயது வாலிபர் ஒருவருக்கும், காமராஜ் நகரை சேர்ந்த 32 வயது ஆண், அனவயலை சேர்ந்த 20 வயது இளம்பெண், மலைக்குடிப்பட்டியை சேர்ந்த 29 வயது ஆண், 4 வயது சிறுமி, வெண்ணாவல்குடியை சேர்ந்த 24 வயது இளம்பெண், 30 வயது வாலிபர், குளவாய்பட்டியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.
கொரோனா பாதித்த அனைவரும் சிகிச்சைக்காக ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. இதில் 49 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். 56 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் 3-ம் வீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசித்த பகுதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொற்று பாதித்த நபரின் வீட்டை சுற்றி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் தம்பிதுரை ஆகியோர் மேற்பார்வையில், வட்டார சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் அந்தந்த பகுதி சுகாதார துறை அலுவலர்கள், செவிலியர்கள் அவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.
சென்னையில் இருந்து திருமயம் பாப்பாவயல் பகுதிக்கு வந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரது உறவினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரின் ரத்தம் மற்றும் சளி மாதிரியை சுகாதாரத்துறையினர் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதால் திருமயம் பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வடகாடு அருகேயுள்ள அனவயல் எல்.என்.புரத்தில் சென்னையில் இருந்து வந்த இளம்பெண்ணுக்கு புதிதாக கொரோனா தொற்று
ஏற்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பெண்ணின் உறவினர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர், நமணசமுத்திரம், கடியாபட்டி, ராயவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்னையில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் கடியாபட்டி மாமரத்தான் வீதியை சேர்ந்த 35 வயது பெண்ணிற்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி அப்பகுதியில் சுகாதார துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரையூர் ஊராட்சி பகுதியில் சென்னையில் இருந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிய வந்ததை தொடர்ந்து ஊராட்சி தலைவர் முகமது இக்பால், துணைத்தலைவர் அடைக்கன் ஆகியோர் 19 மற்றும் 20-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
கீரமங்கலம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன் சாலைகளும் மூடப்பட்டது. அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இதில் 42 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சென்னையில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பொன்னமராவதி, ஏம்பல், ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் கோவையில் தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் கறம்பக்குடி அருகே உள்ள கொங்கரகோட்டை கிராமத்தை சேர்ந்த 29 வயது வாலிபர் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வீட்டில் தனிமையில் இருந்தார். இந்நிலையில் அந்த வாலிபரை சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கொரோனா அறிகுறி குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இதில் 42 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர். 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வெட்டுகள், நினைவு சின்னங்கள், புதைவிடங்கள் அதிகளவில் உள்ளன. இதற்கு உதாரணமாக, பல ஆண்டுகளை கடந்த பொற்பனைக்கோட்டையை சொல்லலாம். அதேபோல, பழமையான கற்கோடாரி, குறியீடுகளுடன் கூடிய கருப்பு சிவப்பு மண் பாண்டங்கள், குடுவைகள். முதுமக்கள் தாழிகள், நிறைந்துள்ள வில்வன்னி ஆற்றங்கரையில் உள்ள மங்களநாடு வடக்கு அம்பலத் திடலை கூறலாம். மேலும், திருமயம் அருகில் உள்ள மலையடிப்பட்டியில் கற்காலத்தை சேர்ந்த கல் பதுக்கைகள், கல்வட்டங்கள் காணப்படுகிறது. கண்ணனூரில் நெடுங்கல் காணப்படுகிறது. குடுமியான்மலை, திருமயத்தில் செங்கோட்டு ஓவியங்கள், மலையடிப்பட்டி பாறை கிண்ணங்கள் இதையெல்லாம் கடந்து குகை, குடைவரை, கற்றளிகள், நிறைந்து காணப்படுகின்றன. இதுவரை புதைவிடங்கள் அதிகம் காணப்பட்டாலும் அதற்கான வாழ்விடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டு தமிழர்களின் வரலாற்றை உலகளவில் பதிவு செய்ய வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வரலாற்று துறை உதவி பேராசிரியர் இனியனும் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அனுமதி அவருக்கு கிடைத்துள்ளதாகவும், கொரோனா தொற்று வீரியம் குறைந்த பிறகு பல்கலைக்கழக அனுமதி பெற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து உதவி பேராசிரியர் இனியன் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒருசில இடங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்கள் பாதுகாக்கப்படவில்லை. இங்குள்ள இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய தொல்பொருள் துறையிடம் அனுமதி கேட்டிருந்தேன். முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் மேலாய்வு செய்து அதில் எந்த இடம் அகழாய்வு செய்ய சரியான இடம் என்பதை அறிக்கையாக கேட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், கொரோனா பிரச்சினை முடிந்தபிறகு ஆய்வுகள் செய்ய தயாராக இருக்கிறோம். அந்த ஆய்வில் கீழடியில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜி.பி.ஆர். கருவிகளையும் பயன்படுத்த இருக்கிறோம். அந்த அறிக்கைக்கு பிறகு மத்திய தொல்பொருள் துறை அனுமதிக்கும் இடத்தில் அகழாய்வு செய்யப்படும் என்றார்.

சென்னையில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும், மேலும் 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
மாவட்டத்தில், பொதுஇடங்கள் மற்றும் போக்குவரத்தின்போது பொதுமக்கள் முக கவசம் அணியாமல் இருந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். ஊராட்சி பகுதிகளிலும் இது பொருந்தும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முதல் தடவை அபராதம் விதிக்கப்படும்போது இலவசமாக ஒரு முக கவசம் கொடுக்கப்படும். மீண்டும் முக கவசம் அணியாமல் வந்தால் பொது சுகாதார சட்டத்தின் கீழ் போலீஸ் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இ-பாஸ் குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்சி வழியாக வரும் நபர்கள் ஒவ்வொரு சோதனை சாவடியிலும் துணை கலெக்டர் நிலையில் அலுவலர் தலைமையில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கூடுதலாக கட்டுமாவடி, விராலிமலை, ஆவணம் கைகாட்டி ஆகிய 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முறையாக இ-பாஸ் அனுமதியில்லாமல் வரக்கூடிய நபர்கள் மற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தற்போது இயக்கப்படும் 50 சதவீத பஸ்களுடன் கூடுதலாக பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) மலர்விழி, பொது சுகாதார துணை இயக்குனர்கள் அர்ஜுன்குமார், கலைவாணி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மீனாட்சிசுந்தரம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
புதுப்பேட்டை:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகன் வினோத்குமார் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான ரஞ்சித்குமார் (26), சங்கர் (45) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வீரப்பெருமாநல்லூரில் இருந்து எஸ்.ஏரிப்பாளையத்துக்கு புறப்பட்டார். பண்ருட்டி அடுத்த திருவாமூர் பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் வினோத்குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய ரஞ்சித்குமார், சங்கர் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.
சங்கருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான வினோத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி- மடப்பட்டு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.