என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு போனது.
    • முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 49). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போகியிருந்தது. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • இந்தி எதிர்ப்பை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்
    • அரசு கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடந்தது

    புதுக்கோட்டை:

    மத்திய அரசின்இந்தி திணிப்பை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு 100-கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு நிற துணி அணிந்து இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைக ளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    • லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • மூன்று குழந்தைகள் உள்ளது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி கம்பர் தெருவை சேர்ந்த ராஜு மகன் கதிரேசன் (வயது 42) லாரி டிரைவராக பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ராஜாத்தி என்ற மனைவியும், தரணி (18) தரணிஈஸ்வரன் (16 )பாலமுருகன் (13 )ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்த கதிரேசன், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • ஆலங்குடி போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கும்மங்குளத்தை சேர்ந்த பிலிப் மகன் ஜெஸ்டின்ஜெயராஜ் (வயது 45). இவர் சம்பவத்தன்று வயலுக்கு தெளிக்க வேண்டிய பூச்சி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெஸ்டின்ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சபம்வம் குறித்து அவரது மனைவி நட்சத்திர மேரி கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி வழங்கப்பட்டது
    • நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டத்தில்

    புதுக்கோட்டை:

    விராலிமலை வட்டாரத்தில், மாத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டத்தின் விவசாயகளுக்கு வயல்வெளி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் சம்பா பருவத்தில் நெற்பயிரை தாக்கும் இலை சுருட்டு புழு, குலைநோய், புகையான் தாக்குதல் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் அதற்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் பற்றியும் சிறப்பாக விவசாயிகள் மத்தியில் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி ப.தமிழ்செல்வி சிறப்பாக விளக்கம் அளித்தார்.

    ஏக்கருக்கு 5 எண்கள் இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் ஆண்பூச்சிகள் அதிக அளவு கவரப்பட்டு பெண் பூச்சிகளின் இனபெருக்கத்தை கட்டுப்படுத்தபடுகின்றன. விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து இழுப்பதன் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் இன பெருக்கத்தை கட்டுப்படுத்தப்படுகிறது என்பதனை பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் விளக்கம் அளித்தார்

    மீன் வளத்துறையில் மாவட்ட திட்ட செயாளார் குயிலி கூறும் போது, தங்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துறைத்தார். உழவன் செயலில் பதிவிறக்கம் பற்றியும் அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் ஷீலாராணி வேளாண்மை அலுவலர் கூறினார். இறுதியாக இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தங்கராசு துணை வேளாண்மை அலுவலர் நன்றி உரை கூறினார். 

    • புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது
    • வாராப்பூர் ஊராட்சி பள்ளியில் நடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

    இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியின் கட்டிடம் ஆங்காங்கே விரிசலுற்று சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கருதி, வகுப்பறைகள் சமுதாயக்கூடத்திலும், நாடகமேடை வளாகத்திலும் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் பள்ளியின் நிலையை பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனருமான மருத்துவர் சேதுராமன் கவனத்திற்கு ஊராட்சிமன்றத்தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். இதையடுத்து இந்நிறுவனத்தின் சார்பில் சுமார் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டடம் கட்டித்தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. பூமி பூஜையில் மருத்துவர் சேதுராமன், காமினி குருசங்கர், ஊராட்சி மன்றத்தலைவர் மலர்விழி, மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், பொறியாளர் விஎன்ஆர்.நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    • லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • தனிப்படை போலீசார் நடவடிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது குளமங்கலம் தெற்கு பகுதியில் உள்ள தனியார் மளிகை கடையில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த பனங்குளம் தெற்கு சிவப்பிரகாசம் (வயது 61) மற்றும் அறந்தா ங்கி பாண்டிக்குடியை சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜேஷ் (வயது 31) இவர்களை கைது செய்து இவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கத்தை கைப்பற்றி இருவரையும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சோதனை செ ய்தபோது, மாங்கனாம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் விற்பனையான் (வயது 35 )என்பவரை கைது செய்து, ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆலங்குடி காவல் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கடையில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்
    • கேளர மாநிலத்தை சேர்ந்தவர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்த குமார் மனைவி உஷா (வயது 30 ) இவர் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது பெட்டிக்கடையில் கடந்த ஐந்தாம் தேதி மாலை கேரளா மாநிலம் இடுக்கி தெங்கக்கல் வண்டிப்பெரியார் விழாமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த அகஸ்டின் மகன் ஜார்ஜ் (வயது 43) என்ற நபர் திருடமுயன்றார். இதனை பார்த்த பொதுமக்கள், அவரை பிடித்து வடகாடு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ்குமார் வழக்கு பதிவு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தங்க சங்கிலி பறித்து சென்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மேரி. இவர் கடந்த மாதம் வகுப்பு முடித்து தனது ஸ்கூட்டரி ல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கரம்பக்காடு இனாம் கிராமத்தில் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மேரி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து கீரமங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவ ட்டம் பட்டுக்கோட்டை அந்தோணியார் தெரு பாண்டியன் மகன் சுதாகர் (வயது 20), தாமரங்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரீஸ் (24), நாவலர் நம்பி மகன் விஜயரகுநாத் ( எ )இந்திரஜித் (25), காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் கட்ட வாக்கம் சமத்துவ புரத் ரத்தைசேர்ந்த சுரேஷ்குமார் மகன் மோகன்ராஜ் (21) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, சென்னையில் விற்கப்பட்ட நகையையும் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

    உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கூறும் போது,

    புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவின் தரத்தினை ஆய்வு செய்யும் வகையில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் வரும் 25-ந் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பகுதிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பால் பொருட்களில் உள்ள கலப்படங்கள் குறித்தும், மசாலாப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் அஜினோ மோட்டோ மற்றும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், உப்பில் அயோடின் பரிசோதனை மேற்கொள்ளவும், எண்ணெய் வகைகளில் வேறு எண்ணெய் கலப்படம் குறித்தும், பருப்பு வகைகளில் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும், டீ மற்றும் காப்பியில் இரும்புத் துகள்கள் மற்றும் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்கள்அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பது குறித்து இவ்வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சம்பத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்கசாமி, கார்த்திக், ஜேம்ஸ், மகேஷ் மற்றும் மதுரை உணவு பகுப்பாய்வக நடமாடும் வாகனப் பணியாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கடல் அட்டைகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
    • வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே முத்துக்குடா கடல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கடல் அட்டைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அறந்தாங்கி வனத்துறை சரக அலுவலர் மேகலா, வனவர்கள் அந்தோணிசாமி, அன்புமணி, சோனமுத்து, வேட்டை தடுப்பு காவலர்கள் முத்துராமன், சைமன் உள்ளிட்ட அதிகாரிகள் முத்துக்குடா கடல் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த அரசனகரிபட்டினத்தை சேர்ந்த செய்யது அலி (வயது 40) என்பவரை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விற்பனைக்காக 6 கடல் அட்டைகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து செய்யதுஅலியை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கடல் கட்டைகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலாடிப்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அதே ஊரை சேர்ந்த தங்கையன் (வயது 55), முருகேசன் (39) ஆகிய 2 பேர் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கந்தர்வகோட்டை-தஞ்சை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மதுபாட்டில்களை விற்றுகொண்டிருந்த முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது அனிபா (57) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    ×