என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
- லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
- தனிப்படை போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குளமங்கலம் தெற்கு பகுதியில் உள்ள தனியார் மளிகை கடையில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த பனங்குளம் தெற்கு சிவப்பிரகாசம் (வயது 61) மற்றும் அறந்தா ங்கி பாண்டிக்குடியை சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜேஷ் (வயது 31) இவர்களை கைது செய்து இவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கத்தை கைப்பற்றி இருவரையும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சோதனை செ ய்தபோது, மாங்கனாம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் விற்பனையான் (வயது 35 )என்பவரை கைது செய்து, ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆலங்குடி காவல் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






