என் மலர்
பெரம்பலூர்
- படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- ஆகஸ்ட் 31ம்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுரை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் படித்த வேலை வா ய்ப்பற்ற இளைஞ ர்களிடமி ருந்து வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெ றுவதற்கான வி ண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தோல்வி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து ஐந்தா ண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி கா த்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவி த்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறு த்தவரையில் வே லைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடி த்திருந்தால் போது மானது.உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலகத்தில் விண்ண ப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றா ண்டுகள் உதவி த்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையி ல்லை.பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பங்களை அடுத்த மாதம் ஆகஸ்ட்டு 31-ந் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் நேரில் சமர்ப்பி க்கலாம் என்று கலெக்டர் தெரிவி த்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் பேரிடர்கால ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
- 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், தொழிற்சாலைகள் , அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் என 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்ட அலுவலர் அம்பிகா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் பெரம்பலூர் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) முருகன் மற்றும் முன்னணி தீயணை ப்பாளர் இன்பஅரசன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கமும், தீத்தடுப்பு சாதனங்களை கையாளும் விதம் குறித்தும், குடியிருப்பு மற்றும் பணிபுரியும் இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பாக வெளியேறுவது எவ்வாறு என்பது குறித்து செயல் விளக்கம், ஒத்திகை மூலம் விழி ப்புணர்வு ஏற்படு த்தினர். இதனை அரசு அலுவ லர்கள், பணியாளர்கள், மாணவ , மாணவிகள், வாசகர்கள் மற்றும் பொது மக்கள் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.
- பெரம்பலூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது
- 9-ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமா ந்துறை ஊராட்சிக்குட்பட்ட தி. கீரனூர் கிராமத்தில் வரும் 9ம்தேதி கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமினையொட்டி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே தி.கீரனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தி.கீரனூர் விஏஒ அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்களிடம் முன்னதாகவே மனுக்களை அளித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- வயல் வரப்பு பிரச்சினையில் மாமன்- மைத்துனர் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டி கொண்டனர்
- பெரம்பலூர் மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை
பெரம்பலூர்,
பெரம்பலூர் நொச்சியம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (வயது 38). நொச்சியம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் 35 இருவரும் மாமன் மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள். இருவரு க்கும் தங்களது வயல்களில் வரப்பு அமைப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் மாமுண்டி நில அளவையரை வைத்து நிலத்தை அளந்து வரப்பு போட்டார்.இதை அறிந்து ஆத்திரமடைந்த அருள்ராஜ் மாமுண்டி வீட்டுக்குச் சென்று என்னை கேட்காமல் நீ எப்படி வரப்பு போட்டாய் என கேட்டு தகராறு செய்து ள்ளார். பின்னர் சத்தம் போட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அருள்ராஜ் சிறிது நேரம் கழித்து மீண்டும் மாமுண்டி வீட்டுக்குச் சென்று அவரது இடது கையில் கொடுவாளால் வெட்டினார். உடனே சுதாக ரித்துக் கொண்ட மாமுண்டி குடி போதையில் இருந்த அருள்ராஜ் கையில் இருந்த கொடு வாழை பிடுங்கி அவரது இரண்டு கணுக்கா ல்களிலும் வெட்டினார்.உறவினர்கள் வெட்டு க்காயம் அடைந்த மாமுண்டி மற்றும் அருள்ராஜ் ஆகிய இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்து ள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரப்பு பிரச்சனை யில் மாமனும் மருமகனும் ஒருவருக்கொருவர் வெட்டி கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெரம்பலூரில் மின் ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் விநியோகம்
பெரம்பலூர்,
அனைத்து வீடுகளிலும் தற்போதுள்ள மின்சார ரீடிங் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்திட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மின் ஊழியர்களின் வேலையிழப்புகள் குறித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள உழவர் சந்தை முன்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது. மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் மின் ஊழியர்கள் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- பெரம்பலூரில தமிழ்நாடு நாள் ஊர்வலம் நடைபெற்றது
- கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயரிட வலியுறுத்தி, தியாகி சங்கரலிங்கனார் 1956-ல் தனி நபர் போராட்டமாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக அண்ணா இருந்தபோது 18.7.1968 அன்று சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு உருவான தினம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் தமிழ்நாடு நாள் குறித்த புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஊர்வலத்தை கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பாலக்கரை வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மாணவ, மாணவிகள் தமிழ் மொழி குறித்தும், தமிழ்நாட்டின் பெருமைகள் குறித்தும் பறைசாற்றும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு நாள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு உருவானதற்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை விளக்கும் வகையிலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டியில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாவேந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் கறுப்பு சட்டை இயக்கம் நடந்தினர்
- பாஜகவால் உலக அளவில் இந்தியா பெருமை உயர்ந்துள்ளதாக பேட்டி
பெரம்பலூர்,
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்காத தமிழக தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூரில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.பின்னர் இது குறித்து பா.ஜ.க. மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதை தடுக்கும் வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு புதிய அணை கட்டுவதற்கான ஒரு அறிவிப்பை செய்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, எந்தெந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக அரசிடம் கேட்டு உரிய அனுமதி பெற்று காவிரி மேலாண்மை வாரியம் கூட்டம் கூட்டி, கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பிறகுதான் மேகதாது அணையை கட்ட முடியும் என்ற ஆணையை பிறப்பித்தார்.ஆனால் தற்போது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.900 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி ஆகியோர் ஒரு அறிக்கையாவது விட்டிருக்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறது.கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் (1969 முதல் 1975ம்) கபினி அனை, சியாமாநதி, சொர்ணநிதி, கரங்கி அணை என 4 அணை கட்டப்பட்டது. இதற்கு அப்போதிருந்த மத்திய அரசுடன் கைகோர்த்துக்கொண்டு கருணாநிதி தடுக்காமல் ஆதரவளித்தார். அதே போலத்தான் தற்போதும் ஸ்டாலின் அரசு, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கால் மவுனம் காத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- பள்ளியில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்தார்
- இதய கோளாறு உள்ளதால் ஏற்பட்ட சோகம்
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரை சேர்ந்த கணேஷன் என்பவரின் மகன் மகவீன்(வயது 16). இவர் ஆலத்தூர் தாலுகா தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல பள்ளிக்கு வந்த சிறுவன் மதியம் 3.30 மணி அளவில் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர்களும், மாணவர்களும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் எந்தவித பலனும் இல்லை. இதனால் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது மகவீனுக்கு ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு இருந்து வந்தது தெரிய வந்தது
- வடமாநிலத்தவர் ஓட்டி வந்த பைக் மோதி பெண் பலியானார்
- மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை காமராஜர் நகரை சேர்ந்த செல்லமுத்துவின் மனைவி சுசீலா(வயது 45). இவர் 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டார். பின்னர் மதியம் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதே சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வரும் டெல்லியை சேர்ந்த ஜாவாத் முகமது சுவப்(20), அப்துல் ரஷீத் மகன் பர்மான்(20) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் மதிய உணவு வாங்குவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் தொழுதூர் சென்று கொண்டிருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சுசீலா மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுசீலாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுசீலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பேருந்தில் தவற விட்ட, தனியார் நிறுவன ஊழியர் மடிக்கணினி அபகரிப்பு
- மடிக்கணினியை அபகரித்தவர் கைது
பெரம்பலூர்,
திருச்சி பட்டவர்த் சாலையில் வசித்து வருபவர் கணபதி (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த கணபதி, மீண்டும் வேலைக்கு செல்ல திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அந்த பஸ் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தபோது, கணபதி தனது மடிக்கணினி வைத்திருந்த பையை பஸ்சில் வைத்துவிட்டு டீக்குடிக்க இறங்கி உள்ளார். அதற்குள் அந்த பஸ் புறப்பட்டுவிட்டது. இதையடுத்து அவர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், மடிக்கணினியுடன் அந்த பஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டது குறித்து கூறியுள்ளார். போலீசார் உடனடியாக திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு குறிப்பிட்ட பஸ்சின் பதிவு எண்ணை தெரிவித்து, பஸ்சில் சோதனையிடுமாறு கூறியுள்ளனர். அதன்படி நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார், அந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது திருச்சி ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த ஒண்டிமுத்து (40) என்பவர், கணபதியின் மடிக்கணியை எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து ஒண்டிமுத்து மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, மடிக்கணினியை மீட்டனர்.
- வடக்குமாதவி கிராமத்தில் வீடு புகுந்து நகைகள், ரூ,85 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(வயது 50). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் வடக்குமாதவி-சோமண்டாபுதூர் சாலையில் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன்களில் ஒருவரான கோபால் வடக்குமாதவி சாலையில் உள்ள சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். முத்துலட்சுமி பெரம்பலூரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் 2.30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் தகரம் பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த தாலிச்சங்கிலி, தாலிக்காசு, தங்கச்சங்கிலி உள்பட 3 பவுன் நகைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடனாக பெற்ற ரூ.85 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.இது குறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும், துப்பறியும் மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நகைகள் மற்றும் பணத்தை திருடிசென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- மகாமாரியம்மன் தேர்திருவிழாவை முன்னிட்டு பைக்கில் சிவன்-பார்வதியும் வீதி உலா வந்தனர்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
பெரம்பலூர் குன்னம்: பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு மகா மாரியம்மன் உள்ளிட்ட 10 சாமிகளின் வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி வாணவேடிக்கையுடன் 10 டிராக்டர்களில் சிறப்பு அலங்காரத்தில் எலி வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், கையேந்தியில் பெருமாள், மோட்டார் சைக்கிளில் சிவன்-பார்வதி, அன்ன வாகனத்தில் ஆண்டாள், சிம்ம வாகனத்தில் காளியம்மன், சரஸ்வதி, மீனாட்சி, ராஜேஸ்வரி எழுந்தருள வீதி உலா நடைபெற்றது. இதில் மோட்டார் சைக்கிளை சிவன் ஓட்டுவது போலவும், பின்னால் பார்வதி அமர்ந்து வருவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது.






