என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி விழுந்து மாணவன் சாவு
    X

    மயங்கி விழுந்து மாணவன் சாவு

    • பள்ளியில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்தார்
    • இதய கோளாறு உள்ளதால் ஏற்பட்ட சோகம்

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரை சேர்ந்த கணேஷன் என்பவரின் மகன் மகவீன்(வயது 16). இவர் ஆலத்தூர் தாலுகா தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல பள்ளிக்கு வந்த சிறுவன் மதியம் 3.30 மணி அளவில் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர்களும், மாணவர்களும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் எந்தவித பலனும் இல்லை. இதனால் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது மகவீனுக்கு ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு இருந்து வந்தது தெரிய வந்தது

    Next Story
    ×