என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மாலை அணிவித்து மரியாதை
- தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூர்,
பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட மாணவரணி செயலாளருமான தமிழ்செல்வனை அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று பெரம்பலூர் திரும்பிய தமிழ்செல்வனுக்கு மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல் பிளாசவில் அ.தி.மு.க.வினர் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் பெரம்பலூரில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
- இளைஞர் காங்கிரஸ் செயற்குழு
பெரம்பலூர்,செப்.29-
பெரம்பலூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேலிட பொறுப்பா ளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பா ளராக இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்ரீதர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.
கூட்டத்தில் வருகிந எம்பி தேர்தலில் பெர ம்பலூர் தொகுதியை காங்கி ரஸ் கட்சிக்கு ஒதிக்கீடு செய்ய வேண்டும். பெர ம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான ெரயில் சேவை உடனடியாக வழங்க வேண்டும். உட்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.
இதில் சட்டசபை தொகுதி தலைவர்கள் ராஜா, பார்த்திபன், காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில செயலாளர் துரை ராஜீவ் காந்தி மற்றும்இ ளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- மண் திருடிய 2 பேர் கைது
- லாரி சிறைப்பிடிப்பு
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள மங்களமேடு அருகே வாலிகண்டபுரம் கிராமத்தில் கிராவல் மண் திருடுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மங்களமேடு சப்-இ ன்ஸ்பெக்டர் சரவண க்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது வாலிக ண்டபுரத்திலிருந்து பிரம்ம தேசம் செல்லும் வழியில் அரசு அனுமதியின்றி கிரா வல் மண் ஏற்றிச்சென்றது தெரியவருகிறது இதையடுத்து பிரம்மதேசம் கடைத்தெருவை சேர்ந்த இளவரசன் (வயது 41), எளம்பலூர் காட்டு க்கொ ட்டாய் உப்பு ஓடையை சேர்ந்த தண்டபாணி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழுக்களின் செயற்குழு கூட்டம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள சு.ஆடுதுறையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாநில பொறுப்பாளர் தங்கதுரை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கட்சி தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர் தொல்.திருமாவ ளவனின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று பேசினார்.அப்போது சனாதானத்தை முழுமையாக எதிர்ப்பது உள்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு விடுதலை செழியன், அரியலூர் ,பெரம்பலூர் மண்டல செயலாளர் அன்பானந்தம், மாவட்ட செயலாளர் (கி) கலையரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், மண்டல துணை செயலாளர் லெனின், ஸ்டாலின்,முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பிரேம்குமார், தமிழ் குமரன், அண்ணாதுரை, தங்கதுரை , என 100-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆக முன்னாள் எம்எல்ஏ இளமை தமிழ்ச்செல்ன் நியமிக்கப்பட்டு உள்ளார்
- தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பெரம்பலூர்,
அஇஅதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை இரா. தமிழ்ச்செல்வனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி நியமனம் செய்து உள்ளார்.இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தொண்டர்கள் பெரம்பலூர் பழைய, புதிய பேருந்து நிலையம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் 3 முறை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை எம்.எல்ஏவாக இருந்து உள்ளார். பள்ளி கல்லூரி காலத்தில் இருந்தே அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மாவட்ட மாணவரணி செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மாவட்ட செயலாளருக்கு போட்டி இருந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் மாவட்ட செயலாளராக தேர்வு பெற்றிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மாவட்ட செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வனுக்கு நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
- பெரம்பலூரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி மர்ம ஆசாரிகள் பறித்து சென்றுள்ளனர்
- மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர்-துறையூர் சாலையில் கல்யாண் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி விஜயா (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை 10 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆண் நபர் ஒருவர் விஜயா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயா திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் அந்த நபர் தாலி சங்கிலியுடன் அருகே தயார் நிலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு ஆண் நபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி பெரம்பலூர் நோக்கி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.இந்த சம்பவம் குறித்து விஜயா பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதையடுத்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூரில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்
- 124 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியனூர் ஆற்றங்கரை அருகே அதே ஊரை சேர்ந்த நடராஜன் மனைவி பிரீத்தி(வயது 24) என்பவர் சாராயம் விற்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 124 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
- குன்னம் அருகே நல்லறிக்கை கிராம பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர்
- 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடும்பாவி அமைத்து ஒப்பாரி வைத்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நல்லறிக்கை கிராம பெண்கள் மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் கிராம பெண்கள் ஒன்றுகூடி கொடும்பாவி அமைத்து மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர். இதேபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடும்பாவி அமைத்து ஒப்பாரி வைத்து வேண்டுதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெரம்பலூர் போலீசார் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
- தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதுமதி (டவுன்), சுப்பையன் (நெடுஞ்சாலை) தலைமையிலான போலீசார் வெவ்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்றும், சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கினால் விபத்துகளை தவிர்த்து விடலாம், என்றனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- வேப்பந்தட்டை விவசாயி தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போய் உள்ளது
- சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பெருமாள்(வயது 60). விவசாயியான இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது 7 பவுன் நகையை அடமானம் வைத்து, ரூ.2 லட்சம் பெற்றார். பின்னர் வங்கியில் இருந்து வெளியே வந்த அவர், அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துள்ளார்.இதையடுத்து வங்கியின் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய அவர், தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடைக்கு கையுறை வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த கடையில் கையுறை இல்லாததால், மீண்டும் தனது ேமாட்டார் சைக்கிளில் வேப்பந்தட்டை- ஆத்தூர் சாலையில் உள்ள மற்றொரு எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்று கையுறை வாங்கியுள்ளார்.அந்த கையுறையை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைப்பதற்காக, பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து அரும்பாவூர் போலீசில் பெருமாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி மற்றும் கடைவீதியில் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
- பெரம்பலூர் மாவட்டத்தில்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
- கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் போன்ற பயிர்கள் எதிர்பாராத இயற்கை இடர்படுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் மேற்கூறிய பயிர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில்பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
- கட்டிடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பெரம்பலூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கட்டிடம், வ.கீரனூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் ஆகிய புதிய வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கற்பகம் கீழப்பெரம்பலூர் மற்றும் வ.கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் குத்துவிளக்கு ஏற்றி பள்ளிக் கட்டிடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்லலிதா, ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார்,செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






