search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகரம்சீகூர் அருகேவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழுக்களின்  செயற்குழு கூட்டம்
    X

    அகரம்சீகூர் அருகேவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழுக்களின் செயற்குழு கூட்டம்

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழுக்களின் செயற்குழு கூட்டம்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழு


    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள சு.ஆடுதுறையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாநில பொறுப்பாளர் தங்கதுரை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கட்சி தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர் தொல்.திருமாவ ளவனின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று பேசினார்.அப்போது சனாதானத்தை முழுமையாக எதிர்ப்பது உள்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு விடுதலை செழியன், அரியலூர் ,பெரம்பலூர் மண்டல செயலாளர் அன்பானந்தம், மாவட்ட செயலாளர் (கி) கலையரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், மண்டல துணை செயலாளர் லெனின், ஸ்டாலின்,முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பிரேம்குமார், தமிழ் குமரன், அண்ணாதுரை, தங்கதுரை , என 100-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.




    Next Story
    ×