என் மலர்
பெரம்பலூர்
- சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
- நிலப்பிரச்சினை தொடர்பான
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீசார் மற்றும் வேப்பந்தட்டை வட்ட வருவாய்துறையினர் இணைந்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் வேப்பந்தட்டை வருவாய் தாசில்தார் சரவணன், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நிலம் தொடர்பான 11 கோரிக்கை மனுக்களை பெற்று, அதற்கு உடனடியாக தீர்வு கண்டனர்.
- சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
- கோரிக்கைகளை வலியுறுத்தி
பெரம்பலூர்:
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடந்த சிஐடியு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சிவானந்தம், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒரகடம் யமஹா தொழிற்சாலையில் பெரும்பான்மை தொழிலாளர்களின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த யமகா இன்டியா சிஐடியூ தொழிலாளர்கள் சங்கத்தை நிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் தொழிலாளர் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, நிர்வாகத்திற்கு சாதகமான நபர்களுடன் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தி, அதனை ஏற்க மறுத்து போராடும் தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டாமல் இருக்கும் யமஹா தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஈடுபடுவதை கண்டித்தும்,
தொழிலாளர்களின் ஆதரவு உள்ள சங்கம் எது என்பதை தீர்மானிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பொறுப்பாளர்கள் இன்பராஜ், கிருஷ்ணசாமி, கிருஷ்ணகுமார், கனகராஜ், செல்லமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பாடாலூரில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது
- பராமரிப்பு பணி முடியும் வரை
பெரம்பலூர்
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும்பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ. குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
- பட்டா வழங்க கோரி நரிக்குறவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
- 40 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் இடங்களுக்கு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் நரிக்குறவர் காலனி மக்கள், 40 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவின் பேரில் அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அந்த நிலத்திற்கு பட்டா வழங்க கோரி, அரை நிர்வாணத்துடன் பாலக்கரையிலிருந்து ஊர்வலமாக தி.மு.க. மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு சென்று, எம்.பி.ராசாவிடம் மனு அளித்தனர்.
மனுவினை பெற்றுக்கொண்ட ராசா, அரசு பதிவேட்டின் படி உள்ள 89 குடும்பங்களுக்கு தான் முதலமைச்சரிடம் பேசி ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்றரை சென்ட் வீட்டுமனை பட்டா மற்றும் விவசாயம் செய்வதற்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு பட்டா வாங்கி தருவதாக உறுதியளித்தார்.
பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் அய்யாக்கண்ணு, நரிக்குறவர்கள் நலச்சங்க மாநில தலைவர் காரைசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் நரிக்குறவர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சம்பவஇடத்திற்கு வந்து நரிக்குறவர்களிடம் கோரிக்கை மனுவினை பெற்று இது சம்பந்தமாக அரசிடம் முறையிட்டு அரசிடமிருந்து என்ன உத்தரவு வருகிறதோ அதனை செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
- சென்னையில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில், தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஆ.ராசா.எம்.பி.யை தி.மு.க. துணை பொதுச் செயலாளராக 2வது முறையாக அறிவித்தார்.
- பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த துணை பொதுசெயலாளர் ராசாவிற்கு பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்,
சென்னையில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில், தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஆ.ராசா.எம்.பி.யை தி.மு.க. துணை பொதுச் செயலாளராக 2வது முறையாக அறிவித்தார்.
திமுகவின் துணை பொதுசெயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று முதல் முறையாக பெரம்பலூருக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிற்கு திமுகவினர் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்திலிருந்து கோயம்புத்தூர், சேலம், ஆத்தூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த துணை பொதுசெயலாளர் ராசாவிற்கு பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் கோனேரிப்பாளையம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் நகர திமுக சார்பில் நகர செயலாளரும், எம்எல்வுமான பிரபாகரன் தலைமையில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பெரம்பலூர் பழைய பஸ்டாண்டில் உள்ள காந்தியடிகள், அம்பேத்கர் ஆகியோரது சிலைகளுக்கு எம்பி ராசா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கடைவீதி, சங்கு, ரோவர் வளைவு, பாலக்கரை, நான்கு ரோடு வழியாக சென்று அரியலூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ராசா கலந்து கொண்டார்.
அங்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ராசாவிற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ராசா நன்றி கூறி பேசினார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர்வல்லபன், பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், வக்கீல் ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இந்தி திணிப்பை எதிர்த்து
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில், அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில், இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தி மொழியை நாடு முழுவதும் அலுவல் மொழியாகக் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், அனைத்து துறைகளிலும் மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வதை எதிர்த்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கல்லூரி கிளை செயலாளர் புரட்சி மணி, கிளை தலைவர் பாலமணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பணிநேர நீட்டிப்பு உத்தரவை திரும்ப பெறக்கோரி
பெரம்பலூர்
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த ஒரு மாதமாக தபால் துறையில் மாக்-காமிஷ் என்ற கணினி மென்பொருள் சரிவர வேலை செய்யாத தொழில்நுட்ப கோளாறு காரணத்தால், பொதுமக்களுக்கு தினசரி பரிவர்த்தனைகளில் இடையூறு ஏற்படுகிறது. இதனால் தபால் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும், பணிநேர நீட்டிப்பு உத்தரவை திரும்ப பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் ஊழியர் சங்கத்தின் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி தலைவர் செல்வகணேசன் தலைமை தாங்கினார். இதில் தபால் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- தீராத தலைவலி இருந்து வந்துள்ளது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 13). இவர், கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் அவருக்கு தலைவலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று புவனேஸ்வரி பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது, புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புவனேஸ்வரியின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில், குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது."
- உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க நுகர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- பெரம்பலூரில் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உணவு பொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு துறை பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமை வகித்து பேசினார்.
அப்போது அவர் கூறும் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, அதன் விதிமுறைகள் 2011-ன்படி கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களை தெரிந்த உணவு வணிகர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். அதற்கான முறையான ரசீது பெறப்பட்டிருக்க வேண்டும்.
சுகாதாரமான முறையில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட வேண்டும். உணவு தயாரிக்கும் இடத்திற்குள் பூச்சிகள் நுழையாவண்ணம் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். பணியின்போது பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம், மேலங்கி அணிந்தே பணியாற்ற வேண்டும். உணவு தயாரிப்பில் அனுமதித்த அளவிற்குள் மட்டுமே செயற்கை வண்ணங்களை பயன்படுத்த வேண்டும்.
நுகர்வோர்கள் உணவு பொருள் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இனிப்பு மற்றும் கார வகைகள், பேக்கரி தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உரிய வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை நடந்துள்ளது
- பணிக்கு சென்றிருந்த போது ஏற்பட்ட சம்பவம்
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஆண்டிக்குரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் இவரது மனைவி செல்வி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். செல்வி தனது பிள்ளைகளுடன் நேற்று இரவு அதே ஊரில் உள்ள தந்தை வீட்டிற்கு உறங்குவதற்காக சென்றுள்ளார். அவரது கணவர் தர்மராஜ் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய இரவு பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
பணியை முடித்துவிட்டு தர்மராஜ் வீட்டிற்கு வந்த போது, வீட்டில் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் தையல் மெஷினை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து. சிசிடி கேமரா ஆதாரங்கள் மற்றும் தடயங்களை வைத்து திருடி சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
- நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
- நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு முல்லை அரும்பு என்ற மனைவியும், ஒரு மகள், 3 மகன்களும் உண்டு. ஆறுமுகம் தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கீழ் செருவாய் கிராமத்தில் தங்கியிருந்து, கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு அவரது மூத்த மகன் அருண்குமார் திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி அவன் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்றான். அப்போது டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்ததில் பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அருண்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக அருண்குமார் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்தை நஷ்டஈடாக அருண்குமார் குடும்பத்தினருக்கு வழங்க விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் நஷ்டஈடு தொகை அதிகமாக உள்ளதாக கூறி அரசு போக்குவரத்து கழகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தற்போது வட்டியுடன் ரூ.18 லட்சம் வழங்க உத்தரவிட்டது.
ஆனால் அந்த நஷ்டஈடு தொகையையும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஏதேனும் ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மதுரையில் இருந்து பயணிகளுடன் விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ் நேற்று காலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தது. அப்போது அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்கள், அந்த பஸ்சை ஜப்தி செய்தனர்.






