என் மலர்
பெரம்பலூர்
- டாஸ்மாக் மதுபான கடையை மூட கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- கடையை திறக்க கோரி மது பிரியர்கள் போராட்டம்
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் வசிஷ்டபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் அவ்வழியே சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தகராறில் ஈடுபடுவதோடு, மது அருந்துவிட்டு சாலையின் குறுக்கே விழுந்து கிடப்பதாலும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருவதோடு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த கடையின் அருகில் பொதுமக்கள் குடியிருப்புகள், திருமண மண்டபம், சந்தை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் அரசு விடுமுறை என்பதால் அதே பகுதியில் போலீசார் உதவியுடன் படு ஜோராக மது விற்பனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உடன் பெரம்பலூர் மாவட்ட ஜனநாயக மாத சங்கத்தின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அரசு மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி அரசு மதுபான கடை அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் திரண்டி ருந்தனர்.அவர்களிடத்தில் காவல்துறையினரும், அரசு மதுபானக் கடை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளும், உரிய நடவடிக்கைஎடுப்ப தாகவும், போராட்டத்தை கைவிட வலியுறுத்தியும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த போராட்டகாரர்கள் டாஸ்மாக் கடையை மாற்று இடத்தில் வைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம்என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடை பெற்று கொண்டிருந்த போது, டாஸ்மாக் மது பானக்கடைக்கு மது வாங்க வந்த மது பிரியர்கள் கடையை உடனடியாக திறக்க வேண்டும், எங்களுக்கு மது வேண்டும். மது குடிக்காவிட்டால் இறந்து விடுவோம் என்று கூறி தங்களுக்கு உடனடியாக மது வேண்டும் என்று கூறி பிரச்சனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடை முன்பு சாலையில் படுத்து மறியல் செய்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினரிடம் தகராறு செய்ய முயன்றதையடுத்து காவல்துறையினர், மது பிரியர்களை விரட்டி யடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து ஜனநாயக மாத சங்க நிர்வாகிகளிடம் கடையை விரைவில் மாற்று இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அகரம்சீகூர் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.
- பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
- கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் குடியரசு தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. ஆனாலும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்தது.
போலீசார் சட்ட விரோத மது விற்பனைக்கு பெயரளவுக்கு வழக்குகளை பதிவு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளில் சிலர் அளவுக்கு அதிகமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து நேற்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர்.
குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் சீகூரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை அதிகளவில் நடைபெற்றதாகவும், எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அமைப்பு சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற போவதாகவும் கூறப்படுகிறது.
- கலெக்டர் கொடியேற்றினார்
- 10லட்சம் மதிப்பில் 94 பேருக்கு நலத்திட்ட உதவி
பெரம்பலூர்:
இந்தியத்திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா முன்னிட்டு பெரம் பலுார் மாவட்ட கலெக் டர் அலுவல க பெருந் திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் காவல்துறையில் சிறப் பாக பணிபுரிந்த 18 காவ–லர்களுக்கு முதல–மைச்சர் பதக்கங்களையும், 47 காவலர்களுக்கு நற்சான்றி–தழ்களையும் வழங்கினார்.
விழாவில் குடியரசு தின போலீசார் அணிவகுப்பிற்கு ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், முதலாம் படைப்பிரிவிற்கு ஆயுதப் படை போலீஸ் சப்-–இன்ஸ்பெக்டர் பத்பநா–பனும், இரண்டாம் படைப் பரிவிற்கு ஆயுதப்ப–டை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சீ மானும், மூன்றாம் படைப்பிரிவிற்கு ஆயு–தப் படை போலீஸ் சப்-–இன்ஸ்பெக்டர் சந்திர–போசும் தலைமை–யேற்று வழி நடத்தி சென்ற–னர்.
மேலும் ஊர்க்காவல் படை அணிவகுப்பை ஆல்பர்ட் தலைமையேற்று வழி நடத்தி சென்றார். முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த படைவீரரின் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பராமரிப்பு மானியத்தையும், மாவட்ட மாற்றுத்திறனாளி கள்நலத்துறையின் மூலம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.13 ஆயிரத்து 549 மதிப்பிலான திறன் பேசியினையும்,
தோட்டக்கலைத்துறை–யின் மூலம் தேசிய தோட் டக்கலை இயக்கத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மினி டிராக்டர் எந்திரத்தையும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஒருவ–ருக்கு ரூ.1.லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பவர் வீடர் கருவியினையும், ஆதிதிராவிடர் நலத்துறை–யின் மூலம் ஒருவ–ருக்கு ரூ.5,ஆயிரத்து 580 மதிப்பி–லான மின்மோட்டா–ருடன் கூடிய தையல் எந்தி–ரத்தை–யும் மேலும் பல்வேறு துறை–களின் மூலம் மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட–பிரியா வழங்கினார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு ஷியாமளா, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டார். குடியரசு தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் வெங்கடா பிரியா பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் நொச்சியம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அதனைத் தொடரந்து மதனகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்வில் மாவட்ட கலெக்டர் வெங்கடா பிரியா மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நொச்சியத்தில் கலெக்டர் பங்கேற்பு
- கோவில்களில் சமபந்தி
பெரம்பலுார்,
குடியரசு தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது . மாவட்ட கலெக்டர் தலைமையில் வெங்கடா பிரியா பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் நொச்சியம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அதனைத் தொடரந்து மதனகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்வில் மாவட்ட கலெக்டர் வெங்கடா பிரியா மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடந்த புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா நடந்தது
- சிறப்பாக அரங்குகள் அமைத்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
பெரம்பலூர்:
தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொது–மக்களுக்கு விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொங்கல் திரு–நாளை முன்னிட்டு பெரம்ப–லூர் பாலக்கரை பகுதியில், கடந்த 14-ந்தேதி புகைப்பட கண்காட்சி தொடங்கியது.இதில் அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொது–மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையி–லான புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டது.
அதுமட்டு–மல்லாது, பெரம்ப–லுார் மாவட்டத்தில் நடை–பெற்ற முக்கிய அரசுத் திட்டங் களின் தொகுப்பும் புகைப்ப–டங்களாக இடம் பெற்றது. புகைப்பட க்கண்காட்சி–யினை பார்வையிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்ப–ரிய உணவுத் திருவிழா, மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தயாரித்த உணவுப்பொருட்கள், மூலி–கைத் தேநீர் பொடி உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்க–ளின் பார்வைக்கும் விற்ப–னைக்கும் வைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்பாக புத்தகக்காட்சி அரங்கு அமைக்கப்பட்டது. ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்களின் புத்த–கங்கள் காட்சிப்ப–த்தப்பட்டு, சலுகை விலையில் விற்ப–னைக்காகவும் வைக்கப்பட்டது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் மக்காச்சோ–ளத்தில் செய்யப்படும் உணவுப்பொருட்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், நெகிழி பொருட்களுக்கான மாற்று பொருட்கள் என்னென்ன கிடைக்கின்றது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு அரங்கு, ஆவின் பொருட்களின் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று நிறைவு நாளான நேற்று கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட–பிரியா, பெரம்பலுார் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் புகைப்பட கண்காட்சியினை பார் வை–யிட்டு சிறப்பாக அரங்குகள் அமைத்த துறை அலுவ–லர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டி–னர்.
சிறப்பாக அரங்குகள் அமைத்த துறை அலுவலர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட் டன. முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன் வரவேற்றார். நிகழ்ச்சி முடிவில் உதவி மக்கள் தொடர்பு அலு–வலர் (செய்தி) எம்.எஸ்.மகாகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவ–லர் அறிவழகன், தோட்டக்க–லைத்துறை துணை இயக்குநர் இந்திராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி, வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர்கள் பிரேமா, பூமா, திருமதி அருணா உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூரில் புதிய எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது
- இதன் முக்கிய நோக்கம் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்குதலாகும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்டார வள மையம் சார்பில் அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் திட்ட விளக்க துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரணிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி பேசியது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்குதலாகும். இந்த குறிக்கோளை அடைய கல்வி அறிவு பெறாதவர்கள் எழுத்தறிவு மற்றும் எண் அறிவு கல்வியை வழங்குதல், கதை மற்றும் பாடல்கள் மூலம் எழுத்தறிவு வழங்குதல், கற்போர் அனைவரும் தங்கள் பெயர்களை எழுதுவதற்கு பயிற்சி வழங்குதல், கல்லாமையை இல்லாமையாக்குதல், அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்யும் போது கேட்கப்படும் படிவங்களை தாங்களே பூர்த்தி செய்யும் அளவிற்கு பயிற்சி எடுத்தல் போன்ற அரசின் நலத்திட்டங்களை முழுமையாக மக்கள் அறிந்திட வலியுறுத்தி பேரணி நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் குணசேகரன், சுப்ரமணியன், ரமேஷ், கலைவாணன், ரமேசு, ஜனனி உட்ட பலர் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூரில் நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- நவீன மறு நிலஅளவை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உமாச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், நவீன மறு நிலஅளவை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியறுத்தி வரும் 8ம்தேதி மாவட்ட அளவில் தர்ணா போராட்டமும், பிப்ரவரி 23ம்தேதி மண்டல அளவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் நில அளவையர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
- விபத்தில் பலத்த காயமடைந்த பிச்சை பிள்ளை, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அழகிரிபாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி பார்வதி(வயது 80). இவர் நேற்று அரியலூர் சென்று விட்டு இரவில் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் பயணம் செய்து மருதையான் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் அழகிரிபாளையத்திற்கு நடந்து சென்றபோது அரியலூரில் இருந்து பெரியம்மா பாளையம் செல்வதற்காக பிச்சை பிள்ளை(47) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பார்வதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பார்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிச்சை பிள்ளை, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஸ்கூட்டரில் சென்ற பெண் டாக்டரிடம் 8 பவுன் நகைகளை வாலிபர்கள் பறித்து சென்றனர்.
- போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரது மனைவி யாழினி (வயது 30). டாக்டரான இவர் பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.டி. பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று இரவு மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்து பெரம்பலூருக்கு தனது ஸ்கூட்டரில் வந்து கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.
பின்னர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருச்சி-சென்னை புறவழிச்சாலை செல்லும் வழியில் வீடு ஏதேனும் வாடகைக்கு உள்ளதா? என்று விசாரிப்பதற்காக அபிராமபுரம் வடக்கு தெரு நுழைவு வாயில் அருகே சென்றார். அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், திடீரென டாக்டர் யாழினியின் ஸ்கூட்டரை வழிமறித்தனர்.
மேலும் அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் மோதிரம் என 8 பவுன் நகைகளை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இது குறித்து டாக்டர் யாழினி பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்ராஜ் மகன் முகேஷ் (வயது10) என்பவர் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலை பள்ளிக்கு வந்த சரண்ராஜ், காம்பவுண்ட் இரும்பு கதவை திறந்து உள்ளார். அப்போது கதவின் மேல் கொண்டியில் தேய்மானம் ஏற்பட்டிருந்ததால் மாணவனின் இடது தொடை மீது இரும்பு கேட் விழுந்துள்ளது. இதில் மாணவனின் இடது கால் தொடை பகுதி எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூக்கு போட்டு தற்கொலை
- போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் எடத்தெருவை சேர்ந்த முருகேசன். பிரபல ரவுடியான இவர், கடந்த 2 நாட்களாக அவரது வீட்டிற்கு செல்லாமல் இவரது உறவினரான பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் செல்வக்குமார் என்பவரின் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதும் போவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகேசன் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட ெபாதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ெ பற்றார்.அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு தம்பதி மனு கொடுக்க வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது பெண்ணின் கைப்பையில் பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர. விசாரணையில், அவர்கள் வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது63). அவர் மனைவி விஜயா என்பதும் தெரியவந்தது. இவர்கள் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை தழுதாழை கிராமத்தை சேர்ந்த மணிச்செல்வன் (60). இவரது மகன் தமிழ்செல்வன். கந்தசாமி மகன் கோபிநாத் (38), ஜெகன் (22), மற்றும் அரும்பாவூரை சேர்ந்த இளங்கோவன் (40) ஆகியோர் அத்துமீறி நுழைந்து முத்துசோள பயிரினை அறுத்து திருடி சென்று விட்டனராம்.இது குறித்து கணேசன் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் மணிச்செல்வன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் தொடர்புடையர்களை இதுவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த கணேசன், அவரது மனைவி விஜயா கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து கணேசன் கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு சென்றார்.






