என் மலர்
நீலகிரி
தேவாலா போலீசார் சார்பில் பந்தலூர் பஜாரில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது.
பந்தலூர்:
தேவாலா போலீசார் சார்பில் பந்தலூர் பஜாரில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது. இதற்கு துணை சூப்பிரண்டு அமீர் அகமது தலைமை தாங்கினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி பேசும்போது, கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர்கள் திருஞானசம்பந்தம், பிரபாகரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா உறுதியான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள், தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 4 லட்சம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரியில் இதுவரை 4 லட்சம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா உறுதியான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள், தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 4 லட்சம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலூர்:
நீலகிரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரியில் 399 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் கூடலூரில் 63 கடைகளும், பந்தலூரில் 46 கடைகளும் உள்ளது. இங்கு சுமார் 800 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:-
ரேஷன் கடை ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்திய பிறகு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் கொய்மலர்கள் தேக்கம் அடைந்து உள்ளன.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் விவசாயிகள் மாற்று பயிராக கொய்மலர் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் அதிகமானோர் கொய்மலர் சாகுபடி செய்தாலும், தற்போது சுமார் 170 பேர் மட்டுமே அதை தொடர்ந்து வருகின்றனர்.
விவசாயிகள் வங்கி கடன் பெற்று கார்னேசன், லில்லியம், ஜெர்பரா, ஹைட்ராஞ்சியா உள்பட பல்வேறு ரகங்களை சாகுபடி செய்து உள்ளனர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது கொய்மலருக்கு கிராக்கி ஏற்படுவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு கொய்மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு கெடுபிடி அதிகரித்து இருக்கிறது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் கொய்மலர்கள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுகுறித்து கொய்மலர் சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் கொய்மலர் தேவை குறைந்து விட்டது. இதனால் வழக்கம்போல் பெங்களூருவுக்கு கொய்மலர்கள் அனுப்பி வைக்கப்படுவது இல்லை. இதனால் தேக்கம் அடைந்த கொய்மலர்கள் அழுகி வருகின்றன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் ரூ.18 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், கொய்மலர் சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே அரசு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் கேரட் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் சில விவசாயிகள் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி போன்ற இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிடுகின்றனர்.
இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, காவிலோரை, பட்டக்கொரை, பில்லிகம்பை, கதவுதொரை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஏராளமான பரப்பளவில் கேரட் பயிரிட்டு உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் போதுமான மழை பெய்தது. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
இதற்கிடையில் இந்த மாத முதல் வாரத்தில் கிலோவுக்கு ரூ.40 என்ற விலையில் கேரட் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனால் கேரட் பயிரிட்டு இருந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கேரட்டுகளை அறுவடை செய்து, விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் முதல் தர கேரட் கிலோவுக்கு ரூ.14 முதல் ரூ.20 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் தர கேரட் கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்பனையாகிறது. கேரட் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், அதை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர்.
இதுகுறித்து கதவுதொரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
ஒரு ஏக்கர் நிலத்தில் கேரட் பயிரிட சுமார் 1½ கிலோ விதை தேவைப்படுகிறது. சாதாரண கேரட் விதைகள் கிலோவுக்கு ரூ.35 ஆயிரம், ஹைபிரீட் விதைகள் கிலோவுக்கு ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. நந்தினி, ரொமான்ஸ், போர்ட் எப் போன், ஜிவேரா, அலமாடா உள்ளிட்ட பல்வேறு ரக விதைகள் உள்ளன. அதில் ரொமான்ஸ் மற்றும் அலாமாடா ரக விதைகளை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். ஒரு ஏக்கரில் கேரட் பயிரிட்டு அறுவடை செய்ய தொழிலாளர் சம்பளம், விதை, உரம், மருந்து உள்ளிட்ட செலவுகளுக்கு சுமார் ரூ.1½ லட்சம் செலவாகிறது.
அறுவடை செய்தால் 60 மூட்டைகள் முதல் 80 முட்டைகள் கேரட் கிடைக்கும். நல்ல உயர்தர விதையை பயன்படுத்தினால் 100 மூட்டைகள் முதல் 150 மூட்டைகள் வரை கிடைக்கும். ஒரு கிலோ கேரட் பயிரிட ரூபாய் 10 வரை செலவாகிறது. தற்போது கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், சமவெளி பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் கேரட்டுகளை கொண்டு சென்று விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படும். எனவே உள்ளூர் மார்க்கெட்டுகளிலேயே விற்பனை செய்து வருகிறோம்.

ஊட்டியில் கொரோனா சிகிச்சை மையமாக தனியார் பள்ளி மாற்றப்பட்டு உள்ளது. அங்கு 90 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 420 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா சிகிச்சை மையமாக ஊட்டி இளைஞர் விடுதி மாற்றப்பட்டு, 90 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊட்டியில் பெர்ன்ஹில் பகுதியில் உள்ள தனியார் பள்ளி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து நோயாளிகள் இருக்கும் அறைகள், கழிப்பறை, ஜன்னல், கதவுகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். அறை வாரியாக படுக்கைகள் போடப்பட்டு உள்ளது. நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு நேற்று முதல் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என 43 மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு தடுப்பூசி போட உள்ளனர்? என்பதை கொண்டு சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் தடுப்பூசிகளை பெற்று செல்கின்றனர். தடுப்பூசிகள் மீதமிருந்தால் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. தினமும் 2,500 முதல் 2,700 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-
சென்னையில் இருந்து நீலகிரிக்கு 12 ஆயிரம் கோவிஷில்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டது. கலெக்டர் அறிவுறுத்தியதையடுத்து நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தினமும் சராசரியாக 2,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கூடுதலாக தடுப்பூசி கேட்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்துக்கு 8 ஆயிரம் கொரோனா தடுப்பூசி இன்று (சனிக்கிழமை) வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
நீலகிரியில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட 73 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் முதல் தினமும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பந்தலூர் அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:
பந்தலூர் அருகே உள்ள பழைய நெல்லியாளம் நாராங்காவயலை சேர்ந்தவர் கங்காதரன், அரசு போக்குவரத்து கழக கண்டக்டர். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 24). இவர் சம்பவத்தன்று கோவைக்கு செல்வதாக வீட்டைவிட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கங்காதரன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி வாலிபரின் உடலை மீட்டனர். இதில் அவர் பிரசாந்த என்பதும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் மற்ற ஊழியர்கள் மற்றும் பணம் செலுத்துவது போன்றவற்றுக்காக வந்து சென்ற வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
ஊட்டி:
ஊட்டி கமர்சியல் சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் ஊழியருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தடுப்பு நடவடிக்கையாக வங்கி மூடப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டனர். வங்கியில் மற்ற ஊழியர்கள் மற்றும் பணம் செலுத்துவது போன்றவற்றுக்காக வந்து சென்ற வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதனால் சக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் ஆக்சிஜன் சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 420 படுக்கை வசதிகள் தயார் படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு தொற்று உறுதியான 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மோசமான நிலைக்கு சென்றால், தீவிர சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதி உள்ளது. மருத்துவமனையில் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி இருக்கிறது. இங்கிருந்து கொரோனா வார்டுகளுக்கு சிறிய குழாய்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. நேரடியாக ஆக்சிஜன் வசதியுடன் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா 2-வது அலையால் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால், கூடுதலாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி உள்ளது. தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவையான வசதிகள் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி ஊட்டிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ஆக்சிஜன் சேமித்து வைக்க புதியதாக தொட்டி அமைக்கப்பட உள்ளது. இதற்காக தனிதளம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், அவர்கள் சுவாசிக்க ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. ஈரோடு, கோவையில் இருந்து லாரியில் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு ஊட்டி மருத்துவமனையில் உள்ள தொட்டியில் நிரப்பப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் தொற்று உறுதியானவர்கள் சிகிச்சை பெற்று வருவதால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு நுழைவுவாயிலில், கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் வெளியே செல்லக்கூடாது. வெளியே இருந்து உள்ளே வரக்கூடாது என்று பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.

சிங்காரா வனப்பகுதியில் புலியை விஷம் வைத்து கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி வனத்துறையினர் ரோந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பெண் புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் சிறிது தொலைவில் 2 குட்டிகள் சத்தமிட்டு கொண்டு இருந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து, இறந்த புலியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் 2 குட்டிகளை மீட்டு சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் இறந்து கிடந்த புலியின் உடலை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது மாட்டு இறைச்சியில் விஷம் வைத்து புலி கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமையில் வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனத்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மசினகுடி ஆச்சக்கரையை சேர்ந்த அகமது கபீர் (வயது 22), சவுகத் அலி (55) மற்றும் அவரது மகன் சதாம் (29), குரும்பர்பாடியை சேர்ந்த கரியன் (25) ஆகியோர் புலியை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து அகமது கபீர், கரியன் ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கூடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள சதாம், சவுக்கத் அலி ஆகியோரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விஷம் வைத்து புலி கொல்லப்பட்ட வழக்கில், கடந்த 5 மாதங்களாக துப்பு துலங்காமல் இருந்தது. தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.