search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி அரசு ஆஸ்பத்திரி"

    • இளம்பெண் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தனியார் நிறுவன நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இளம்பெண் எவ்வளவு நாட்களாக நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வந்தார். மாயமாவதற்கு முன்பு உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிவித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் காவலாளிகள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்தின் மூலம் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தர்ஷனா என்ற பெண் ஊட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    நான் கடந்த சில ஆண்டுகளாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி நான் பணியில் இருந்தேன். அப்போது அங்கு வந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிலர் என்னை தொடர்ந்து வேலை பார்க்குமாறு தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    எனவே என்னை மிரட்டி தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    பின்னர் அவர் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னுடன் பணியாற்றி வந்த ஊட்டி கல்லட்டியை சேர்ந்த 23 வயது திருமணமான இளம்பெண்ணும் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த மே மாதம் 15-ந் தேதி இளம்பெண்ணும், நானும் இரவு பணியில் இருந்தோம். ஆனால் அதன்பின்னர் அவர் பணிக்கு வரவில்லை. கடந்த 2 மாதங்களாக நான் அவரை பார்க்கவே இல்லை. அவர் மாயமாகி விட்டார். அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றார்.

    இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

    முதலில் அந்த பெண் தன்னை தாக்கியதாக மட்டும் புகார் கூறி இருந்தார். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தன்னுடன் பணியாற்றிய இளம்பெண்ணை காணவில்லை என கூறியதை தொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய இளம்பெண் மாயமானது உண்மை தானா? என்பது குறித்தும் விசாரிக்க தொடங்கினர்.

    இது தொடர்பாக புகார் அளித்த தர்ஷனாவிடம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் இளம்பெண் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தனியார் நிறுவன நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண் எவ்வளவு நாட்களாக இந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வந்தார். மாயமாவதற்கு முன்பு உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிவித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இளம்பெண் மாயமாகி 2 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. உண்மையிலேயே அவர் மாயமானாரா அல்லது வேறு ஏதாவது இதில் நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×