search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா உறுதியான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள், தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 4 லட்சம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    Next Story
    ×