என் மலர்tooltip icon

    நீலகிரி

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து கள ஆய்வு மேற்கொண்டதில் ரூ.16,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி  மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து வருவாய்த்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரி யம் சார்பில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.

    தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 2019ம் ஆண்டு முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள்,  முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. 

    இதைதொடர்ந்து கடந்த 16ந்தேதி வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டி நகராட்சி பகுதியில் ஓட்டல்கள், பேக்கரி, உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 1.850 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து ரூ.3,200 அபராதமும், ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதி களில் 1,200 கிலோ பறிமுதல் செய்யப் பட்டு ரூ.2,300 அபராதமும், பேரூராட்சி பகுதியில் 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,200 அபராதமும் விதிக்கப்பட்டது.

    மேலும் குன்னூர் ஊராட்சிப்பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.500&ம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.500&ம், கூடலூர் ஊராட்சி பகுதியில் 400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.900 அபராதமும் விதிக்கப்பட்டது.

    17ந்தேதி ஊட்டி நகராட் சிக்குட்பட்ட மார்கெட், அப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 4 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமாக ரூ.6,200 வசூலிக்கப்பட்டது. 

    இதன் மூலம் 16, 17ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாடு குறித்து கள ஆய்வு மேற்கொண்டதில் ரூ.16,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
    ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 நபர்கள் வீதம் 45 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது:

     நீலகிரிமாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் 155 380ஆண் வாக்காளர்களும், 167723 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 3,23,111 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

    இத்தேர்தலில் 4 நகர £ட்சியில்108 பதவியிடங் களும், பேரூராட்சிகளில் 186 பதவியிடங்களும் ஆக மொத்தம் 294 பதவியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 291 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கண்ட 291 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. மேற்கண்ட 291 பதவியிடங்களுக்கு மொத்தம் 1253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    இத்தேர்தலுக்கு 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 55 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு இவ்வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 உதவி ஆய்வாளர், 1 தலைமைக் காவலர் மற்றும் ஒரு ஊர் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மீதமுள்ள 351 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி   கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 1 காவலர் வீதம் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் சாய்வுதளம் இருப்பதை ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் மூலம்  வாக்குச்சாவடிகளுக்கு இதுவரை 135 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு சாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் இதர வாக்குப் பதிவு பொருட்களை கொண்டு சேர்க்கும் பணிகளை  மேற்கொள்ள 43 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

    ஜெகதளா பேரூராட்சியில் அமைந்துள்ள 1வது வார்டில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடி வெகு தொலைவில் உள்ள காரணத்தால் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தனிச்சிற்றுந்து இப்பகுதியில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  தேர்தல் பறக்கும்படை மூலம் 16.02.2022 முடிய உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.49,93,260 பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கருவூலங்களில் வைக்கப் பட்டுள்ளது. இதில் 16.02.2022 முடிய உரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ள நபர்களுக்கு ரூ.34,48,550 மீள வழங்கப்பட்டுள்ளது. 

    பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி 22.02.2022 அன்று 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற வுள்ளது. இவ்வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிட ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு வங்கி அதிகாரிகள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 நபர்கள் வீதம் 45  நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    அடித்துக்கொலையா? என போலீசார் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கீதா. இவர் தனது முதல் கணவரை பிரிந்து 2&வதாக கார்த்திக் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.இருவரும் ஊட்டி வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்தீஷ்(வயது3), நித்தின்(1) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து கார்த்திக் தனது மனைவியை பிரிந்து, முதல் மகனான நித்திஷை அழைத்து கொண்டு கோவைக்கு வந்து விட்டார். கீதா, 2&வது மகன் நித்தினுடன் அந்த பகுதியிலேயே வசித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த கீதா வேகமாக, வேகமாக தனது மகனை தூக்கி கொண்டு வெளியில் ஓடி வந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் என்னவென்று விசாரித்தபோது, மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ஆட்டோவில் ஏறி மகனுடன், ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது ஆட்டோ டிரைவர் எதேச்சையாக பின்னால் திரும்பி பார்த்தபோது குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டார்.இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் கொண்டு அந்த பெண்ணை இறக்கி விட்டார். அவர் குழந்தையை தூக்கி கொண்டு ஆஸ்பத்தி ரிக்குள் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதற்கிடையே கீதாவை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் குழந்தையின் உடலில் காயம் இருக்கும் தகவல் குறித்து  கிராம நிர்வாக அலுவலரான அஜய்கானுக்கு தகவல் கொடுத்தார்.அவர் ஊட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று  இறந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மகன் இறப்பு குறித்து தாயிடம் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் குழந்தையின் தந்தையான கோவையில் இருக்கும் கார்த்திக்கையும் ஊட்டிக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் விசாரித்தனர். அவர்கள் குழந்தையை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதால் கீதா தாக்கியதில்  தான் குழந்தை இறந்ததா அல்லது இயற்கையிலேயே இறந்ததா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
    நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் தலைமையில்,  வட்டார தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோர்களுடன் வாக்குப் பதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.  அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் கூறியதாவது:

    நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதனையும், வாக்குப்பதிவு நாளில் மாதிரி வாக்குப்பதிவுகள் சரியாக நேரத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் செய்யப்பட்டுள்ளதா என்பதனையும், பின்னர் மாதிரி வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் அவை அழிக்கப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதி செய்ய வேண்டும்.

    வேட்பாளர்களின் முகவர் கள் தவிர வேறு எவரேனும் இருக்கின்றனரா என்பதனை கண்காணிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் உதகை நகராட்சியில் 13 பதற்றமான வாக்குச்சாவடிகளும், குன்னூர் நகராட்சியில் 5, கூடலூர் நகராட்சியில் 16, நெல்லியாளம் நகராட்சியில் 8, உலிக்கல் பேரூராட்சியில் 6, ஓவேலி பேரூராட்சியில் 7 என மொத்தம் 55 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    அந்த வாக்குச்சாவடிகளில் தேவையான போலீசார் பாதுக £ப்பு கூடுதலாக ஏற்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளில் முன்கூட்டியே தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று அனைத்து பணிகளும் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனையும் பார்வையிட வேண்டும். 

    தேர்தல் பொருட்கள் அனைத்தும் உள்ளதா என்பதனையும், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பதனையும் பார்வையிட்டு உறுதி செய்து, பயன்படுத்திய உபகரணங்கள் சரியான முறையில் அப்புறப் படுத்தப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதி செய்ய வேண்டும். 

    மாலை 5 மணிக்கு மேல் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  கொரோனா நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஊட்டி நகராட்சி, கேத்தி மற்றும் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பாதுகாப்பு பணிகள், வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தப்படும் தேர்தல் பொருட்களின் இருப்பு ஆகியவற்றை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஜென்மம் நிலங்கள்) குணசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நகர்புற உள்ளாட்சி தேர்தல்) சீனிவாசன் மற்றும் நுண்பார்வையாளர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    கூடலூர் அருகே 4½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மாற்றுத்திறனாளிக்க 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 52). மாற்றுத்திறனாளியான இவர் திருமணம் ஆனவர். கூலித்தொழிலாளி.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி அப்பாஸ், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4½ வயது சிறுமியை தனியாக அறைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதனால் அழுதபடி சென்ற அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினாள். புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் அப்பாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இந்த வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு கூறினார்.

    குற்றம் சாட்டப்பட்ட அப்பாசுக்கு சிறுமியை கடத்தி சென்றதற்கு 10 ஆண்டுகள், அறையில் அடைத்து துன்புறுத்தியதற்கு ஒரு ஆண்டு, 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 பிரிவுகளுக்கு 20 மற்றும் 7 ஆண்டுகள் என மொத்தம் 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இதேபோல 3 பிரிவுகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுடன் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், அப்பாசுக்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

    இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தண்ட னையை அப்பாஸ் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறி உள்ளதால் இதில் அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டு சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதாடிய போக்சோ சிறப்பு வக்கீல் செந்தில் தெரிவித்தார்.
    கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மூலம் பெறப்பட்டது.
    ஊட்டி:

    தமிழகத்தில் நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மூலம் பெறப்பட்டது. தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்றது.
     
    நேற்று ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியது. கட்டுமான பணி முடிவடையாததால் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வகுப்புகள் நடந்தது.

    ஊட்டி மருத்துவ கல்லூரியை தேர்வு செய்த மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வருகை தந்தனர். அவர்களின் அசல் சான்றுகள் சரிபார்க்கப் பட்டது. ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர் களுக்கான தொடக்க நிகழ்ச்சி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந் தது.
     
    ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் பழனிசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி ஆகியோர் தலைமையில், மருத்துவக் குழுவினர், பழங்குடியினர், நீலகிரியின் பாரம்பரிய இசையுடன் மாணவர்களை வரவேற்றனர். பின்னர், மாணவ, மாணவிகள் தர்மத்தின்படி பணி செய்வதாக உறுதிமொழி ஏற்றனர்.

    ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறுகையில், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 127 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. 23 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்படவுள்ளது. 

    இதில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 10 மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் ஒரு மாணவர், மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர்  என்ற அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் சேர்க்கையில் நீலகிரியைச் சேர்ந்த 3 மாணவிகள் உள்பட 86 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர் என்றார்.
    கடும் குளிரால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் நீர் பனி காணப்படும். அதன் பின் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி விழும்.  இச்சமயங்களில் கடும் குளிர் நிலவுவது வழக்கம். மேலும், இச்சமயங்களில் தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் மலர் செடிகள் பாதிக்கும். 

    அதேபோல், புற்கள் மற்றும் வனபகுதிகளும் காய்ந்துவிடும். ஆனால், இம்முறை துவக்கம் முதலே பனியின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. ஜனவரி மாதம் முதலே உறைப்பனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதியில் தேயிலை செடிகள் கருகின. பல இடங்களில் புற்கள் காய்ந்து போயின.

    கடந்த ஒரு வாரமாக பனியின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது. ஊட்டியில் மட்டுமே இரவு நேரங்களில் பனி காணப்பட்டது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பனியின் தாக்கம் சற்று குறைந்ததுடன், குளிரும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.  இந்நிலையில், நேற்று மாலை நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பனி மூட்டத்தால் மாலை நேரங்களில் குளிர் அதிக மாக  காணப்பட்டது. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வெண்மை ஆடைகளுடன் சுற்றுலா தலங்களில் வலம் வந்தனர்.
    போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவியின் தாய் அவரை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வராஜ்(26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.

    அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், செல்வராஜூக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து செல்வராஜ் மாணவியை அழைத்து கொண்டு சென்னைக்கு சென்றார். சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ், மாணவியுடன் ஊட்டிக்கு வந்து தங்கியுள்ளார்.

    இதற்கிடையே மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக நீலகிரி மாவட்ட சைல்டுலைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதுகுறித்து அந்த அமைப்பினர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த செல்வராஜ் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து தனித்தனியாக விசாரித்தனர்.

    விசாரணையில் மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மாயாற்றிற்கு அருகே வனத்தில் குட்டியானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முது மலை புலிகள் காப்ப கம், மசினகுடி வெளிமண்ட லத்திற்கு உட்பட்ட சீகூர், தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானை கள் வாழ்ந்து வருகின்றன.

    சிங்காரா வனச்சரகத்திற் குட்பட்ட வனப்பகுதியில் நேற்று வனத்துறை ஊழி யர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாயாற்றிற்கு அருகே வனத்தில் குட்டியானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

     இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். 

    பின்னர் இறந்த கிடந்த யானையை சோதனை மேற்கொண்டனர். அப்போது இறந்து கிடந்தது பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானை என்பது தெரியவந்தது. 

    மேலும் குட்டி யானையின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    காதலர் தினத்தால் ஊட்டியில் உள்ள மலர் விற்பனை நிலையங்கள், கிப்ட் ஷாப்கள் அனைத்திலும் காதல் ஜோடிகளாகவே தென்பட்டனர். சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகளே இருந்தனர்.
    ஊட்டி:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு நேற்று முதலே காதல் ஜோடிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் காதல் ஜோடிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஊட்டியில் உள்ள ஓட்டல்களில் தங்கினர். ஓட்டல்களுக்கு வந்த காதல் ஜோடிகளை ஓட்டல் நிர்வாகத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இன்று காலை காதல்ஜோடியினர் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு சென்று சுற்றி பார்த்தனர். அங்குள்ள கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்தனர்.

    பின்னர் புல்வெளியில் அமர்ந்து மனம் விட்டு பேசி ஒருவருக்கொருவர் காதலர் தின பரிசாக ரோஜா பூ, பல்வேறு பரிசு பொருட்களையும் மாறி மாறி வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

    தொடர்ந்து ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்கார படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் ஜோடியாக படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    காதலர் தினத்தால் ஊட்டியில் உள்ள மலர் விற்பனை நிலையங்கள், கிப்ட் ஷாப்கள் அனைத்திலும் காதல் ஜோடிகளாகவே தென்பட்டனர். சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகளே இருந்தனர்.

    காதல் ஜோடியினர் பொது இடங்களில் அத்துமீறாமல் இருக்கவும், அதே சமயம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்

    போலீசார் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காதல் ஜோடிகளை தொந்தரவு செய்பவர்களையும், அத்துமீறும் காதல்ஜோடிகளையும் எச்சரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    நீலகிரி மாவட்டத்தில் 21 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வனக்கோட்டம் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் உள்ள அணை கள், நீர்நிலைகளில் அரிய வகை பறவைகள், இடம்பெயர்ந்து வரும் பறவைகள், நீலகிரி வாழ் பறவைகள் காணப்படுகின்றன. வனத்துறை மூலம் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    இதையொட்டி நேற்று ஊட்டியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அலுவலக அரங்கில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடந்தது.இதில் நீலகிரி வனக்கோட்ட அலுவலர் சச்சின் பேசும்போது, பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் பாதுகாப்பாக ஈடுபட வேண்டும். தொலைநோக்கி மூலம் பார்க்கும் பறவைகள், நேரில் பார்க்கும் பறவைகளை அடையாளம் காண நன்கு தெரிந்த நபர் மற்றும் அதற்கான புத்தகத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றார். இதில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். 

    பின்னர் வனக்கோட்ட அலுவலர் சச்சின் நிருபர்களிடம் கூறும் போது, நீலகிரியில் 21 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கப்படுகிறது. தன்னார்வலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பிரித்து அனுப்பப்படுகின்றனர். 

    கணக்கெடுப்பின் மூலம் பதிவு செய்யப்படும் விவரங்கள் சென்னையில் உள்ள வனத்துறை தலைமையிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.கடநாடு பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமராக்களில் புலி உருவம் பதிவானால், சம்பந்தப்பட்ட புலியை அடையாளம் கண்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    ஊட்டி வடக்கு வனச்சரகத் துக்கு உட்பட்ட காமராஜ் சாகர் அணை, எர்த்தன் அணை, டை கர்ஹில் அணை, மார்லிமந்து அணை, ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு அணை, ஊட்டி ஏரி, பைக்காரா, முக்கூருத்தி, கிளன்மார்கன், அப்பர்பவானி, ரேலியா அணைகள், தெப்பக்காடு, தொரப்பள்ளி ஆறு பகுதிகள், மசினகுடி ஏரி, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட 21 நீர்நிலைகளில் நீலகிரி வாழ் பறவைகள், இடம்பெயர்ந்து வந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது . இதற்காக 21 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 
    நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன
     ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ள 491 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 491 வாக்குப் பதிவு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு பிரித்தளிக்கப்பட்டு பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த எந்திரங்களில் வாக்குச் சீட்டு பட்டியலை ஒட்டவும், வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை பதியவும் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடியில் உள்ள எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அதனை சரிபார்க்கவும், வாக்கு எண்ணிக்கை நாளன்று எந்திரங்களில் கோளாறுகள் ஏதும் ஏற்படும் பட்சத்தில் அதனை சரி பார்க்கவும் 6 பொறியாளர்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இவர்கள் பிப்ரவரி 22ந்தேதி முடிய இப்பணியினை மேற்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளனர். 

    முதல் கட்டமாக ஊட்டி நகராட்சியிலும், தொடர்ந்து பிப்ரவரி 16ந் தேதி வரை அனைத்து நகர உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்கொள்ள உள்ளனர். இந்த பணியினை துரிதமாக முடித்திடுமாறு பொறியாளர்களுக்கு  மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். 
    ×