என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ள 491 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 491 வாக்குப் பதிவு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு பிரித்தளிக்கப்பட்டு பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த எந்திரங்களில் வாக்குச் சீட்டு பட்டியலை ஒட்டவும், வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை பதியவும் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடியில் உள்ள எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அதனை சரிபார்க்கவும், வாக்கு எண்ணிக்கை நாளன்று எந்திரங்களில் கோளாறுகள் ஏதும் ஏற்படும் பட்சத்தில் அதனை சரி பார்க்கவும் 6 பொறியாளர்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இவர்கள் பிப்ரவரி 22ந்தேதி முடிய இப்பணியினை மேற்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக ஊட்டி நகராட்சியிலும், தொடர்ந்து பிப்ரவரி 16ந் தேதி வரை அனைத்து நகர உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்கொள்ள உள்ளனர். இந்த பணியினை துரிதமாக முடித்திடுமாறு பொறியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
Next Story






