என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வாக்காளர்கள் வசதிக்காக அரசு மினிபஸ் வசதி - கலெக்டர் அம்ரித் தகவல்
ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 நபர்கள் வீதம் 45 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது:
நீலகிரிமாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் 155 380ஆண் வாக்காளர்களும், 167723 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 3,23,111 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இத்தேர்தலில் 4 நகர £ட்சியில்108 பதவியிடங் களும், பேரூராட்சிகளில் 186 பதவியிடங்களும் ஆக மொத்தம் 294 பதவியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 291 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கண்ட 291 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. மேற்கண்ட 291 பதவியிடங்களுக்கு மொத்தம் 1253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலுக்கு 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 55 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு இவ்வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 உதவி ஆய்வாளர், 1 தலைமைக் காவலர் மற்றும் ஒரு ஊர் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மீதமுள்ள 351 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 1 காவலர் வீதம் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் சாய்வுதளம் இருப்பதை ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு இதுவரை 135 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு சாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் இதர வாக்குப் பதிவு பொருட்களை கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொள்ள 43 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெகதளா பேரூராட்சியில் அமைந்துள்ள 1வது வார்டில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடி வெகு தொலைவில் உள்ள காரணத்தால் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தனிச்சிற்றுந்து இப்பகுதியில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும்படை மூலம் 16.02.2022 முடிய உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.49,93,260 பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கருவூலங்களில் வைக்கப் பட்டுள்ளது. இதில் 16.02.2022 முடிய உரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ள நபர்களுக்கு ரூ.34,48,550 மீள வழங்கப்பட்டுள்ளது.
பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி 22.02.2022 அன்று 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற வுள்ளது. இவ்வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிட ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு வங்கி அதிகாரிகள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 நபர்கள் வீதம் 45 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story






