என் மலர்
நீலகிரி
- போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குக்கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வரும் வாகனங்கள் மாற்று சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
கோத்தகிரி,
கோத்தகிரி நெடுஞ்சாலை துறை சார்பில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சாலைகள் மற்றும் குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்யும் பணி, சாலையோர தடுப்புச்சுவர்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் கட்டும் பணி, சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு கிராமத்திற்கு செல்லும் சாலையில் குறுகிய வளைவை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. மேலும் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் 2 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் ஒரு பணி நிறைவு பெற்றது. இந்தநிலையில் தொடர் மழை காரணமாக 2-வது தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. பின்னர் கடந்த ஜூலை மாதம் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கியது. இந்த பணியை விரைந்து முடிப்பதற்காக அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யபட்டது. இதையடுத்து இந்த சாலை வழியாக ஏராளமான குக்கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் மினி பஸ்கள், தனியார் வாகனங்கள் மாற்று சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் 10 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு, அதில் மண் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டி, மண்ணை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வாரங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்து, அந்த சாலை வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கீழ்க்காத்தேரி ரேஷன் கடை எதிரில் மாடு இறந்து கிடந்தது.
- 3 பசுமாடுகள் வளர்த்து வந்தனர்.
அரவேனு,
கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னான். இவரது மனைவி செல்லம்மா. இவர்கள் 3 பசுமாடுகள் வளர்த்து வந்தனர்.
வழக்கமாக மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் மாலையில் வீடு திரும்பி விடும். ஆனால் 2 மாடுகள் மட்டுமே வீடு திரும்பி இருந்தது. ஒரு மாட்டை காணவில்லை.
மாட்டை தேடிச் சென்றபோது கீழ்க்காத்தேரி ரேஷன் கடை எதிரில் மாடு இறந்து கிடந்தது.
சிறுத்தைப்புலி தாக்கியதில் மாடு இறந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- விரிசல் எப்படி ஏற்பட்டது என தெரியாததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.
- புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் நடுகூடலூா் பகுதியில் பல வீடுகளின் சுவா்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
இந்த விரிசல் எப்படி ஏற்பட்டது என தெரியாததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. பல வீடுகளில் சுவா் பிளந்த நிலையில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து வருவாய்த் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து ஊட்டியில் உள்ள மத்திய நீா் மற்றும் மண்வள ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி டாக்டா் மணிவண்ணன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதிக அளவில் பெய்த மழையின் காரணமாக பூமிக்கடியில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் இந்த திடீா் பிளவு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறினா்.
தொடா்ந்து இது குறித்து ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் கூறினா்.
- தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- மாணவிகள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
அரவேனு
கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு கோத்தகிரி போலீஸ் நிலையம் சார்பில் போக்சோ சட்டம் மற்றும் போதை பொருட்கள் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி, கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்ர் சேகர் மற்றும் போலீசார் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, சமூக வலைதளங்களை மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை போலீசார் வழங்கினர். இதில் மாணவிகள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பாதிப்படைந்தனர்.
- பஸ்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் உள்ள அரக்காடு பகுதிக்கு ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்சில் அரக்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தினமும் சென்று பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டியில் இருந்து அரக்காடுக்கு செல்லும் பஸ்கள் விதிமுறைகளை மீறி எல்லநல்லியில் இருந்து திரும்பி விடுவதாகவும், அரக்காடு பகுதிக்கு வருவது இல்லை என்றும், இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அவதிப்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இதேபோல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பாதிப்படைந்தனர். இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் விசாரணை நடத்தினார். இதில் தனியார் பஸ்கள் விதிகளை மீறி பாதியில் திரும்பி வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 6 தனியார் பஸ்களை அதிரடியாக பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும் பஸ்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து துறையினர் பஸ்களை பறிமுதல் செய்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி உள்ளனர்.
எல்லநல்லியில் இருந்து அரக்காடு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் தான் பஸ்கள் செல்லவில்லை என்று பஸ் உரிமையாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் அரக்காடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- 3 அவுட்டுக்காய்களை போலீசார் கைப் பற்றினர்.
- பசுமாட்டின் வாய்ப்பகுதி வெடித்து சிதறியது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், வெலிங்டன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாரிமுத்து காலனியில் பசுமாடு ஒன்று அவுட்டுக்காயை கடித்தது.
இதில் பசுமாட்டின் வாய்ப்பகுதி வெடித்து சிதறியது. இது தொடர்பாக வி.ஏ.ஓ. அருள்ரத்தினம் கொடுத்த புகாரின் ேபரில் வெலிங்டன் போலீசாா் வெடிவைத்தல், விலங்குகளை துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனா்.இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள கோடேரி சேலாஸ் பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ்குமாா்(31) என்பவரை போலீசாா் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சந்தோஷ்குமார், சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து அதில் வெடிமருந்துகளை பிரித்து அவுட்டுக்காய் தயாரித்ததும், காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வைத்திருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத் தனர். அவரிடம் இருந்து 3 அவுட்டுக ்காய்களை போலீசார் கைப் பற்றினர்.
- சில தினங்களுக்கு முன், சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டிருந்தது
- புவியியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, சனீஸ்வரன் கோவில் அருகே, சில தினங்களுக்கு முன், சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று விரிசல் மேலும், அதிகரித்து இருந்தது.
தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வம், சேலம் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் குப்புசாமி, உதவி கோட்ட பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் பிரேம்குமார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.ஆய்வில், சாலையில் 80 மீட்டர் தூரம் விரிசல் ஏற்பட்டதுடன், சாலையிலிருந்து 100 மீட்டர் தாழ்வான பகுதியில், தனியார் தேயிலை தோட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த விரிசல் மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விரிசல் ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்துள்ளோம். இப்போதைக்கு சாலையில் வாகனங்கள் செல்வதால் பாதிப்பு இல்லை.
அப்பகுதியை புவியியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில், அப்பகுதியில் மேற்கொள்ள நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என, கூறினர்.
- வெகுநேரமாக குடியிருப்பு பகுதிக்குள்ளேயே யானைகள் சுற்றி திரிந்தன.
- அகழிகள் வெட்டி தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்கள் அனைத்தும் வனத்ைதயொட்டி இருக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிரா மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
சோலூர் மட்டம் அருகே உள்ள முடியூர், வக்கனாமரம் கிராமத்திற்குள் நேற்று 5 காட்டு யானைகள் கூட்டம், நுழைந்தது. வெகுநேரமாக குடியிருப்பு பகுதிக்குள்ளேயே யானைகள் சுற்றி திரிந்தன.
யானை வந்ததை அறிந்த பொதுமக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். வேலை பார்த்து கொண்டு இருந்தவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் சுற்றிய காட்டு யானைகள் திடீரென குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரியை அடித்து நொறுக்கியது.பின்னர் அங்கிருந்து சென்றன. தொடர்ந்து யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கிராமபு றங்களுக்கு வராதவண்ணம் அகழிகள் வெட்டி தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
- குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா்.
- போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
குன்னூர்: -
நீலகிரி மாவட்டம் ஊட்டி-குன்னூா் சாலையில் அமைந்துள்ளது மந்தாடா ராஜ்குமாா் நகா்.
கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட இப்பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதி சரிவான மலைப் பகுதியில் அமைந்துள்ளது.
குடிநீா் விநியோகம் தொடா்பாக கேத்தி பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்ப டவில்லை. இருப்பினும் கடந்த வாரத்தில் பெய்து வந்த மழையால் மழை நீரையே குடிநீருக்காக பிடித்து வைத்து பயன்ப டுத்தி வந்தனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊட்டி-குன்னூா் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, கேத்தி பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் கேத்தி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, அடுத்த 2 நாள்களுக்குள் இப்பகுதியின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா். மேலும், உடனடியாக அப்பகுதிக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். சாலை மறிய லால் ஊட்டி-குன்னூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மழை கொட்டித் தீா்த்தது.
ஊட்டி:
நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக 2-வது வாரத்தில் தொடங்கியது.
அதன்பின் கடந்த மாதம் வரை தீவிரமாக மழை பெய்து. இது வழக்கத்தைவிட 91 சதவீதம் அதிகம். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 3-ந் தேதி முதல் 8 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது.
இதுவரை தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்த மழையால் அவலாஞ்சி, ஊட்டி, கூடலூர் பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளது.
இதுதொடர்பாக கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மழை கொட்டித் தீா்த்தது. இதுவரை தென்மேற்கு பருவ மழையானது இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது.
மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். 3 போ் காயமடைந்துள்ளனா். 2 மாடுகள் இறந்துள்ளன. 128 மரங்கள் சாய்ந்தன. 258 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண தொகையும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை கணக்கெடுத்து அவற்றையும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனா். மேலும், ஊட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகளில் காரட் மற்றும் பீட்ரூட் தலா 5 ஏக்கரிலும், தேயிலை 4 ஏக்கரிலும், கூடலூா் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை 2 ஏக்கரிலும் சேதமடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
- தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்
ஊட்டி:
நாடு முழுவதும் உள்ள தேசிய வன உயிரின காப்பகத்தில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சூழல் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும்.
இதுதொடர்பாக மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனால் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்து உள்ளது. மேலும் பொது மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அறிவித்து உள்ளனர்.
- சுதந்திர தினத்தையொட்டி 13, 14, 15-ந் தேதிகள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
ஊட்டி:
சுதந்திர தினத்தையொட்டி 13, 14, 15-ந் தேதிகள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை கழிக்க மலைகளின் அரசியான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர்.
நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மலர்களை கண்டு ரசித்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
படகு இ்ல்ல சாலையில் குதிரை சவாரி சென்று குதூகலம் அடைந்தனர். இதேபோல் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் விடுமுறையான 3 நாட்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.






