search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction of the retaining wall"

    • போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • குக்கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வரும் வாகனங்கள் மாற்று சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோத்தகிரி,

    கோத்தகிரி நெடுஞ்சாலை துறை சார்பில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சாலைகள் மற்றும் குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்யும் பணி, சாலையோர தடுப்புச்சுவர்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் கட்டும் பணி, சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு கிராமத்திற்கு செல்லும் சாலையில் குறுகிய வளைவை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. மேலும் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் 2 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் ஒரு பணி நிறைவு பெற்றது. இந்தநிலையில் தொடர் மழை காரணமாக 2-வது தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. பின்னர் கடந்த ஜூலை மாதம் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கியது. இந்த பணியை விரைந்து முடிப்பதற்காக அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யபட்டது. இதையடுத்து இந்த சாலை வழியாக ஏராளமான குக்கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் மினி பஸ்கள், தனியார் வாகனங்கள் மாற்று சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் 10 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு, அதில் மண் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டி, மண்ணை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வாரங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்து, அந்த சாலை வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×