என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவுட்டு காய் வெடித்து"

    • 3 அவுட்டுக்காய்களை போலீசார் கைப் பற்றினர்.
    • பசுமாட்டின் வாய்ப்பகுதி வெடித்து சிதறியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், வெலிங்டன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாரிமுத்து காலனியில் பசுமாடு ஒன்று அவுட்டுக்காயை கடித்தது.

    இதில் பசுமாட்டின் வாய்ப்பகுதி வெடித்து சிதறியது. இது தொடர்பாக வி.ஏ.ஓ. அருள்ரத்தினம் கொடுத்த புகாரின் ேபரில் வெலிங்டன் போலீசாா் வெடிவைத்தல், விலங்குகளை துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனா்.இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள கோடேரி சேலாஸ் பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ்குமாா்(31) என்பவரை போலீசாா் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சந்தோஷ்குமார், சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து அதில் வெடிமருந்துகளை பிரித்து அவுட்டுக்காய் தயாரித்ததும், காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வைத்திருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டாா்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத் தனர். அவரிடம் இருந்து 3 அவுட்டுக ்காய்களை போலீசார் கைப் பற்றினர்.

    ×