என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி-கூடலூர் சாலையில் திடீர் விரிசல்
- சில தினங்களுக்கு முன், சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டிருந்தது
- புவியியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, சனீஸ்வரன் கோவில் அருகே, சில தினங்களுக்கு முன், சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று விரிசல் மேலும், அதிகரித்து இருந்தது.
தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வம், சேலம் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் குப்புசாமி, உதவி கோட்ட பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் பிரேம்குமார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.ஆய்வில், சாலையில் 80 மீட்டர் தூரம் விரிசல் ஏற்பட்டதுடன், சாலையிலிருந்து 100 மீட்டர் தாழ்வான பகுதியில், தனியார் தேயிலை தோட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த விரிசல் மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விரிசல் ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்துள்ளோம். இப்போதைக்கு சாலையில் வாகனங்கள் செல்வதால் பாதிப்பு இல்லை.
அப்பகுதியை புவியியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில், அப்பகுதியில் மேற்கொள்ள நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என, கூறினர்.






