என் மலர்
நீலகிரி
- பொருட்களின் இருப்பு குறித்து கடைகளில் இருந்த விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தார்.
- பொருட்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூர் ெரயில்வே ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் அருவங்காடு கோபாலபுரம் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ெரயில்வே ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடையில் ஆய்வு செய்தபிறகு பொருட்களின் இருப்பு விவரம், விலைப்பட்டியல், கடை செயல்படும் நேரம், வார விடுமுறை நாள், கண்காணிப்பு குழு உறுப்பினர் விவரம், தீயணைப்பு உபகரணம், முதலுதவி பெட்டி, அத்தியாவசிய பொருட்களின் மாதிரிகள் போன்ற விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும்.
புகார் பதிவேடு, கண்காணிப்பு குழு பதிவேடு, அங்கீகார சான்று, உணவு பாதுகாப்பு சான்று, எடை எந்திர சான்று போன்றவற்றை விற்பனையாளர்கள் பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து அருவங்காடு கோபாலபுரம் முன்னாள் ராணுவத்தினர் கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, மண் எண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை, கடையின் செயல்பாடு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்களிடம் கடையின் செயல்பாடுகள், வழங்கப்பட்டு வரும் அரிசி மற்றும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்து, அவர்களு்ககு பொருட்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, குன்னூர் தாசில்தார் சிவக்குமார், குன்னூர் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
- இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
கோத்தகிரி,
கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கோத்தகிரி பேருந்துநிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருவதால் தெருநாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று இரவு கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குன்னூர் செல்வதற்காக பயணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரை 7 தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்க முயன்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தெருநாய்களை துரத்திவிட்டதால் அந்த பயணி தெருநாய்களிடம் தப்பித்து சென்றார். இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- யானை 50 வீடுகளை இடித்து தள்ளியதோடு, அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சேதப்படுத்தியது.
- யானை நடமாட்டம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான வாழவயல், தேவாலா அட்டி, பொன்னூர், நாடுகாணி, முண்ட குன்னு, பாடந்துறை, புளியம்பாறா பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசி ராஜா யானை சுற்றி திரிந்தது.
இந்த யானை 50 வீடுகளை இடித்து தள்ளியதோடு, அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சேதப்படுத்தியது.
மேலும் வாழவயல், புளியம்பாறை பகுதிகளில் 2 பெண்களையும் மிதித்து கொன்றது.
தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அரிசிராஜா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதனை தொடர்ந்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சீனிவாச ரெட்டி பிறப்பித்தார்.
உடனடியாக நீலகிரி மாவட்ட மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ் தலைமையில் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் மேற்பார்வையில் 60க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் அரிசி ராஜா யானையை கண்காணிக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டனர்.
மேலும் கண்காணிப்பு கேமிராக்கள், டிரோன் கேமிரா மற்றும் பரண் அமைத்தும் யானையை கண்காணித்து வந்தனர்.
ஆனால் அரிசி ராஜா யானை சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்ததுடன், கண்காணிப்பையும் மீறி அரிசி ராஜா யானை மேலும் 4 வீடுகளை சேதப்படுத்தியது.
இந்த நிலையில் அரிசி ராஜா யானை புளியம்பாறை அடுத்த நீடில் ராக் காப்பிகாடு பகுதிக்கு வந்தது.
அப்போது அங்கு பரண் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் அவர்களது உத்தரவின் பேரில் அங்கு இருந்த கால்நடை டாக்டர்கள் 2 மயக்க ஊசியை செலுத்தினர். இதில் சில மீட்டர் தூரம் நடந்து சென்ற யானை மயங்கி விழுந்தது.
உடனடியாக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அரிசி ராஜா யானையின் கால்களில் கயிறுகட்டி, கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது.
பின்னர் யானையை முதுமலை வனப்பகுதியில் அடர்ந்த காட்டிற்குள் விட்டனர். இதனால் வாழவயல், புளியம்பாறை உள்ளிட்ட பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் அந்த யானையை வனத்திற்குள் விடாமல் கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானையை பிடிக்க 18 நாட்களாக இரவு, பகல் பாராமல் போராடிய வனத்துறையினருக்கு வனத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கிைடயே கிராமங்களில் அட்டகாசத்தில் ஈடுபட்டு பிடிக்கப்பட்ட அரிசி ராஜா யானையை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிராஜா யானை பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரேடியோ காலர் பொருத்தும்பட்சத்தில் யானை எங்கு செல்கிறது. யானை நடமாட்டம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வாச்சிக்கொல்லி, புளியம்பாறை பகுதியில் பி.எம்.2 காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மரங்கள் மீது பரண் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
- 2 வாரங்களுக்கும் மேலாக தேவாலா, புளியம்பாரை, பாடந்தொரை உள்ளிட்ட சுற்று வட்டார வனப்பகுதியில் காட்டு யானையை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி,
கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவரை கடந்த மாதம் 20-ந் தேதி பி.எம்.-2 என அழைக்கப்படும் காட்டு யானை தாக்கி கொன்றது. இதை தொடர்ந்து காட்டு யானையை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக 4 கும்கி யானைகளை முதுமலையில் இருந்து வனத்துறையினர் அழைத்து வந்தனர். தொடர்ந்து 2 வாரங்களுக்கும் மேலாக தேவாலா, புளியம்பாரை, பாடந்தொரை உள்ளிட்ட சுற்று வட்டார வனப்பகுதியில் காட்டு யானையை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், காட்டு யானை அங்கிருந்து இடம்பெயர்ந்து உள்ளது. இதனால் கால்நடை மருத்துவக் குழுவினர், வன ஊழியர்கள் ரோந்து சென்று டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
ஆனால், காட்டு யானையின் இருப்பிடத்தை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. Also Read - நடப்பு ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை பரண் அமைத்து கண்காணிப்பு இந்தநிலையில் நேற்று வாச்சிக்கொல்லி, நீடில் ராக், தேவர்சோலை எஸ்டேட், வுட்பிரையர் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- சுவரை உடைத்து வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.
- தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
ஊட்டி,
கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பெட்டு வன சரக்கத்துக்கு உள்பட்ட நடுஹட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேல்புறத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி வீட்டின் பின்புறத்தில் உள்ள தடுப்புச் சுவருக்குள் விழுந்தது. அங்கிருந்து வெளியேற முடியாமல் நீண்ட நேரமாக தவித்தது.
இது குறித்து தகவலறித்து வந்த வனத் துறையினா், வீட்டின் தடுப்புச் சுவரை உடைத்து காட்டெருமையை பத்திரமாக மீட்டனா். பின்னா் அதை பத்திரமாக வனப் பகுதிக்குள் விரட்டினா். தடுப்புச் சுவா் உடைக்கப்பட்டதால் வீட்டின் உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்க வனத் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கருஞ்சிறுத்தை, சிங்காரா பகுதியில் தேயிலை தோட்டத்தில் பாறை மீது அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டு இருந்தது.
- கருஞ்சிறுத்தையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி,
குன்னூரில் இருந்து லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் செல்லும் சாலையில் சிங்காரா தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதி உள்ளது.
அங்கு தோட்டங்கள், வனப்பகுதிகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருஞ்சிறுத்தை, சிங்காரா பகுதியில் தேயிலை தோட்டத்தில் பாறை மீது அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டு இருந்தது.
இந்த கருஞ்சிறுத்தை காலை 7 மணி முதல் 9 மணி வரை என 2 மணி நேரம் பாறையில் அமர்ந்து இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்னர் கருஞ்சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
- கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது
ஊட்டி,
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்களின் நலத்துறை சார்பில், கொடி நாள் தினத்தை முன்னிட்டு, கொடி நாள் நிதி வழங்கி, கொடி நாள் வசூலினை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
இந்திய நாட்டின் முப்படைகளில் பணியாற்றி, பாதுகாப்புப் படைவீரர்கள் தங்களது இளமை காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை நமது தேசத்திற்காக தன்னலம் கருதாது தங்களது உயிர் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தும் நமது நாட்டிற்காக பணியாற்றி வருகின்றனர். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
நமது நாட்டில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய மாநில அரசு மூலமாக வாழ்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவர்களில் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றி உயிரிழந்தோர்களின் வாரிசுதாரர்களுக்கு உதவித்தொகை. குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் சிறார்கள் உயர்கல்விகளில் பயில்வதை ஊக்குவித்தும், படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு கண்கண்ணாடிகள் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனைதொடர்ந்து, போரில் பணியின் போது உயிரிழந்தோரின் வாரிசுகள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் குருப்-சி மற்றும் டி பதவிகளில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு முன்னுரிமை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் படைவீரர்களுக்கென குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்திட கொடிநாள் நிதி வசூல் தொகை பொது மக்களிடமிருந்து பல்வேறு துறை அதிகாரிகளால் திரட்டப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு கொடி நாளுக்காக ரூ.86.39 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவில் ரூ.1. 39- கோடி (161 சதவீதம்) நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்கு ரூ.91.26 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடிநாள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடமும் படைவீரர் கொடிநாள் நிதிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட கூடுதலாக கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பகுதி, வார்டு செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின் படி தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கி பேசினார். அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சாந்திராமு, கருப்புசாமி முன்னிலை வகித்தனர். ஊட்டி நகர செயலாளர் க. சண்முகம் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு மற்றும் அ.தி.மு.க பேரூர், நகர, ஒன்றிய, பகுதி, வார்டு செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- முதியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- ரத்தசோகை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட மருத்துவர் அணி சார்பில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் அறிவுறுத்தல் படி, மஞ்சூரில் உள்ள யுனிவர்சல் அமைதி முதியோர் இல்லத்தில் நீலகிரி மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பவிஸ் தலைமையில், முதியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதேபோல் குன்னூரில் சீயோன் ரத்த பரிசோதனை நிலையத்தின் சார்பில் பயனாளிகள் அனைவருக்கும் இலவசமாக ரத்த அழுத்தம் ,ரத்த சக்கரை அளவு, ரத்தசோகை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது.
- சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.
- மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகம் வாச்சிக்கொல்லி பீட்டில் சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்.மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலா் கருப்பையா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் இறந்து கிடந்தது, ஒன்றரை வயதுடைய ஆண் யானை குட்டி என்றும், நோய் தொற்று காரணமாக இந்த குட்டி யானை இறந்ததாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
- ஊட்டி முள்ளிக்கொரை ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கம்பளி போர்வைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கினார்.
ஊட்டி,
தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஊட்டி முள்ளிக்கொரை ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கம்பளி போர்வைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கினார்.விழாவில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், ஊட்டி நகராட்சி உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, திவ்யா, மீனா, ரகுபதி, கஜேந்திரன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ஜெயராமன், மேத்யூஸ், மார்கெட் ரவி, தியாகு, மத்தீன், நிர்வாகிகள் எச்பி்எப் ரவி, சபீர், ஆகாஷ் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
- ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
- பொன்னானியில் ஆறு செல்கிறது.
ஊட்டி,
பந்தலூர் அருகே பொன்னானி, சக்கரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னானியில் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது அருகே பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் சில வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொன்னானி ஆற்றை தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை மூலம் ெபாக்லைன் எந்திரம் மூலம் ஆறு தூர்வாரப்பட்டது. இந்தநிலையில் பொன்னானியில் இருந்து அம்மங்காவு செல்லும் சாலையில் பாலம் அருகே சக்கரைகுளம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. தடுப்புச்சுவர் அதே பகுதியில் ஆதிவாசி காலனி இருக்கிறது. அப்பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் மண்அரிப்பு ஏற்பட்டு உள்ளதால், பலத்த மழை பெய்யும் சமயங்களில் காலனி உள்பட கிராமத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து தேங்கும் நிலை காணப்படுகிறது.






