என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leopard roaming"

    • கருஞ்சிறுத்தை, சிங்காரா பகுதியில் தேயிலை தோட்டத்தில் பாறை மீது அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டு இருந்தது.
    • கருஞ்சிறுத்தையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    ஊட்டி,

    குன்னூரில் இருந்து லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் செல்லும் சாலையில் சிங்காரா தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதி உள்ளது.

    அங்கு தோட்டங்கள், வனப்பகுதிகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருஞ்சிறுத்தை, சிங்காரா பகுதியில் தேயிலை தோட்டத்தில் பாறை மீது அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டு இருந்தது.

    இந்த கருஞ்சிறுத்தை காலை 7 மணி முதல் 9 மணி வரை என 2 மணி நேரம் பாறையில் அமர்ந்து இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்னர் கருஞ்சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. 

    ×