என் மலர்
நீலகிரி
- இரண்டு குட்டிகளுடன் 3 பெரிய காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது.
- மஞ்சூரில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் அரசு பஸ் கோவைக்கு வந்து கொண்டிருந்தது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.
சமீபகாலமாக இரண்டு குட்டிகளுடன் 3 பெரிய காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்று மஞ்சூரில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் அரசு பஸ் கோவைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது கெத்தை அருகே குட்டிகளுடன் சாலையை மறித்தபடி யானைகள் நின்று கொண்டிருந்தது. இதை கண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரமாக ஒதுக்கி நிறுத்தினார். மேலும் கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல வேண்டி இரண்டு கார்களில் சென்ற பயணிகளும் காட்டு யானைகளை கண்டு பீதி அடைந்ததுடன் தங்களது வாகனங்களை சற்று தொலைவாக நிறுத்தினார்கள்.
சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையோரத்தில் இருந்த செடி,கொடிகளை பிடுங்கி மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் குட்டிகள் இரண்டும் மெதுவாக நகர்ந்தது. இதைத்தொடர்ந்து யானைகள் குட்டிகளை பின்தொடர்ந்து சாலையோரம் இருந்த மண் பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி சென்றது. இதன் பிறகே அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
மஞ்சூர்-கோவை சாலையில் மீண்டும் காட்டு யானைகள் நடமாட்டம் தொடங்கியுள்ளதால் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- நீலகிரி மாவட்டம் தேயிலை வா்த்தகம் மற்றும் சுற்றுலாவையே பெருமளவில் நம்பி உள்ளது.
- சுற்றுலா துறையை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
ஊட்டி:
உடல்நிலை சரியில்லாததால் இலாகாவை மாற்றித் தருமாறு முதல்-அமைச்சரிடம் கேட்டதால் தனக்கு சுற்றுலாத்துறையை ஒதுக்கியதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகையில் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் தொழிலாக சுற்றுலாத் துறை உள்ளது. குறிப்பாக நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமாக தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் 8 நாட்கள் தங்கி சுற்றுலா தலங்களை பார்வையிடும் வகையிலும் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது.
மேலும் நீலகிரி மாவட்டம் தேயிலை வா்த்தகம் மற்றும் சுற்றுலாவையே பெருமளவில் நம்பி உள்ளது. இதனால் சுற்றுலாவை நம்பி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் வருவாயை ஈட்டும் வகையில் சுற்றுலா தொழில் மேம்படுத்தப்படும்.
சுற்றுலா துறையை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் இலாகா மாற்றப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் உடல்நல பாதிப்பு காரணமாக தன்னிடம் உள்ள வனத்துறையை மாற்றி விட்டு சுற்றுலாத் துறையை வழங்கும்படி நான் முதல்-அமைச்சரின் கேட்டேன். அதன் காரணமாகவே சுற்றுலாத்துறை எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
- போலீசார் நேற்று வண்டிச்சோலை பகுதியில் ரோந்து சென்றனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் நேற்று வண்டிச்சோலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் வண்டிச்சோலை பெல்லட்டி பகுதியை சேர்ந்த அருளேஸ்வரன் (வயது 34) என்பதும், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்களில் இருந்து பாக்குகள் திருட்டு போனது.
- ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, பாக்குகள் மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.
ஊட்டி,
பந்தலூர் அருகே கொளப்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்களில் இருந்து பாக்குகள் திருட்டு போனது. இதுகுறித்து சிவகுமார் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், தினேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று கொளப்பள்ளி பஜாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, பாக்குகள் மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சிவகுமாரின் தோட்டத்தில் திருட்டுபோன 80 கிலோ பாக்குகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பாக்குகள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 43), யோகேஸ்வரன் (30), கிருஷ்ணமூர்த்தி (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- சில கிராமங்களை தோ்ந்தெடுத்து மாதந்தோரும் மனுநீதி நாள் முகாம் நடத்துவதன் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான்.
- 211 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஊட்டி,
பந்தலூரை அடுத்துள்ள எருமாடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 191 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு மாவட்டத்திலும் சில கிராமங்களை தோ்ந்தெடுத்து மாதந்தோரும் மனுநீதி நாள் முகாம் நடத்துவதன் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான்.
குறிப்பாக மக்களின் இருப்பிடத்திற்கே அரசு அதிகாரிகள் சென்று மனுக்களைப் பெற்றுக்கொள்வதோடு, தகுதிவாய்ந்த நபா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த முகாமில் 211 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும்.
அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுகிறது.எனவே உடல்நலக் குறைவு உள்ளவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அனுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றாா்.
தொடா்ந்து நடைபெற்ற முகாமில் முதியோா் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகைகளை 100 பயனாளிகள் பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.7.35 லட்சம் மதிப்பிலான கடனுதவி, தோட்டக்கலைத் துறை சாா்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.8.75 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய நலத் திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
முகாமில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, மகளிா் திட்ட இயக்குநா் பாலகணேஷ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, சுகாதராப் பணிகளின் துணை இயக்குநா் பாலுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- விண்ணப்பங்களை மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.
- மேற்படி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாவட்டத்திலுள்ள தி.மு.க நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, சிறுபான்மை நல உரிமை பிரிவு, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, தொண்டர் அணி, மகளிர் தொண்டர் அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, நெசவாளர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, விளையாட்டு மேம்பாட்டு அணி, மீனவர் அணி, சுற்றுசூழல் அணி, அயலக அணி ஆகிய அணிகளுக்கு மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் வருகிற 20-ந் தேதி(புதன்கிழமை) மாலை 5 மணி வரை தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பாக இளைஞர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அணிகளில் மாவட்ட அளவில் பொறுப்பிற்காக விண்ணப்பிக்கும் நிர்வாகிகள் மாதிரி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வருகிற 25-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை வழங்கலாம். விண்ணப்பங்கள் தேவைப்படுபவர்கள் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேற்படி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாவட்டத்திலுள்ள தி.மு.க நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்பத்தில் பெயர் மற்றும் முழு முகவரி, வயது, கழக உறுப்பினர் அட்டை எண் மற்றும் அலைப்பேசி எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புலியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புலி அங்கிருந்த ஆடு ஒன்றை அடித்து கொன்று, வாயில் கவ்வி இழுத்து சென்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் உள்ளது கள்ளஞ்சேரி கிராமம்.
இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். ேநற்று வழக்கம் போல் ஆடுகளை அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
மாலையில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென புலி ஒன்று அங்கு வந்தது. புலி அங்கிருந்த ஆடு ஒன்றை அடித்து கொன்று, வாயில் கவ்வி இழுத்து சென்றது.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டனர். சிறிது தூரம் சென்றதும் ஆட்டை அங்கு போட்டு விட்டு புலி வனத்திற்குள் சென்று விட்டது.இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இறந்து கிடந்த ஆட்டை பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
புலி நடமாட்டம் இருப்பதால் யாரும் தனியாக நடமாட வேண்டாம் எனவும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
புலி நடமாட்டத்தால் அச்சமாக உள்ளோம். ஏற்கனவே கடந்த வாரம் தெப்பக்காட்டை சேர்ந்த ஒருவரை புலி தாக்கி அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே வனத்துறையினர் புலியை கண்காணித்து, அதனை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்னர்.
- போலீசார் கைது செய்தனர்.
- சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.
ஊட்டி
ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கவிப்பிரியா (வயது 32). இவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனியார் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கவிப்பிரியா பணி முடிந்து பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ் ஏறி தலைக்குந்தா சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த டிரைவர் உமர் என்ற சையது காதருக்கும், கவிப்பிரியாவுக்கும் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த உமர் தகாத வார்த்தையால் பேசி கவிப்பிரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் கவிப்பிரியா தனது கணவர் மற்றும் ஊர்மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுமந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகாரின் பேரில் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்த உமர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே அஜ்ஜுர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 53). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று இரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை சிவகுமார் ஓட்டினார். அரவேனு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில மாதங்களிலேயே அதிருப்தி ஏற்பட்டது.
- பொது மக்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் தலைமையில் தி.மு.க அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் எம்.பியும், அமைப்பு செயலாளருமான அர்ஜுனன், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் சண்முகம் ஆகியேர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் பேசும் போது, 500-க்கும் மேற்பட்ட கவர்சிகரமான பொய்யான வாக்குறுதிகளை தந்து திமுக ஆட்சிக்கு வந்தது. மக்களை ஏமாற்றி ஆசையை தூண்டி இந்த ஆட்சி அமர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் மனதில் அதிருப்தி தொடங்கிவிட்டது. இந்தியாவிலேயே ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களிலேயே அதிருப்தி ஏற்பட்டது திமுக மேல்தான் என்றார்.இதில் ஒன்றிய செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சில நேரங்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் உள்ளன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். இதனால் எந்த நேரமும் அந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.
இப்படிப்பட்ட சாலைகளில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இந்த கால்நடைகளால் சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுவதை வாடிக்கயைாக உள்ளது. சில நேரங்களில் நடந்து செல்லும் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
எனவே கால்நடைகள் சாலைகள் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டு கொண்டனர். அதன்பேரில் ஊட்டி நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் பலமுறை எச்சரித்தும் பல அபராதங்கள் விதித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.
இந்த நிலையில் ஊட்டி 21-வது வார்டு இரட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தெருக்களில் குதிரைகள் சாலையை வழி மறித்து சுற்றி கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் உள்ளன.இதனால் அந்த வழியாக செல்ல பாதசாரிகள் மற்றும் குழந்தைகள் அச்சம் அடைந்தனர். எனவே மக்களை அச்சுறுத்தும் வகையில் இடையூறாக அலைந்து கொண்டிருக்கும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2ஆண்டுகளுக்கு மேல் சரிசெய்யப்படாமலே உள்ளது.
- பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் வரையிலான சாலை வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும், சரக்கு வாகனங்கள் செல்ல ஒரு முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல்கள் அதிகமாக காணப்படும். இந்த சாலையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்க்காக நடைபாதையும் மறு பகுதியில் லாரி மற்றும் வேன்கள் நிறுத்தும் ஸ்டாண்ட் ஆகா உள்ளது இதற்கு இடையில் இருக்கும் சாலை பழுதடைந்து கடந்த 2ஆண்டுகளுக்கு மேல் சரிசெய்யப்படாமலே உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






