என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public expectations"

    • 2ஆண்டுகளுக்கு மேல் சரிசெய்யப்படாமலே உள்ளது.
    • பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் வரையிலான சாலை வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும், சரக்கு வாகனங்கள் செல்ல ஒரு முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல்கள் அதிகமாக காணப்படும். இந்த சாலையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்க்காக நடைபாதையும் மறு பகுதியில் லாரி மற்றும் வேன்கள் நிறுத்தும் ஸ்டாண்ட் ஆகா உள்ளது இதற்கு இடையில் இருக்கும் சாலை பழுதடைந்து கடந்த 2ஆண்டுகளுக்கு மேல் சரிசெய்யப்படாமலே உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் எதிர்புறம் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் டவுன் பஸ், வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்களும் நின்று விட்டு தான் செல்லும். எனவே இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளின் கூட்டம் எந்த நேரமும் அதிகமாக காணப்படும்.

    இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் மழையிலும் மற்றும் வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. நிழல் கூட இல்லாததால் நிற்பதற்கு கூட இடமில்லாமல் நடுரோட்டிற்கே பயணிகள் வந்து நிற்கும் நிலையை காண முடிகிறது. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே இந்த இடத்தில் விரைவில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×