என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுந்தராபுரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை மைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
குனியமுத்தூர்,
கோவை பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் எதிர்புறம் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் டவுன் பஸ், வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்களும் நின்று விட்டு தான் செல்லும். எனவே இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளின் கூட்டம் எந்த நேரமும் அதிகமாக காணப்படும்.
இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் மழையிலும் மற்றும் வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. நிழல் கூட இல்லாததால் நிற்பதற்கு கூட இடமில்லாமல் நடுரோட்டிற்கே பயணிகள் வந்து நிற்கும் நிலையை காண முடிகிறது. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே இந்த இடத்தில் விரைவில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






