search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car overturned"

    • மலைச்சாலையில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

    பெரும்பாறை:

    கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 23). இவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மாலை கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை சுதர்சன் ஓட்டினார். அவரது நணபர் உள்ளே அமர்த்து இருந்தார்.

    பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு- கொடை க்கானல் மலைப்பாதையில் ஊத்து என்ற இடத்தில் கார் வந்தது. அப்போது அங்கு ள்ள வளைவில் திரும்பி யபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சுதர்சன், அவரது நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக மலைப்பாதையில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • லோயர்கேம்ப்- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பகுதியில் தேசிய நெஞ்சாலை ஓரம் குழாய் பதிக்கும் பணி நிறைவுபெற்றது.

    இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    • கட்டிட பொருட்கள் வாங்க காரில் நேற்று கோவைக்கு வந்தார்.
    • படுகாயமடைந்த 4 பேரும் முள்ளி செயின் ப்ராசஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கொட்டரக்கண்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்ற அறிவழகன் (32). இவர் கட்டிட பொருட்கள் வாங்க காரில் நேற்று கோவைக்கு வந்தார். அவருடன் மஞ்சூர் ஓணிகண்டியை சேர்ந்த சதீஷ்குமார்(40), கரியமலை பெரியார் நகரை சேர்ந்த அருண்(27), கொட்டரக்கண்டியை சேர்ந்த ரவி (39) ஆகியோரும் வந்தனர்.

    கார் மஞ்சூர்-கோவை சாலையில் முள்ளி அருகே பெரும்பள்ளம் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் முள்ளி செயின் ப்ராசஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு பில்லூர் காவல் நிலைய போலீசார் வந்து படுகாயமடைந்தவர்களை மேல்சிகி்ச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பில்லூர் அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே அஜ்ஜுர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 53). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று இரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை சிவகுமார் ஓட்டினார். அரவேனு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×