என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் மலைச்சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து2 பேர் காயம்
    X

    கொடைக்கானல் மலைச்சாலையில் கவிழ்ந்த கார்.

    கொடைக்கானல் மலைச்சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து2 பேர் காயம்

    • மலைச்சாலையில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

    பெரும்பாறை:

    கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 23). இவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மாலை கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை சுதர்சன் ஓட்டினார். அவரது நணபர் உள்ளே அமர்த்து இருந்தார்.

    பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு- கொடை க்கானல் மலைப்பாதையில் ஊத்து என்ற இடத்தில் கார் வந்தது. அப்போது அங்கு ள்ள வளைவில் திரும்பி யபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சுதர்சன், அவரது நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக மலைப்பாதையில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×