என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவில்  தி.மு.க. அணிகளுக்கான பொறுப்புக்கு நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் வேண்டுகோள்
    X

    மாவட்ட அளவில் தி.மு.க. அணிகளுக்கான பொறுப்புக்கு நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் வேண்டுகோள்

    • விண்ணப்பங்களை மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.
    • மேற்படி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாவட்டத்திலுள்ள தி.மு.க நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, சிறுபான்மை நல உரிமை பிரிவு, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, தொண்டர் அணி, மகளிர் தொண்டர் அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, நெசவாளர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, விளையாட்டு மேம்பாட்டு அணி, மீனவர் அணி, சுற்றுசூழல் அணி, அயலக அணி ஆகிய அணிகளுக்கு மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

    விருப்பமுள்ளவர்கள் வருகிற 20-ந் தேதி(புதன்கிழமை) மாலை 5 மணி வரை தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பாக இளைஞர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அணிகளில் மாவட்ட அளவில் பொறுப்பிற்காக விண்ணப்பிக்கும் நிர்வாகிகள் மாதிரி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வருகிற 25-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை வழங்கலாம். விண்ணப்பங்கள் தேவைப்படுபவர்கள் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேற்படி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாவட்டத்திலுள்ள தி.மு.க நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்பத்தில் பெயர் மற்றும் முழு முகவரி, வயது, கழக உறுப்பினர் அட்டை எண் மற்றும் அலைப்பேசி எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×