என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • அசம்பாவித சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆனங்கூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆனங்கூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.

    போலீஸ் சூப்பிரண்டு

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆனங்கூர் ஊராட்சித் தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலர் சந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

    முற்றுப்புள்ளி

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேசியதாவது:-

    ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வரும் வன்முறை, அசம்பாவித சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்காங்கே வாழை மரங்களை வெட்டுதல், டிராக்டர்களுக்கு தீ வைத்தல், பாக்கு மரங்களை வெட்டுதல் போன்றவை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர், ஆனங்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கொத்தமங்கலம், வடகரையாத்தூர், அ.குன்னத்தூர், பிலிக்கல்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    • ஈரோட்டில் இருந்து கார் மூலம் நாமக்கல் வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • வெண்ணந்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதலமைச்சர் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்டத்தின் இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த அருணகிரியின் பெயரில் இங்கு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது நினைவு கொடிக்கம்பத்தில் அமைச்சர் உதயநிதி கட்சி கொடியேற்ற உள்ளார்.

    அதேபோல் கூட்டம் நடைபெறும் பந்தலின் நுழைவுவாயிலுக்கு மறைந்த இளைஞரணி நிர்வாகிகள் உதயகுமார், சுந்தரம் ஆகியோரின் பெயரும், மேடைக்கு மறைந்த நிர்வாகிகள் கண்ணன், மோதில்ராஜ், மணிவேல் ஆகியோரின் பெயரும் சூட்டப்பட்டு உள்ளது.

    இதனிடையே ஈரோட்டில் இருந்து கார் மூலம் நாமக்கல் வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கூட்டத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணி அளவில் அவர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, உள்நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்க உள்ளார்.

    இதேபோல் வெண்ணந்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதலமைச்சர் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் செல்லும் வழியில் வெண்ணந்தூர் அருகே மலைவாழ் மக்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் முன்னின்று செய்து வருகிறார்கள்.

    விழா நடைபெறும் இடத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர் செல்லும் வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    • போலி லாட்டரி சீட்டு விற்பனை பல இடங்களில் நடப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா, முருகேசன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை பல இடங்களில் நடப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா, முருகேசன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் பள்ளிபாளையம் சாலை சத்தியநாராயண மருத்துவமனை பகுதியில் வெள்ளை சீட்டில் சில எண்களை எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டு என 3 பேர் விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் குமாரபாளையத்தை சேர்ந்த அங்கப்பராஜ் (43), ராமச்சந்திரன் (33), மணிகண்டன் (30) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் மற்றும் உபரி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் தொடர்பான செயல்முறைகளை வெளியிட்டுள்ளது.
    • முதுகலை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முதல் நாள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு நகராட்சி மேல் நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் மற்றும் உபரி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் தொடர்பான செயல்முறைகளை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையில் முதுகலை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முதல் நாள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நடப்பாண்டில் வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கு முதல் நாள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது ஒரு கல்வியாண்டின் முதல் பள்ளி வேலை நாளைக்கு முந்தைய நாள் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

    அதனை விடுத்து தற்போது முதுகலை ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்வதை பள்ளிக்கல்வித்துறை தவிர்க்க வேண்டும். தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் 2-ம் இடைபருவத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அரையாண்டு தேர்வு விரைவில் வர உள்ளது.

    எனவே அதற்காக முழு பாடங்களையும் நடத்தி முடிப்பதற்கான கற்றல் கற்பித்தல் பணிகளிலும் மெல்ல கற்கும் மாணவர்களை தவிர்க்க தேர்ச்சி அடைய வைக்கும் முயற்சியிலும் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 76 சதவீதம் பாடங்கள் நிறைவு பெற்று பொதுத் தேர்வு நடைபெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு மாணவர்களையும் சரிவர புரிந்து அவர்களின் நிறை குறைகளை ஆராய்ந்து மேம்படுத்தி வரும் முதுகலை ஆசிரியர்களை மாணவர்களின் நலன் கருதி வரும் 20-ந் தேதி பணி நிரவல் செய்வதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (21- ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (21- ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம் பாளையம், பெரியமருதூர்,சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்தி வேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    • 25 ஆண்டுகள் எவ்வித புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பாராட்டு சான்று வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
    • குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் அமல்ராஜ், இளமுருகன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியமைக்காக நாமக்கல் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    குமாரபாளையம்:

    போலீஸ் துறையில் தொடர்ந்து 25 ஆண்டுகள் எவ்வித புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பாராட்டு சான்று வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் அமல்ராஜ், இளமுருகன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியமைக்காக நாமக்கல் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் டேவிட், சந்தியா, தங்கவடிவேல், முருகேசன், குணசேகரன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், சீனிவாசன், செல்வி உள்பட பலர் பாராட்டினர்.

    • முருகன் கோவில்களில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
    • பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், பாலப்பட்டி மற்றும் பிராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்க ளில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதேபோல் பொத்தனூர் பச்சைமலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன், எல்லையம்மன் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஜயகிரி பழனியாண்டவர், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் எழுந்தருளியுள்ள முருகன் மற்றும் பாலப்பட்டியில் உள்ள கதிர்மலை முருகன், பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்க டவுள், பொத்தனூர், வெங்கமேடு வல்லப கணபதி கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும், திருக்கல்யாண வைபவ விழாவும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
    • கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அக்கினி குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதினர்.

    அதனைத் தொடர்ந்து பரமேஸ்வர், பாலமுருகன், அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை வீட்டிற்கு வந்தவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
    • கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பரமசிவம் (72), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (62). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

    இவர்களது மகள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து விட்டார். 2 மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பரமசிவம் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

    இந்நிலையில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். பஞ்சவர்ணத்திற்கு சர்க்கரை நோய் இருந்ததால் அவரது இருவிரல்கள் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2 விரல்களையும் நீக்கி விட்டனர். இதனால் வலியால் தவித்து வந்துள்ளார்.

    பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லையே என பரமசிவம்-பஞ்சவர்ணம் தம்பதியினர் விரக்தியில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கணவன், மனைவி இருவரும் விட்டத்தில் பஞ்சவர்ணத்தின் சேலையால் தனித்தனியாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு வந்தவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டு இருவரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடல்நிலை சரியாகாத விரக்தியில் கணவன், மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • முருகன் கோவில்களில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் கடந்த 13-ந் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர்,வேலூர், கோப்பணம் பாளையம், பாலப்பட்டி, மோகனூர் மற்றும் பிராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் கடந்த 13-ந் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை காலை யாக பூஜைகள், மூலவர் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலையில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும், மஹா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் 6 மணிக்கு மேல் சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்த முருகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் கோட்ட அள விலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) நடக்கிறது.
    • அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்ட அள விலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது: -

    நாமக்கல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் உட்கோட்டத் தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது. நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங் கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்ப டுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் மனுக்க ளாக அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • வருணகணபதி கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு வருண கணபதிக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் வருண கணபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் வருணகணபதி கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு வருண கணபதிக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வருண கணபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வருண கணபதி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் சேமங்கி விநாயகர் கோவில், நொய்யல் விநாயகர் கோவில், குறுக்கு சாலை அண்ணா நகர் விநாயகர் கோவில், அத்திப்பாளையம் விநாயகர் கோவில், குப்பம் விநாயகர் கோவில், புன்னம் சத்திரம் விநாயகர் கோவில், உப்பு பாளையம் விநாயகர் கோவில், புன்னம் விநாயகர் கோவில், கரைப்பாளையம் விநாயகர் கோவில், தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவா பாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கல், நானப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    ×