நாமக்கல்லில் வருகிற 24-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார்.
நாமக்கல்லில் வருகிற 24-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கை களையும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com