என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சரவணன் (வயது 37). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
    • இந்நிலையில் சரவணன் கள்ளிப்பாளையம் பகுதியில் மது அருந்திவிட்டு படுத்திருந்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் எழவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர் அருகே கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் சரவணன் (வயது 37). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சரவணன் கள்ளிப்பாளையம் பகுதியில் மது அருந்திவிட்டு படுத்திருந்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர்,அருகில் சென்று பார்த்த போது, சரவணன் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து பிரேதத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 2023-–24-ம் ஆண்டில் நலத் திட்டங்கள் செயல்ப டுத்தப்படும் வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • பாரத பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்திலும் சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கந்தசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலைத் துறையில், 2023-–24-ம் ஆண்டில் நலத் திட்டங்கள் செயல்ப டுத்தப்படும் வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், செல்லப்பம்பட்டி, பாச்சல், காரைகுறிச்சிபுதூர் மற்றும் தாத்தையங்கார்பட்டி ஆகிய 4 கிராமங்கள் இந்த ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    அதில், தோட்டக்க லைத்துறைக்கு, செல்லப்பம்பட்டி, பாச்சல் ஆகிய கிராமங்களும், வேளாண் துறைக்கு, காரை க்குறிச்சிபுதூர், தாத்தை யங்கார்பட்டி ஆகிய வரு வாய் கிராமங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வருவாய் கிராமங்க ளில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கடந்த, 3 ஆண்டுகளாக சாகுபடி செய்யாத நிலம் மற்றும் தொகுப்பாக உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து, விவசாயிகளை ஒருங்கி ணைத்து, நிலங்களை சமன் செய்து, ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, அந்த நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரப்படும்.

    மேலும், பாரத பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும், துணை நீர் மேலாண் திட்டத்தில், நீர் தொட்டி அமைத்தல், பைப் லைன் அமைத்தல் மற்றும் மின் மோட்டார் போன்ற இனங்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில், சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், காய்கறி மற்றும் பழப்ப யிர்கள் சாகுபடி விரி வாக்கம், துள்ளியப் பண்ணையத் திட்டம் மற்றும் அங்கக வேளாண் போன்ற இனங்களில், 50 சதவீதம் மானியத்தில் விவசாயி களுக்கு வழங்கப்படுகிறது.

    மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், காய்கறி விதைகள் மற்றும் குழித்தட்டு நாற்றுகள், தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் பழக்கன்றுகள் (ஒட்டுசெடிகள்), வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் போன்ற பணிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

    மேற்கண்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள், புதுச்சத்திரம் வட்டார தோட்டகலைத் துறையை அணுகி பயன்பெ றலாம். மேலும் விபரங்க ளுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கார்த்திக், ராமநாதன் மற்றும் புவித்ராவை, தொடர்பு கொண்டு கூடுதல் தகவல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான மையங்க ளோடு இணைப்ப தையும் தமிழக அரசு கைவிட வேண்டும்.
    • ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்கள் இணைப்பதை கைவிட வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் வருகையை கணக்கில் கொண்டு, பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான மையங்க ளோடு இணைப்ப தையும் தமிழக அரசு கைவிட வேண்டும். ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்கள் இணைப்பதை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    முன்னதாக சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் சிவராஜ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். 

    • பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
    • இந்த பணிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, உரிய மதிப்பெண்கள் வழங்கும் பணி ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

    சில தனியார் பள்ளிகள் மட்டும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தங்கள் ஆசிரியர்களை போதுமான அளவுக்கு அனுப்பாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இதன் காரணமாக, விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டு உள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதில், தனியார் பள்ளி கள் தங்கள் ஆசிரியர்களை விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு அனுப்பாமல் அடுத்த கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட வகுப்புகளை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

    விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு பள்ளிக் கல்வித்துறை கூறிய எண்ணிக்கைப்படி, ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பள்ளியின் சார்பில் தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
    • தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், ஜமீன்இளம்பள்ளி, குறும்பல மகாதேவி, சிறுநல்லிக்கோவில், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், பெரியமருதூர், சின்னமருதூர், ஆனங்கூர், சின்ன சோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியா பாரிகள் அதிக அளவில் மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை யானது. தற்போது ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே போல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை யானது.

    தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது. மரவள்ளி கிழங்கு வரத்து குறைவாலும், ஜவ்வ ரிசி விலை அதிகரிப்பாலும் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நுண்கலை பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    • தினசரி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த பயிற்சி நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் செயல்படும், நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றத்தின் சார்பாக நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நுண்கலை திறமைகளை வெளிக்கொணரும் வகையில், வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் மே 15-ந் தேதி வரை, இலவச நுண்கலை பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    தினசரி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த பயிற்சி நடைபெறும். முகாமில், தற்காப்புக்கலை, யோகா, சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் கைவினை ஆகிய நுண்கலை பயிற்சிகள் வழங்கப்படும்.

    பயிற்சியில் சிறப்பாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தும் குழந்தைகள் அரசு சார்பில் நடைபெறும், மாநில அளவிலான கலை பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படு வார்கள். முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளு க்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    ஜூன் 2023 மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை வாரந்தோறும் ஞாயி ற்றுக்கிழ மைகளில் நுண்கலை பயிற்சி வகுப்புகள் நடைபெறும், வருடம் முழுவதும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆண்டு சந்தா ரூ.200 செலுத்தி பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொ ள்ளலாம்.

    மேலும் விவரங்களு க்கு நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித் துள்ளார். 

    • சுசீலா (வயது 63). கூலித்தொழிலாளி மணியனூர் பகுதிக்கு, ஒரு வயலில் நிலக்கடலை அறுவடை வேலைக்காக வந்திருந்தார்.
    • அப்போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுசீலா மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் பாகநத்தம் செல்வநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராசு. இவரது மனைவி சுசீலா (வயது 63). கூலித்தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதிக்கு, ஒரு வயலில் நிலக்கடலை அறுவடை வேலைக்காக வந்திருந்தார்.

    அப்போது உலகபாளையம் பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு தண்ணீர் பிடிக்க சென்றார். பின்னர் மீண்டும் திருச்செங்கோடு -பரமத்தி வேலூர் சாலையை கடந்தார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுசீலா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே சுசீலா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுசீலாவின் மகன் பிரகாஷ்(42) நல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சித்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் சக்திவேல் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மின்விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
    • கீழ்பாலப்பட்டி, கொமாரபாளையம் ஆகிய பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் பாலப்பட்டியை அடுத்துள்ள கொமாரபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி, கடந்த 2 நாட்களாக திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    திங்கட்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவும், நேற்று பகலில் கிடாவெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு மாவிளக்கு நிகழ்ச்சிக்கு கீழ் பாலப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மேளதாளங்களுடன் மாவிளக்கு எடுத்து சென்றனர்.

    அப்போது கொமாரபாளையத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் மேள தாளங்களுடன் வரக்கூடாது என தடுத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர், கற்களால் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் இரு தரப்பிலும் 6-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம், பரமத்தி வேலூர் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கீழ் பாலப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் பரமத்தி வேலூர்-மோகனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்ததுடன், திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மின்விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கீழ்பாலப்பட்டி, கொமாரபாளையம் ஆகிய பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    • பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பல திட்டங்களை வழங்கியுள்ளார்.
    • அனைத்து கிராமங்களிலும் பிரதமரின் திட்டங்களால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.


    நாமக்கல் மாவட்டத்தில், மத்திய தகவல்-ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன் இன்று நாமக்கல் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில், பா.ஜ.க கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க இன்று மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்று வீறு நடை போட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் முக்கியமான கட்சியாக வளர்ந்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பல திட்டங்களை வழங்கியுள்ளார். அனைத்து கிராமங்களிலும் பிரதமரின் திட்டங்களால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் ஏராளமான மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

    விவசாயிகளுக்கு நேரடியாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் சம்மான் நிதி, அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி, உள்ளிட்ட பல திட்டங்களை பிரதமர் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே முத்ரா திட்டத்தில் பெண்கள் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்ற இலக்கை நாம் அடைந்துள்ளோம். தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளோம்.

    பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான நிதி திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று பயனடைந்து வருகின்றனர். பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம் இளைஞர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.

    உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதம மந்திரியின் சுயசார்பு இந்திய திட்டத்தின்கீழ் ஆந்திரா, சென்னை, மகாபலிபுரம், மரக்காணம் பகுதியில் இருந்து அதிக அளவில் இறால் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. கடல் பொருட்கள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. இதில் நாம் முதன்மை இடத்தில் உள்ளோம்.

    ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது உலக அளவில் இன்று வரவேற்பு பெற்றுள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு 5-வது பொருளாதார நாடாக உலக அளவில் முன்னேறி உள்ளது.

    ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடி முனைப்போடு உள்ளார்.

    கொரோனா காலத்தில் கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தில் கூடுதலாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, அனைத்து ரேஷன் அட்டைக்காரர்களுக்கும் வருகிற டிசம்பர் 2023 முடிய நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஏழை மக்களின் நலன் நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் செயலாற்றி வருகிறார்.

    அமிர்த் திட்டத்தின் கீழ் 100-வது சுதந்திர தினத்தை நோக்கி நாம் அடி எடுத்து வைத்துள்ளோம். அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னோட்டமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.6 ஆயிரம் கோடி ரெயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 புதிய ரெயில் தடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    நாமக்கல் ரெயில் நிலையத்தை மேம்படுத்த 10 கோடி ரூபாய் ஏற்கனவே அமிர்த திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை மேலும் மேம்படுத்த தரம் உயர்த்தி 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செலவில் நாமக்கல் ரெயில் நிலையம் புதிய பேருந்து நிலையம் அருகே வர உள்ளது. அதற்காக ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சேலம் ஒன்றிணைந்த ஆவின் ஒன்றியமாக இருந்தது. இதற்கு நாமக்கல்லுக்கு என பிரத்தியேகமாக தனி பால் பண்ணை ஒன்றியம் அமைக்க தேசிய பால் பண்ணை வாரியத்தின் மூலம் 7 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி பிரதமர் வழங்கி உள்ளார்.

    மக்களின் தேவை அறிந்து கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் அரசாக நரேந்திர மோடியின் அரசு உள்ளது. பா.ஜ.க. நிர்வாகிகள் பயனாளிகளை நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களோடு நட்பு பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும்.

    பிரதமர் தமிழ் புத்தாண்டை நம்மோடு இணைந்து கொண்டாடியது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாகும். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்திற்காக பிரதமர் மேம்படுத்தி வருகிறார்.

    வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும். அதுவே நம் இலக்கு. அதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்

    இவ்வாறு மத்திய மந்திரி டாக்டர் எல். முருகன் பேசினார்.

    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவ சாயிகள் தாங்கள் விளை வித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமா நிலங்களை சேர்ந்த வியா பாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 37.45 குவிண்டால் எடை கொண்ட 11,997 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.71-க்கும், சராசரி விலையாக ரூ.26.29-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 92ஆயிரத்து 508-க்கு விற்பனையானது.

    அதேபோல் 256.33 1/2குவிண்டால் எடை கொண்ட 515-மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.79.69-க்கும், சராசரி விலையாக ரூ.81.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.66-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.69-க்கும், சராசரி விலையாக ரூ.77.77-க்கும் என மொத்தம் ரூ.19லட்சத்து 15ஆயிரத்து 536-க்கு விற்பனையானது.

    அதேபோல் 713.05 குவிண்டால் எடை கொண்ட 953-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.152.99-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.136.99-க்கும், சராசரி விலையாக ரூ.150.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.152.99-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.136.99-க்கும், சராசரி விலையாக ரூ.150.99-க்கும், வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.164.99-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.162.99-க்கும், சராசரி விலையாக ரூ.160.99-க்கும் என மொத்தம் ரூ. 1 கோடியே 3 லட்சத்து 61ஆயிரத்து 902-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 1 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 946-க்கு விற்பனையானது.

    • கார்த்திக் (வயது 34). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
    • குடிப்ப ழக்கம் உடைய கார்த்திக், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மது அருந்திய தாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் காவேட்டிப் பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 34). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் குடிப்ப ழக்கம் உடைய கார்த்திக், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மது அருந்திய தாக கூறப்படுகிறது. இத னால் உடல் நலம் பாதிக்கப் பட்ட அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீ சார், அவரை மீட்டு நாமக் கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    குடிபோதையில் இறந்த அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத னர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செந்தில் ராஜா மாட்டு வண்டியில் இருந்தும் நிலைதடுமாறி கீழே விழுந்து லேசான காயமடைந்தனர்.
    • இதனைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடி யாக தனியார் ஆம்பு லன்ஸ்க்கு போன் செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவர் மாட்டு வண்டி உரிமையாளர். இவர் நேற்று பாண்டமங்கலத்திற்கு தனது மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக மாட்டு வண்டியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் கார்த்திக் மோட்டார் சைக்கிள் இருந்தும், செந்தில் ராஜா மாட்டு வண்டியில் இருந்தும் நிலைதடுமாறி கீழே விழுந்து லேசான காயமடைந்தனர். இதனைப் பார்த்த அவ்வழி யாக வந்தவர்கள் உடனடி யாக தனியார் ஆம்பு லன்ஸ்க்கு போன் செய்து அவர்களை மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை நன்செய் இடையாறை சேர்ந்த கவின் (வயது 25) என்பவர் ஒட்டி வந்தார். பின்னர் விபத்தில் லேசாக காயம் அடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வேகமாக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் செல்லும் போது கரூரிலிருந்து பரமத்திவேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரும் ஆம்புலன்சும் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தனியார் ஆம்புலன்ஸ் வாக னம் சாலையில் கவிழ்ந்தது.

    இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கவின் மற்றும் விபத்தில் காயம் அடைந்த செந்தில்ராஜா, கார்த்திக் ஆகிய 3 பேர்களையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு வேறு ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    விபத்துக்குள்ளான 2-பேரும் லேசான சிராய்ப்பு காயங்களுடன் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அவர்களை சிகிச்சைக்கு அழைத்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கவின் பலத்த காயங்களுடன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த நான்கு ரோடு பகுதியில் நடந்த ஆம்புலன்ஸ் வாகன விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார். ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்கு உள்ளான சம்ப வம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் விபத்து ஏற்படும் இடங்களில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாக னத்திற்கு போன் செய்து அழைக்கப்பட்டால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வ தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து காவல்துறை யினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×