search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கலில் வருகிற 1-ந் தேதி முதல்சிறுவர்களுக்கு நுண்கலை பயிற்சி முகாம்
    X

    நாமக்கலில் வருகிற 1-ந் தேதி முதல்சிறுவர்களுக்கு நுண்கலை பயிற்சி முகாம்

    • 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நுண்கலை பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    • தினசரி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த பயிற்சி நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் செயல்படும், நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றத்தின் சார்பாக நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நுண்கலை திறமைகளை வெளிக்கொணரும் வகையில், வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் மே 15-ந் தேதி வரை, இலவச நுண்கலை பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    தினசரி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த பயிற்சி நடைபெறும். முகாமில், தற்காப்புக்கலை, யோகா, சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் கைவினை ஆகிய நுண்கலை பயிற்சிகள் வழங்கப்படும்.

    பயிற்சியில் சிறப்பாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தும் குழந்தைகள் அரசு சார்பில் நடைபெறும், மாநில அளவிலான கலை பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படு வார்கள். முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளு க்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    ஜூன் 2023 மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை வாரந்தோறும் ஞாயி ற்றுக்கிழ மைகளில் நுண்கலை பயிற்சி வகுப்புகள் நடைபெறும், வருடம் முழுவதும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆண்டு சந்தா ரூ.200 செலுத்தி பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொ ள்ளலாம்.

    மேலும் விவரங்களு க்கு நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித் துள்ளார்.

    Next Story
    ×