என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து"

    • செந்தில் ராஜா மாட்டு வண்டியில் இருந்தும் நிலைதடுமாறி கீழே விழுந்து லேசான காயமடைந்தனர்.
    • இதனைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடி யாக தனியார் ஆம்பு லன்ஸ்க்கு போன் செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவர் மாட்டு வண்டி உரிமையாளர். இவர் நேற்று பாண்டமங்கலத்திற்கு தனது மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக மாட்டு வண்டியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் கார்த்திக் மோட்டார் சைக்கிள் இருந்தும், செந்தில் ராஜா மாட்டு வண்டியில் இருந்தும் நிலைதடுமாறி கீழே விழுந்து லேசான காயமடைந்தனர். இதனைப் பார்த்த அவ்வழி யாக வந்தவர்கள் உடனடி யாக தனியார் ஆம்பு லன்ஸ்க்கு போன் செய்து அவர்களை மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை நன்செய் இடையாறை சேர்ந்த கவின் (வயது 25) என்பவர் ஒட்டி வந்தார். பின்னர் விபத்தில் லேசாக காயம் அடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வேகமாக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் செல்லும் போது கரூரிலிருந்து பரமத்திவேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரும் ஆம்புலன்சும் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தனியார் ஆம்புலன்ஸ் வாக னம் சாலையில் கவிழ்ந்தது.

    இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கவின் மற்றும் விபத்தில் காயம் அடைந்த செந்தில்ராஜா, கார்த்திக் ஆகிய 3 பேர்களையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு வேறு ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    விபத்துக்குள்ளான 2-பேரும் லேசான சிராய்ப்பு காயங்களுடன் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அவர்களை சிகிச்சைக்கு அழைத்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கவின் பலத்த காயங்களுடன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த நான்கு ரோடு பகுதியில் நடந்த ஆம்புலன்ஸ் வாகன விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார். ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்கு உள்ளான சம்ப வம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் விபத்து ஏற்படும் இடங்களில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாக னத்திற்கு போன் செய்து அழைக்கப்பட்டால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வ தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து காவல்துறை யினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×