என் மலர்
நாகப்பட்டினம்
வாய்மேடு அருகே 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 37). இவர், வேதாரண்யம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி யோகாம்பிகை(31). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு தரணீஸ்வரன்(3½), கதிர்பாலன்(1½) ஆகிய 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.
நேற்று சுரேஷ் தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது யோகாம்பிகை தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். மருத்துவமனைக்கு சென்ற சுரேஷ், மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதையடுத்து அவர் வீடு முழுவதும் மனைவி மற்றும் குழந்தைகளை தேடினார்.
இந்த நிலையில் வீட்டின் பின்பக்கம் உள்ள விவசாய கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து அவர் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தபோது, கிணற்றுக்குள் யோகாம்பிகை கயிற்றை பிடித்து தொங்கியபடி இருந்தார். குழந்தைகள் கிணற்றுக்குள் மூழ்கி இருந்தன. இதனால் பதறிப்போன அவர் கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். இதுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஏணி மூலமாக கிணற்றில் இருந்து மூழ்கி கிடந்த குழந்தைகளையும், கயிற்றில் தொங்கிய நிலையில் இருந்த யோகாம்பிகையையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து குழந்தைகள் தரணீஸ்வரன், கதிர்பாலன் மற்றும் தாய் யோகாம்பிகை ஆகிய 3 பேரையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தன. யோகாம்பிகை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் யோகாம்பிகை தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு, கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. கடந்த சில மாதங்களாக யோகாம்பிகை மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும், அதனால் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்துள்ளது. 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழி மீனவர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பழையாறு, மடவாமேடு, திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஒரு மீனவ பிரிவினர் அரசு தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதற்கு சிறு தொழில் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதையடுத்து பல்வேறு மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் மீனவர்கள் கடந்த 11-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம், வேலைநிறுத்த போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் சுருக்குமடிவலைக்கு ஆதரவாக 21 மீனவ கிராம கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு எதிர்ப்பு தெரிவித்தால் வருகிற 17-ந் தேதி அந்தந்த மீனவ கிராமங்களில் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளபோவதாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11-ந் தேதி முதல் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு ஆதரவாக கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்து படகில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் சீர்காழி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 383 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் 381 ஆக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 195 பேர் குணமடைந்துள்ளனர். 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றில் அகர மணல்மேடு பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றில் அகர மணல்மேடு பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி உத்தரவின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார், மணலுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் லாரி டிரைவர், திருவண்ணாமலை மாவட்டம் சின்ன பாளையப்பட்டு காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கனகராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கனகராஜை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
இதேபோல் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூரில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் மணல் எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்த நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். உடனே போலீசார் விரட்டி சென்று நீடூர் பகுதியில் லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் கிளனர் தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் லாரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை வரியை ரத்து செய்யக்கோரி நாகை மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் அனைத்து ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அனைத்து ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பள்ளி வேன், பஸ் டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள், லாரி, ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் சிக்கல், கீழ்வேளூரில் அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிக்கலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழ்வேளூரில் மாவட்ட இணை செயலாளர் அனஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சீர்காழி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் சங்க கவுரவ தலைவர் செந்தில்குமார், செயலாளர் மனோகரன், பொருளாளர் உலகநாதன், துணை தலைவர் அமுதன் உள்ளிட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் கொடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 150 லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் எருக்கூர் நவீன அரிசி ஆலைக்கு லாரிகள் மூலம் நெல்மூட்டைகள் ஏற்றி செல்லும் பணி பாதிக்கப்பட்டது.
நாகூர் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையா? என்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
நாகூர்:
நாகை மாவட்டம், நாகூரை அடுத்த திருக்கண்ணபுரம் பெருநாட்டான் தோப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சிற்ப வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சவுமியா(வயது 20). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சவுமியா வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 11-ந்தேதி வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த சவுமியா வீட்டின் அருகில் உள்ள தோப்பில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் சவுமியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சவுமியாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து நாகை உதவி கலெக்டர் பழனிகுமார் விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுருக்குமடி வலை பயன்படுத்த மறுப்பு தெரிவித்தால் வருகிற 17-ந் தேதி மீனவர்கள் குடும்பத்துடன் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்துவது என 21 மீனவ கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழி:
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கக்கூடாது என அதிகாரிகள் மீனவர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஒரு தரப்பு மீனவர்களும், சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என கூறி மற்றொரு தரப்பு மீனவர்களும் கடந்த 11-ந் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், காரைக்கால் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 21 மீனவ கிராமங்கள் சார்பில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருமுல்லைவாசல் மீனவ கிராம பஞ்சாயத்தார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சிறு தொழில் மீனவர்களை பாதிக்காத வகையில் காலை 6 மணிக்கு மேல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது. கரை பகுதியில் சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடிக்கக்கூடாது. சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடித்துவரும் மீன்களை, சிறு தொழில் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை விற்ற பிறகு காலை 10 மணிக்கு மேல் விற்பனை செய்ய வேண்டும்.
சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடி தடைக்காலத்துக்கு முன்பு 2 மாதம், மீன்பிடி தடைக்காலத்துக்கு பின்பு 3 மாதமும் என 5 மாதங்கள் தொழிலில் ஈடுபடுவது. இதுபோன்ற விதிமுறைகளை மீறி சுருக்குமடி வலையை கொண்டு பிடித்துவரும் மீன்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட ஊர் பொது நிதிக்காக பயன்படுத்துவது. சம்பந்தப்பட்ட விசைப்படகை குறைந்தபட்சம் 10 நாட்கள் தொழில் செய்ய அனுமதி மறுப்பது.
கடந்த 11-ந் தேதி முதல் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) அரசு நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறி உள்ளது. இதில் சுருக்குமடி வலை பயன்படுத்த மறுப்பு தெரிவித்தாலும், வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டாலும் வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பழையார் முதல் கோடியக்கரை வரை உள்ள மீனவர்கள் அந்தந்த மீனவ கிராமங்களில் குடும்பத்துடன் கடலில் இறங்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திருமுல்லைவாசல், நம்பியார் நகர், நாகை ஆரிய நாட்டுத்தெரு, செருதூர், சாமந்தான்பேட்டை, நாகூர், காரைக்கால்மேடு, காளிக்குப்பம், மண்டபத்தூர், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 21 மீனவ கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சுருக்குமடி வலையை அனுமதிக்காததை கண்டித்து திருமுல்லைவாசல் கிராமத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் நேற்று தங்களுடைய விசைப்படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வேதாரண்யம் அருகே காரில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் உத்தரவின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் தனிப்படையினர் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை மற்றும் தேத்தாகுடியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தோப்புத்துறை ஆறுமுகச்சந்து பகுதியில் இருந்து குரவப்புலம் செல்லும் சாலையில் தேத்தாகுடி தெற்கு ஏரி வடகரை பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்தனர்.
போலீசாரை கண்டதும் காரை அங்கேயே நிறுத்தி விட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, காரையும் சோதனையிட்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த நந்தகோபால்(வயது 23) என்பதும், தப்பி ஓடியவர்கள் தென்னம்புலத்தை சேர்ந்த டிரைவர் கனகராஜ்(24), தேத்தாகுடி தெற்கு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பதும் தெரியவந்தது. காரில் கத்தி, அரிவாள், சுளுக்கி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. 10 பிளாஸ்டிக் பைகளில் 300 கிலோ கஞ்சா காரில் கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு தமிழகத்தில் ரூ.30 லட்சம் என்றும், இதை இலங்கைக்கு கடத்தி சென்று விற்பனை செய்தால் ரூ.1 கோடி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தப்பி ஓடிய நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது அதே பகுதியில் தலைமறைவாக இருந்த கனகராஜ் போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். இதைத்தொடர்ந்து நந்தகோபால், கனகராஜ் ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கஞ்சா கடத்தலில் கருப்பம்புலத்தை சேர்ந்த கதிரவன்(37), நாலுவேதபதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(56) உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட நந்தகோபால், கனகராஜ், கதிரவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா, கார் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக குணசேகரன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் உத்தரவின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் தனிப்படையினர் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை மற்றும் தேத்தாகுடியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தோப்புத்துறை ஆறுமுகச்சந்து பகுதியில் இருந்து குரவப்புலம் செல்லும் சாலையில் தேத்தாகுடி தெற்கு ஏரி வடகரை பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்தனர்.
போலீசாரை கண்டதும் காரை அங்கேயே நிறுத்தி விட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, காரையும் சோதனையிட்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த நந்தகோபால்(வயது 23) என்பதும், தப்பி ஓடியவர்கள் தென்னம்புலத்தை சேர்ந்த டிரைவர் கனகராஜ்(24), தேத்தாகுடி தெற்கு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பதும் தெரியவந்தது. காரில் கத்தி, அரிவாள், சுளுக்கி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. 10 பிளாஸ்டிக் பைகளில் 300 கிலோ கஞ்சா காரில் கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு தமிழகத்தில் ரூ.30 லட்சம் என்றும், இதை இலங்கைக்கு கடத்தி சென்று விற்பனை செய்தால் ரூ.1 கோடி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட நந்தகோபால், கனகராஜ், கதிரவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா, கார் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக குணசேகரன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர்:
கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ராதாமங்கலம் மெயின்ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி (42), சிக்கல் குற்றம் பொருத்தானிருப்பு மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தனபால்(53), பெருங்கடம்பனூர் காலனி தெரு பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த மாதவன் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கில் காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றது தொடர்பாக போலீசார் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம் அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்களை காரைக்கால் மீனவர்கள் உடனடியாக மீட்டனர். பின்னர் படகையும், வலைகளையும் மீட்டுக்கொடுத்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மகேஷ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (வயது30), ராமச்சந்திரன் (30), சகிலன் (45), பாக்கியராஜ் (35) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் 4 பேரும் மீன்பிடித்துக்கொண்டு நேற்று அதிகாலை கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே காரைக்காலை சேர்ந்த விசைப்படகின் வலை கயிற்றில் இவர்கள் வந்த படகு சிக்கி கவிழ்ந்தது.
இதனால் 4 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதை பார்த்த காரைக்கால் மீனவர்கள் உடனடியாக 4 பேரையும் மீட்டனர். பின்னர் படகையும், வலைகளையும் மீட்டுக்கொடுத்தனர். இதுதொடர்பாக காரைக்கால் மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார்கள் ஏற்பாட்டில் மீனவர்கள் சிலர் 2 படகுகளில் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களுடைய படகையும் கரைக்கு அழைத்து வந்தனர்.
சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி நாகையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக 91 மீனவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நாகப்பட்டினம்:
கடல் மீன் பிடிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின்படி மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் சுருக்குமடி, இரட்டைமடி உள்ளிட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதை மீறி மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்களா? என்பதை மீன்வளத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக நாகை நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, நாகூர், செருதூர், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர், திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இதையொட்டி சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நாகையை அடுத்த வாஞ்சூர், கானூர், மேலையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.
சிரமப்பட்டு கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்களை பறிமுதல் செய்ய கூடாது என்பன போன்றகோரிக்கைகளை வலியுறுத்தியும், மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டித்தும் நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தின்போது மீனவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக நாகை நம்பியார் நகரை சேர்ந்த கலைவாணன், கேசவன், முத்துவேல், சங்கர் மற்றும் 50 பெண்கள் உள்பட 91 பேர் மீது வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.