என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் மற்றும் போலீ்சார் மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    நாகூர்:

    நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் மற்றும் போலீ்சார் மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் தென்னரசன் (வயது 22) மற்றும் 17 வயதான சிறுவன் என்பதும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னரசன் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது.
    வேதாரண்யம்:

    நாகை செயற்பொறியாளர் நக்கீரன், வேதாரண்யம் உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தேத்தாகுடி வடக்கு, செம்போடை புஷ்பவனம், ஆகிய பகுதிகளுக்கும். வேட்டைக்காரனியிருப்பு துணைமின் நிலையத்திற்குட்பட்ட நாலுவேதபதி பகுதியிலும், ஆயக்காரன்புலம் துணை மின் நிலையத்திற்குபட்ட கருப்பம்புலம், கடினல்வயல், செருதலைகாடு ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாகை, நாகூர், வேதாரண்யம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 13 கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:-

    ஆவராணி புதுச்சேரி இ சேவை மையம், பாலையூர் தொடக்கப்பள்ளி, தேவூர் ஆரம்ப சுகாதார நிலையம், புதுப்பள்ளி அம்மன் கோவில் மண்டபம், கரியாப்பட்டினம், தேத்தாகுடி, வாய்மேடு, ஆயக்காரன்புலம், கோடியக்கரை ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வாட்டாகுடி பஞ்சாயத்து அலுவலகம், கொளப்பாடு பள்ளி, நெய்குப்பம், கோட்டூர் ஆகிய பஞ்சாயத்து யூனியன்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இது தவிர நாகை, நாகூர், வேதாரண்யம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது.
    நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர்.
    நாகூர்:

    நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகை வெளிப்பாளையம் தாமரைகுளத்தை சேர்ந்த ஜெயசந்திரனின் மனைவி மாரீஸ்வரி (வயது 27) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கீழ்வேளூர் அருகே பெருங்கடம்பனூர், சிக்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்கடம்பனூர், மில்லடி தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கரிகாலன் மகன் விஜய் (வயது 24), பெருங்கடம்பனூர் சுடுகாடு பகுதியில் சாராயம் விற்ற மில்லடி தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் பாண்டித்துரை (22), சிக்கல் கோட்டேரி தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சசிகுமார் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டியூ. மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் அங்காடி சேகர், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

    புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் உயர்்வை கண்டிப்பது. புதிய மின்சார சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

    பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க கூடாது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதேபோல திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸடு் கட்சி சார்பில் ஆர்ப்பட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பொன்மணி தலைமை தாங்கினார். .விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினர் லெனின், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    நாகை அருகே சிக்கல் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாகை ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பகு, மாவட்ட குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், பெட்ரோல்-டீசல், விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்

    நாகை மாவட்டம் கீழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் அம்பிகாபதி கலந்து கொண்டு பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், இளையபெருமாள், வெற்றியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம் அரசு மருத்துவமனை, கரியாப்பட்டினம், நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    வேதாரண்யம்: 

     வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம் அரசு மருத்துவமனை, கரியாப்பட்டினம், நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்  நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். இந்த முகாமில் 2 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி  போடப்பட்டது. பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பலர் தடுப்பூசி போடாமல் திரும்பி சென்றனர்.தோப்புத்துறையில் சுகாதாரத்துறையினர் இருசக்கர மற்றும்  நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 
    மதுபாட்டில்கள் கடத்திய வந்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களை வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர் மற்றும் தனிப்படை போலீசார் திருமுருகன், கதீஷ்குமார், வெற்றி செல்வன் ஆகியோர் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கே புதுரோடு பகுதியில் வேதாரண்யம் நாகை நெடுஞ்சாலையில் மதுவிலக்கு சோதனை மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நாகை பகுதியில் இருந்து ஸ்கூட்டரில் இரண்டு பேர் வேகமாக வந்ததையடுத்து அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 375 மில்லி லிட்டர் அளவு கொண்ட 30 வெளிமாநில மதுபாட்டில்களும் மற்றும் 750 மில்லி லிட்டர் கொண்ட மூன்று பாடல்களும் இருந்ததை கைப்பற்றினர். விசாரணையில் நெய்விளக்கு சேர்ந்த சத்தியசீலன் (வயது 22) வேதாரண்யம் கொள்ளித்தீவு பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் (25) என்பது தெரியவந்தது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாழ்க்கையில் விரக்தியடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 55) ஆசாரி. கடந்த 4 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரும் அவதிபட்ட மாரிமுத்து சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்பு தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களை கடுமையாக பாதிப்புக்கு ஆளாக்கி உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    நாகை:

    நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது. தொடர்ந்து வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பெட்ரோல் விலையேற்றத்தால் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களை கடுமையாக பாதிப்புக்கு ஆளாக்கி உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 40). இவர், நாகையில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருணமாகி சுபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ராஜேசுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 12-ந் தேதி சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு துணையாக அவரது மனைவி சுபா உடன் இருந்தார்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சுபா கதறி அழுதார்.

    அப்போது அவர் கூறுகையில், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    அதைத்தொடர்ந்து ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்ய ஆக்சிஜன் நிறுத்தப்பட்டது. ஆக்சிஜனை நிறுத்தியதால் தான் எனது கணவர் ராஜேஷ் இறந்தார் என்று அவர் பரபரப்பு புகார் தெரிவித்தார். தகவல் அறிந்து ராஜேசின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள், ஆக்சிஜனை நிறுத்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சென்று மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்தி வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சிக்கல்:

    கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் அங்கிருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சாராயம் மற்றும் மதுபானங்கள் மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வருவதை தடுக்க நாகை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பு, ஆழியூர் பிரிவு சாலை, கானூர் சோதனை சாவடி பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவாரூர், இலவங்கார்குடி, மேலத்தெருவை சேர்ந்த செல்வம்(வயது48), கொரடாச்சேரி, வெள்ளை மதகு பகுதியை சேர்ந்த குமார்(42), ஆழியூர் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த பாலகுரு(34), அந்தனப்பேட்டை பெரிய மேலத்தெரு பகுதியை சேர்ந்த சந்திரன்(35), வலிவலம், கடலாகுடியை சேர்ந்த கண்ணன்(35), எடையூர் சங்கேந்தி ஓவளூரை சேர்ந்த அரவிந்தன்(25), நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூரை சேர்ந்த ஆரோக்கியதாஸ்(40), கோட்டூர், அபிஷேக கட்டளை தெருவை சேர்ந்த வினோத் (36) ஆகிய 8 பேரும் மோட்டார் சைக்கிள்களில் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களி்டம் இருந்து சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×