search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 8 பேர் கைது - மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்தி வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சிக்கல்:

    கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் அங்கிருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சாராயம் மற்றும் மதுபானங்கள் மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வருவதை தடுக்க நாகை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பு, ஆழியூர் பிரிவு சாலை, கானூர் சோதனை சாவடி பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவாரூர், இலவங்கார்குடி, மேலத்தெருவை சேர்ந்த செல்வம்(வயது48), கொரடாச்சேரி, வெள்ளை மதகு பகுதியை சேர்ந்த குமார்(42), ஆழியூர் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த பாலகுரு(34), அந்தனப்பேட்டை பெரிய மேலத்தெரு பகுதியை சேர்ந்த சந்திரன்(35), வலிவலம், கடலாகுடியை சேர்ந்த கண்ணன்(35), எடையூர் சங்கேந்தி ஓவளூரை சேர்ந்த அரவிந்தன்(25), நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூரை சேர்ந்த ஆரோக்கியதாஸ்(40), கோட்டூர், அபிஷேக கட்டளை தெருவை சேர்ந்த வினோத் (36) ஆகிய 8 பேரும் மோட்டார் சைக்கிள்களில் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களி்டம் இருந்து சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×