என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு மருத்துவ உதவி மனநல ஆலோசனை காவல் உதவி சட்ட உதவி தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கிய அவர்களைப் பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சகி அம்மா சேவை மையம் செயல்படுகிறது. 

    இங்கு பணிபுரிய நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாகை மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலகத்தில் தங்கள் சுய விவரங்களுடன் தெரிவிக்கப்படுகிறது. 

    பதவி வழக்கு பணியாளர் 2 பேர் இடம் 4 வயது வரம்பு 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும். உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

     தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம், சிறப்பு ஊதியம் ரூ.3000. பல்நோக்கு உதவியாளர் பணியிடம் 1- கல்வித்தகுதி 8-வது, 10-வது தேர்ச்சி, தோல்வி. வயதுவரம்பு 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்த பெண் பணியாக இருக்க வேண்டும். உள்ளூரை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். 

    தொகுப்பு ஊதியம் ரூ.6400. பாதுகாவலர் பணியிடம் ஒன்று கல்வித் தகுதி 8&ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி தோல்வி. வயதுவரம்பு 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உள்ளூரை சேர்ந்தவராக வேண்டும். தொகுப்பு ஊதியம் ரூ.10 ஆயிரம். விருப்பமுள்ளவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலகம், நீலா தெற்கு வீதி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஆலிவ்ரிட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கோடியக்கரை கடலில் விட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் பொரிப்பகம் கோடியக்கரை வனத்துறை மூலம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
     
    இந்த ஆண்டு கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் 
    132 ஆமைகள் இட்டு சென்ற 14,322 முட்டைகளை வனத்துறையினர் பத்திரமாக எடுத்து முட்டை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். 

    அதில் கடந்த வாரம் மூன்று ஆமைகள் இட்ட 313 முட்டைகளிடம் இருந்து வெளிவந்த ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகளை கோடியக்கரை வனத்துறையினர் பாதுகாப்பாக கோடியக்கரை கடலில் விட்டனர்.
     
    இன்று 2-வது முறையாக 375 ஆமை குஞ்சுகளை திருச்சி சரக ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வன உயிரின காவலர் யோகேஷ் குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் கடலில் விட்டனர்.
    பொரவச்சேரியில் உள்ள சொர்ணகாளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த பொரவச்சேரியில் உள்ள சொர்ணகாளியம்மன் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம் நடைபெற்றது. 

    அதனைத்தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகபூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. 

    அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
    நாகை மாவட்ட போலீசார் சார்பில் நூலகம் திறக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காவல்துறையின் சார்பில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மத்திய மண்டல 
    ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி நூலகத்தை திறந்து வைத்தார். மத்திய மண்டலத்தில் முதன்முறையாக நாகை மாவட்ட ஆயுதப்படையில் தான் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

    பொதுமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேலும் கிராமப்புற குழந்தைகள் கல்வியறிவில் சிறந்த நிலையை அடைய இது போன்ற நூலகங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்றார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவில் விழாவிற்காக வெளியூர் சென்றுள்ளனர்.

    பின்னர் இன்று காலை சொந்த ஊர் திரும்பிய அவர்கள் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.

    நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மின்விசிறியை போட்டு காற்று வாங்கிவிட்டு சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கீழ்வேளூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவில் விழாவிற்காக வெளியூர் சென்றுள்ளனர்.

    பின்னர் இன்று காலை சொந்த ஊர் திரும்பிய அவர்கள் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.

    நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மின்விசிறியை போட்டு காற்று வாங்கிவிட்டு சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கீழ்வேளூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    திருமருகல் ஒன்றியத்தில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. குறைதீர்ப்பு முகாம் நடத்தி மக்களிடம் மனுக்கள் பெற்றார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில், முகமதுஷா நவாஸ் எம்.எல்.ஏ,
    குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி மக்களிடம் கோரிக்கை மனுக்களை
    பெற்று வருகிறார்.

    அந்த வகையில், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டாரவடை, போலகம், திருப்புகளூர், ஏனங்குடி, புத்தகரம், கொங்குராயநல்லூர், அம்பல், ஏர்வாடி, இடையாத்தங்குடி, ஆதலையூர், வடகரை, கோட்டூர், திருக்கண்ணபுரம், உத்தமசோழபுரம், நரிமணம், மருங்கூர், நெய்குப்பை, கீழப்பூதனூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
    நாகை அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தின் அருகேயுள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் உடல் சிதறிய நிலையில் கிடப்பதாக இன்று காலை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சென்னை&காரைக்கால் கம்பன் விரைவு ரெயிலில் அடிபட்டு 25 வயதுடைய இளைஞர் கை, கால் தலை சிதறிய நிலையில், உயிரிழந்தது தெரிய வந்தது.

    சடலத்தை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த ராஜு தலைமையிலான ரெயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குரவப்புலம் பள்ளியில் 1&ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிலம்ப போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலம் சீதாலெட்சுமி தொடக்க பள்ளியின் 1&ம் வகுப்பு மாணவன் ரியாத். இவர் திருவாரூரில் நடந்த நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் சிலம்பம் சுழற்றும் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்து வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளியின் செயலர் கிரிதரன் மாணவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் பபிதா பானு, உதவி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி உட்பட பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், கல்விக்குழுவாளர்கள் மற்றும் மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.
    வேதாரண்யம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் தீயில் கருகி வாலிபர் பலியானார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாணிக்கேட்டகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(32). இவர் சிறுவயது முதல் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். 

    இவரது தாய், தந்தை ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது சித்தி அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவர் மட்டும் தனியாக கூரை வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 வருடத்திற்கு முன்பு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மாலை திடீரென சங்கர் இருந்த வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். 

    ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து விட்டது. அப்போது வீட்டின் உள்ளே இருந்த சங்கர் தீயில் கருகி பலியானார். 

    சம்பவ  இடத்திற்கு வந்த வாய்மேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    வேளாங்கண்ணியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.


    உலக மகளிர்தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

    அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் 
    வேல்டு விஷன் இந்தியா சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள்
    பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 
    பெண்களுக்கு ஏற்ற சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு 
    ஏற்படுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து வாழ்வாதார வளர்ச்சியில் மேம்பட்ட ஒவ்வொரு பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழை 
    மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர், சார்பு நீதிபதி சுரேஷ்குமார் வேர்ல்டு விஷன் இந்தியாவின் துணை இயக்குனர் சாம்சங் பந்து மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
    வேதாரண்யம் அருகே 100 ஆண்டுகளுக்குப் பிறகு மேலமறைக்காடார் சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் 
    கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மேலமறைக்காடார் 
    கோவிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 
    கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி விக்னேஸ்வர 
    பூஜை, கணபதி, நவக்கிரக, லெட்சுமி ஹோமத்துடன் 
    யாகசாலை பூஜை துவங்கி நடைபெற்றது.

    இன்று காலை 4ம் கால  யாகசால பூஜைகள் நடைபெற்று. 
    புனிதநீர் அடங்கிய  கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து 
    சிவாச்சாரியர்கள் கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, 
    கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் 
    நடைபெற்றது. பின் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு 
    சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் திரளான 
    பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
    ×