என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள்.

    தகுதிச்சான்று புதுப்பிக்காத வாகனங்கள் பறிமுதல்

    நாகையில் தகுதிச்சான்று புதுப்பிக்காத 14 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை எல்லைக்கு உட்பட்ட ஆட்டோ, சரக்கு வாகனங்கள், மேக்சிகேப் வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி ஆகியோர் அடங்கிய குழு திடீர் சோதனைகள் மற்றும் தணிக்கை செய்தனர்.

    அப்போது அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் தகுதிச் சான்று, காப்பு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்கப்படும்.

    வாகனங்கள் அனுமதிக்க புறம்பாக அதிக நபர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ என மொத்தம் 14 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. 14 வாகனங்களுக்கும் அபராதத் தொகை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் விதிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×